و حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ حَدَّثَنَا هَمَّامٌ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ أَبِي مِجْلَزٍ قَالَ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ عَنْ الْوِتْرِ فَقَالَ :
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ رَكْعَةٌ مِنْ آخِرِ اللَّيْلِ
وَسَأَلْتُ ابْنَ عُمَرَ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ رَكْعَةٌ مِنْ آخِرِ اللَّيْلِ
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வித்ருத் தொழுகை பற்றி வினவினேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(வித்ரு என்பது) இரவின் இறுதிப் பகுதியில் ஒரு ரக்அத்தாகும்” என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று விடையளித்தார்கள். அவ்வாறே இப்னு உமர் (ரலி) அவர்களிடமும் வினவினேன். அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இரவின் இறுதியில் (தொழப்படும்) ஒரு ரக்அத் ஆகும்” என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகிய இருவர் வழியாக அபூமிஜ்லஸ் (ரஹ்)