அத்தியாயம்: 54, பாடம்: 19, ஹதீஸ் எண்: 5180

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَأَبُو كُرَيْبٍ – وَاللَّفْظُ لأَبِي كُرَيْبٍ – قَالَ ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا وَقَالَ الآخَرَانِ أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ :‏

كُنَّا نَمْشِي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَمَرَّ بِابْنِ صَيَّادٍ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ قَدْ خَبَأْتُ لَكَ خَبِيئًا ‏”‏ ‏.‏ فَقَالَ دُخٌّ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ اخْسَأْ فَلَنْ تَعْدُوَ قَدْرَكَ ‏”‏ ‏.‏ فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ دَعْنِي فَأَضْرِبَ عُنُقَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ دَعْهُ فَإِنْ يَكُنِ الَّذِي تَخَافُ لَنْ تَسْتَطِيعَ قَتْلَهُ ‏”

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்துசென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இப்னு ஸய்யாதைக் கடந்து சென்றார்கள். அவனிடம், “நான் உனக்காக (என் மனத்திற்குள்) ஒன்றை மறைத்துவைத்துள்ளேன் (அது என்ன?)” என்று கேட்டார்கள். அதற்கு அவன் “துக்“ என்று சொன்னான். (அதாவது “துகான்“ எனும் (44ஆவது) அத்தியாயத்தை “துக்“ என அரைகுறையாகச் சொன்னான்) அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “தூரப்போ! உன்னால் உனது எல்லையைத் தாண்ட முடியாது” என்று சொன்னார்கள்.

அப்போது உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! என்னை அனுமதியுங்கள். நான் அவனது கழுத்தை வெட்டிவிடுகின்றேன்” என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “அவனை விட்டுவிடுக!. நீர் அஞ்சுகின்ற ஒருவன் (தஜ்ஜால்) ஆக இவன் இருந்தால், இவனைக் கொல்ல உம்மால் முடியாது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

Share this Hadith: