அத்தியாயம்: 54, பாடம்: 16, ஹதீஸ் எண்: 5144

وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا إِسْحَاقُ، – يَعْنِي ابْنَ سُلَيْمَانَ – أَخْبَرَنَا حَنْظَلَةُ، قَالَ سَمِعْتُ سَالِمًا، يَقُولُ سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ :‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُشِيرُ بِيَدِهِ نَحْوَ الْمَشْرِقِ وَيَقُولُ ‏”‏ هَا إِنَّ الْفِتْنَةَ هَا هُنَا هَا إِنَّ الْفِتْنَةَ هَا هُنَا ‏”‏ ‏.‏ ثَلاَثًا ‏”‏ حَيْثُ يَطْلُعُ قَرْنَا الشَّيْطَانِ ‏”‏ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது கரத்தால் கிழக்குத் திசையை நோக்கி சைகை செய்து, “நினைவில் கொள்ளுங்கள்: குழப்பம் அங்கிருந்துதான் தோன்றும். நினைவில் கொள்ளுங்கள் குழப்பம் அங்கிருந்துதான் தோன்றும்” என்று மூன்று முறை கூறிவிட்டு, “ஷைத்தானின் கொம்புகள் உதயமாகும் இடத்திலிருந்து’ என்று கூறியதைக் கேட்டேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

Share this Hadith: