حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَة:
{ وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا} الآيَةَ قَالَتْ أُنْزِلَتْ فِي الْمَرْأَةِ تَكُونُ عِنْدَ الرَّجُلِ فَتَطُولُ صُحْبَتُهَا فَيُرِيدُ طَلاَقَهَا فَتَقُولُ لاَ تُطَلِّقْنِي وَأَمْسِكْنِي وَأَنْتَ فِي حِلٍّ مِنِّي . فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ
“ஒரு பெண், தன் கணவனிடமிருந்து ஏற்படும் பிணக்கை, அல்லது புறக்கணிப்பைப் பற்றி அஞ்சினால்…” எனும் (4:128) இறைவசனம், ஒரு கணவனின் உறவில் நீண்ட காலம் இருந்த ஒரு பெண் விஷயத்தில் அருளப்பெற்றது. அவளை (அவளுடைய முதுமை போன்ற காரணத்தால்) அவர் விவாகரத்துச் செய்து(விட்டு மற்றொருத்தியை மணந்து)கொள்ள விரும்பினார்.
இந்நிலையில் அவள், “என்னை மணவிலக்குச் செய்யாதீர்கள். என்னை (உங்கள் மனைவியாகவே) இருக்க விடுங்கள். என் (தாம்பத்திய உரிமைகள்) விஷயத்தில் நான் விட்டுக்கொடுத்து விடுகின்றேன்” என்று கூறினாள். அப்போதுதான் இந்த வசனம் அருளப்பெற்றது.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)