அத்தியாயம்: 54, பாடம்: 19, ஹதீஸ் எண்: 5189

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ قَالَ :‏

لَقِيَ ابْنُ عُمَرَ ابْنَ صَائِدٍ فِي بَعْضِ طُرُقِ الْمَدِينَةِ فَقَالَ لَهُ قَوْلاً أَغْضَبَهُ فَانْتَفَخَ حَتَّى مَلأَ السِّكَّةَ فَدَخَلَ ابْنُ عُمَرَ عَلَى حَفْصَةَ وَقَدْ بَلَغَهَا فَقَالَتْ لَهُ رَحِمَكَ اللَّهُ مَا أَرَدْتَ مِنِ ابْنِ صَائِدٍ أَمَا عَلِمْتَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِنَّمَا يَخْرُجُ مِنْ غَضْبَةٍ يَغْضَبُهَا ‏”‏

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), இப்னு ஸாயிதை மதீனாவின் சாலைகளில் ஒன்றில் சந்தித்தார்கள். அவர்கள் அவனிடம் ஏதோ சொல்ல அவன் கோபப்பட்டான். உடனே அவனது உடல், தெருவையே அடைத்துக்கொள்ளும் அளவுக்கு(வீங்கி)ப் புடைத்தது. பின்னர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (தம் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். நடந்த செய்தி முன்பே ஹஃப்ஸாவுக்குத் தெரிந்திருந்தது.

அப்போது ஹஃப்ஸா (ரலி), “அல்லாஹ் உமக்கு அருள் புரியட்டும்! நீர் இப்னு ஸாயிதிடமிருந்து என்ன எதிர்பார்த்தீர்?” என்று கேட்டுவிட்டு, “உமக்குத் தெரியுமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அவன் (தஜ்ஜால்) வெளிப்படும்போது கோப மிகைப்புடனே வெளிப்படுவான்’ என்று கூறியதை நீர் அறியவில்லையா? (ஒருகால் இப்னு ஸய்யாதே தஜ்ஜாலாக இருந்தால் என்னவாயிருக்கும்!)” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஹஃப்ஸா (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)

Share this Hadith: