حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ :
فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ { وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا} قَالَتْ نَزَلَتْ فِي الْمَرْأَةِ تَكُونُ عِنْدَ الرَّجُلِ فَلَعَلَّهُ أَنْ لاَ يَسْتَكْثِرَ مِنْهَا وَتَكُونُ لَهَا صُحْبَةٌ وَوَلَدٌ فَتَكْرَهُ أَنْ يُفَارِقَهَا فَتَقُولُ لَهُ أَنْتَ فِي حِلٍّ مِنْ شَأْنِي
“ஒரு பெண், தன் கணவனிடமிருந்து ஏற்படும் பிணக்கை, அல்லது புறக்கணிப்பைப் பற்றி அஞ்சினால்…” (4:128) எனும் இறை வசனம், ஒருவரின் மனைவியாக இருந்த ஒரு பெண் தொடர்பாக அருளப்பெற்றது. அவளிடம் (மனைவியெனும்) உறவும் (அவருடைய) குழந்தையும் இருந்தது.
இந்நிலையில் (முதுமை நோய் போன்ற காரணங்களால்) அவளிடம் கணவர் (தாம்பத்திய உறவுக்காக) அதிகமாக வந்துபோகாமல் இருப்பார்.
இந்நிலையில், அவர் தன்னை மணவிலக்குச் செய்துவிடுவதை விரும்பாமல் அவள், “என் (தாம்பத்திய உரிமைகள்) விஷயத்தில் உங்களுக்கு விட்டுக் கொடுத்துவிடுகின்றேன்” என்று கூறிவிடுவாள். (இவ்வாறு சமரசம் செய்துகொள்வதில் தவறில்லை என இவ்வசனம் கூறுகின்றது)
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)