அத்தியாயம்: 54, பாடம்: 7, ஹதீஸ் எண்: 5124

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالاَ حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ عَنْ مُحَمَّدٍ، قَالَ قَالَ جُنْدُبٌ :‏ ‏

جِئْتُ يَوْمَ الْجَرَعَةِ فَإِذَا رَجُلٌ جَالِسٌ فَقُلْتُ لَيُهَرَاقَنَّ الْيَوْمَ هَا هُنَا دِمَاءٌ ‏.‏ فَقَالَ ذَاكَ الرَّجُلُ كَلاَّ وَاللَّهِ ‏.‏ قُلْتُ بَلَى وَاللَّهِ ‏.‏ قَالَ كَلاَّ وَاللَّهِ ‏.‏ قُلْتُ بَلَى وَاللَّهِ ‏.‏ قَالَ كَلاَّ وَاللَّهِ إِنَّهُ لَحَدِيثُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَدَّثَنِيهِ ‏.‏ قُلْتُ بِئْسَ الْجَلِيسُ لِي أَنْتَ مُنْذُ الْيَوْمِ تَسْمَعُنِي أُخَالِفُكَ وَقَدْ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلاَ تَنْهَانِي ثُمَّ قُلْتُ مَا هَذَا الْغَضَبُ فَأَقْبَلْتُ عَلَيْهِ وَأَسْأَلُهُ فَإِذَا الرَّجُلُ حُذَيْفَةُ ‏‏

‘அல்ஜரஆ’ தினத்தன்று நான் (கூஃபாவில் ஓரிடத்திற்கு) வந்தேன். அப்போது, அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார்.

நான், “இன்றைய தினம் இங்கு இரத்த ஆறு ஓடப்போகிறது” என்று சொன்னேன். அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை; (இரத்த ஆறு ஓடாது)” என்று சொன்னார். நான், “ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! (இரத்த ஆறு ஓடும்)” என்றேன். அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை (ஓடாது)” என்றார். நான், “ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக (இரத்த ஆறு ஓடும்)” என்றேன். அவர் (இறுதியக), “அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை (இரத்த ஆறு ஓடாது). இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் கூறினார்கள்” என்றார்.

நான், “இன்று முதல் நீர் எனக்கு ஒரு தீய நண்பர் ஆவீர். நான் உமக்கு மாறாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருக்கின்றீர். நீர் இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றிருந்தும் (ஆரம்பத்திலேயே) என்னை நீர் தடுக்கவில்லையே?” என்று சொன்னேன். பிறகு ‘ஏனிந்தக் கோபம்?’ என்று (எனக்கு நானே) கூறிக்கொண்டு, அவரை நோக்கிச் சென்று அவரைப் பற்றி விசாரித்தேன். அவர் ஹுதைஃபா (ரலி) அவர்களாவார்கள்.

அறிவிப்பாளர் : ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

‘அல்ஜரஆ நாள்‘ என்பது உஸ்மான் (ரலி) நியமனம் செய்த ஆளுநரை, கூஃபாவாசிகள் திருப்பியனுப்பிய நாளாகும்.

Share this Hadith: