அத்தியாயம்: 6, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1177

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ‏ ‏قَالَ ‏

‏مَا أَخْبَرَنِي أَحَدٌ أَنَّهُ رَأَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي الضُّحَى إِلَّا ‏ ‏أُمُّ هَانِئٍ ‏ ‏فَإِنَّهَا حَدَّثَتْ أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَخَلَ بَيْتَهَا يَوْمَ فَتْحِ ‏ ‏مَكَّةَ ‏ ‏فَصَلَّى ثَمَانِي رَكَعَاتٍ مَا رَأَيْتُهُ صَلَّى صَلَاةً قَطُّ أَخَفَّ مِنْهَا غَيْرَ أَنَّهُ كَانَ يُتِمُّ الرُّكُوعَ وَالسُّجُودَ ‏

‏وَلَمْ يَذْكُرْ ‏ ‏ابْنُ بَشَّارٍ ‏ ‏فِي حَدِيثِهِ قَوْلَهُ قَطُّ

நபி (ஸல்) முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுததைப் பார்த்தாக உம்முஹானீ (ரலி) அவர்களைத் தவிர வேறெவரும் எனக்கு அறிவிக்கவில்லை. “நபி (ஸல்) மக்கா வெற்றிகொள்ளப்பட்ட நாளில் எனது இல்லத்திற்கு வந்து எட்டு ரக்அத்கள் தொழுதார்கள்; அதைவிடச் சுருக்கமாக வேறு எந்தத் தொழுகையையும் அவர்கள் தொழுததை நான் ஒருபோதும் கண்டதில்லை. ஆயினும், ருகூஉவையும் ஸஜ்தாவையும் பரிபூரணமாகச் செய்தார்கள்’ என உம்முஹானீ (ரலி) அறிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : உம்முஹானி (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா

குறிப்பு :

இப்னு பஷ்ஷார் (ரஹ்) வழி அறிவிப்பில் “ஒருபோதும்” எனும் சொல் இடம்பெறவில்லை.

Share this Hadith:

Leave a Comment