அத்தியாயம்: 6, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1178

‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ ‏ ‏قَالَ ‏

‏سَأَلْتُ وَحَرَصْتُ عَلَى أَنْ أَجِدَ أَحَدًا مِنْ النَّاسِ يُخْبِرُنِي أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَبَّحَ ‏ ‏سُبْحَةَ ‏ ‏الضُّحَى فَلَمْ أَجِدْ أَحَدًا يُحَدِّثُنِي ذَلِكَ غَيْرَ أَنَّ ‏ ‏أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ ‏ ‏أَخْبَرَتْنِي أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَتَى بَعْدَ مَا ارْتَفَعَ النَّهَارُ يَوْمَ الْفَتْحِ فَأُتِيَ بِثَوْبٍ فَسُتِرَ عَلَيْهِ فَاغْتَسَلَ ثُمَّ قَامَ فَرَكَعَ ‏ ‏ثَمَانِيَ رَكَعَاتٍ لَا أَدْرِي أَقِيَامُهُ فِيهَا أَطْوَلُ أَمْ رُكُوعُهُ أَمْ سُجُودُهُ كُلُّ ذَلِكَ مِنْهُ مُتَقَارِبٌ قَالَتْ فَلَمْ أَرَهُ ‏ ‏سَبَّحَهَا ‏ ‏قَبْلُ وَلَا بَعْدُ ‏

‏قَالَ ‏ ‏الْمُرَادِيُّ ‏ ‏عَنْ ‏ ‏يُونُسَ ‏ ‏وَلَمْ يَقُلْ أَخْبَرَنِي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ளுஹாத் தொழுததாக அறிவிக்கும் யாரேனும் ஒருவரை நான் கண்டால் அவரிடம் அதைப் பற்றிக் கேட்க வேண்டும் எனப் பேராவல் கொண்டிருந்தேன். ஆனால், உம்முஹானி பின்த் அபூதாலிப் (ரலி) அவர்களைத் தவிர அவ்வாறு அறிவிக்கும் எவரும் எனக்குக் கிடைக்கவில்லை. உம்முஹானீ (ரலி) எனக்கு அறிவித்தார்:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்கா வெற்றி நாளில் முற்பகல் (ளுஹா) நேரத்தில் (எனது இல்லத்திற்கு) வந்தார்கள்; அவர்களுக்காக ஒரு துணி கொண்டுவரப்பட்டு அவர்களைச் சுற்றித் திரையிடப்பட்டது; அவர்கள் குளித்தார்கள். பிறகு (தொழுகைக்குத் தயாராகி) நின்று எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். அத்தொழுகையில் அவர்களது நிற்றல் மிக நீளமானதாக இருந்ததா; ருகூஉ, அல்லது சஜ்தா மிக நீளமானதாக இருந்ததா? என்று எனக்குத் தெரியவில்லை. இவற்றில் ஒவ்வொன்றுமே கிட்டத்தட்ட ஒரே அளவிலேயே அமைந்திருந்தன. ஆனால், அவர்கள் அதற்கு முன்போ அதற்குப் பின்போ ளுஹாத் தொழுததை நான் கண்டதில்லை”.

அறிவிப்பாளர் : உம்முஹானி (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் பின் நவ்ஃபல் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment