அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1112

و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِيسَى بْنُ حَفْصِ بْنِ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏ ‏صَحِبْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏فِي طَرِيقِ ‏ ‏مَكَّةَ ‏ ‏قَالَ فَصَلَّى لَنَا الظُّهْرَ رَكْعَتَيْنِ ثُمَّ أَقْبَلَ وَأَقْبَلْنَا مَعَهُ حَتَّى جَاءَ ‏ ‏رَحْلَهُ ‏ ‏وَجَلَسَ وَجَلَسْنَا مَعَهُ فَحَانَتْ مِنْهُ الْتِفَاتَةٌ نَحْوَ حَيْثُ صَلَّى فَرَأَى نَاسًا قِيَامًا فَقَالَ مَا يَصْنَعُ هَؤُلَاءِ قُلْتُ ‏ ‏يُسَبِّحُونَ ‏ ‏قَالَ لَوْ كُنْتُ مُسَبِّحًا لَأَتْمَمْتُ صَلَاتِي ‏

يَا ابْنَ أَخِي إِنِّي ‏ ‏صَحِبْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي السَّفَرِ فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُ اللَّهُ وَصَحِبْتُ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُ اللَّهُ وَصَحِبْتُ ‏ ‏عُمَرَ ‏ ‏فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُ اللَّهُ ثُمَّ صَحِبْتُ ‏ ‏عُثْمَانَ ‏ ‏فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُ اللَّهُ وَقَدْ قَالَ اللَّهُ ‏‏لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ

நான் (என் தந்தையின் சகோதரர்) இப்னு உமர் (ரலி) அவர்களுடன் மக்கா செல்லும் பாதையில் (ஒரு பயணத்தில்) இருந்தபோது இப்னு உமர் (ரலி), லுஹ்ருத் தொழுகையை எங்களுக்கு இரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். பிறகு தமது ஓய்விடம் நோக்கிச் சென்றார்கள். நாங்களும் அவர்களுடன் சென்றோம்; அவர்கள் அமர்ந்தபோது அவர்களுடன் நாங்களும் அமர்ந்தோம். அப்போது தாம் தொழுதுவிட்டு வந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தார்கள். அங்கு சிலர் நின்றுகொண்டிருப்பதைக் கண்டு, “அவர்கள் என்ன செய்கிறார்கள்?” என்று கேட்டார்கள். “கூடுதல் (ஸுன்னத்) தொழுகைகளைத் தொழுது கொண்டிருக்கிறார்கள்” என்று நான் பதிலளித்தேன். “கூடுதல் தொழுகைகளை தொழுபவனாக நானிருந்தால் எனது (கடமையான) தொழுகையை (பயணத்தில்) நிறைவாகத் தொழுத்திருப்பேனே! என் சகோதரர் மகனே! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணத்தில் இருந்திருக்கிறேன். அவர்களது உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை பயணத்தின்போது (கடமையான) இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாக (ஸுன்னத் தொழுகைகளை) அவர்கள் தொழுததில்லை.

நான் அபூபக்ரு (ரலி) அவர்களுடனும் (பயணத்தில்) இருந்திருக்கிறேன். அவர்களது உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை அவர்களும் (பயணத்தின்போது) இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாகத் தொழமாட்டார்கள். நான் உமர் (ரலி) அவர்களுடனும் (பயணத்தில்) இருந்திருக்கிறேன். அவர்களது உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை அவர்களும் (பயணத்தின்போது) இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாகத் தொழமாட்டார்கள். பிறகு நான் உஸ்மான் (ரலி) அவர்களுடனும் (பயணத்தில்) இருந்திருக்கிறேன். அவர்களது உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை அவர்களும் (பயணத்தின்போது) இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாகத் தொழமாட்டார்கள். ‘அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி இருக்கிறது’ (33:21) என்று அல்லாஹ் கூறுகின்றான்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஹஃப்ஸிப்னு ஆஸிம் பின் உமர் பின் அல்கத்தாப் (ரஹ்)