அத்தியாயம்: 54, பாடம்: 19, ஹதீஸ் எண்: 5179

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، – وَاللَّفْظُ لِعُثْمَانَ – قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ عُثْمَانُ حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ :‏

كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَمَرَرْنَا بِصِبْيَانٍ فِيهِمُ ابْنُ صَيَّادٍ فَفَرَّ الصِّبْيَانُ وَجَلَسَ ابْنُ صَيَّادٍ فَكَأَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَرِهَ ذَلِكَ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ تَرِبَتْ يَدَاكَ أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ ‏”‏ ‏.‏ فَقَالَ لاَ ‏.‏ بَلْ تَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ ‏.‏ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ذَرْنِي يَا رَسُولَ اللَّهِ حَتَّى أَقْتُلَهُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِنْ يَكُنِ الَّذِي تَرَى فَلَنْ تَسْتَطِيعَ قَتْلَهُ ‏”‏

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றோம். அவர்களிடையே இப்னு ஸய்யாதும் இருந்தான். (எங்களைக் கண்டதும்) சிறுவர்கள் ஓடிவிட்டனர். இப்னு ஸய்யாத் (மட்டும்) அப்படியே உட்கார்ந்திருந்தான். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வெறுத்ததைப் போன்றிருந்தது. ஆகவே, அவனிடம், “உன்னை நீ காப்பாற்றிக் கொள்வதற்கு, நான் அல்லாஹ்வின் தூதர் என நீ உறுதிமொழி அளிக்கிறாயா?‘ என்று கேட்டார்கள். அதற்கு அவன், “இல்லை; அல்லாஹ்வின் தூதர் நான் என நீர் சாட்சியமளிக்கிறீரா?” என்று திருப்பிக் கேட்டான்.

அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! என்னை அனுமதியுங்கள். நான் அவனைக் கொன்றுவிடுகின்றேன்” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “நீர் கருதக்கூடிய ஒருவன்(தஜ்ஜால்) ஆக இவன் இருந்தால், உம்மால் ஒருபோதும் அவனைக் கொல்ல முடியாது. (அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டவர் ஈஸா (அலை) அவர்களே)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

Share this Hadith: