அத்தியாயம்: 56, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5320

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ عَبْدٌ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا أَبُو عُمَيْسٍ، عَنْ عَبْدِ الْمَجِيدِ بْنِ سُهَيْلٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، قَالَ :‏

قَالَ لِيَ ابْنُ عَبَّاسٍ تَعْلَمُ – وَقَالَ هَارُونُ تَدْرِي – آخِرَ سُورَةٍ نَزَلَتْ مِنَ الْقُرْآنِ نَزَلَتْ جَمِيعًا قُلْتُ نَعَمْ ‏.‏ ‏{‏ إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ‏}‏ قَالَ صَدَقْتَ ‏.‏


وَفِي رِوَايَةِ ابْنِ أَبِي شَيْبَةَ تَعْلَمُ أَىُّ سُورَةٍ ‏.‏ وَلَمْ يَقُلْ آخِرَ ‏

وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا أَبُو عُمَيْسٍ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ وَقَالَ آخِرَ سُورَةٍ وَقَالَ عَبْدُ الْمَجِيدِ وَلَمْ يَقُلِ ابْنِ سُهَيْلٍ

என்னிடம் இப்னு அப்பாஸ் (ரலி), “குர்ஆனில் இறுதியாக அருளப்பெற்ற முழு அத்தியாயம் எதுவென உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்; அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து விட்டால்… என்று தொடங்கும் (110ஆவது) அத்தியாயமே அது” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “உண்மை உரைத்தீர்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்)


குறிப்புகள் :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “எந்த அத்தியாயம் (குர்ஆனில் முழுமையாக) அருளப்பெற்றது என உங்களுக்குத் தெரியுமா?” என்று வினவியதாக இடம்பெற்றுள்ளது. “இறுதியாக” எனும் சொல் இடம்பெறவில்லை.

எனினும், அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில், “இறுதியாக அருளப்பெற்ற அத்தியாயம்” என இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

Share this Hadith: