அத்தியாயம்: 6, பாடம்: 19, ஹதீஸ் எண்: 1252

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عُقْبَةَ بْنَ حُرَيْثٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏يُحَدِّثُ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏صَلَاةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى فَإِذَا رَأَيْتَ أَنَّ الصُّبْحَ يُدْرِكُكَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ ‏


‏فَقِيلَ ‏ ‏لِابْنِ عُمَرَ ‏ ‏مَا مَثْنَى مَثْنَى قَالَ أَنْ تُسَلِّمَ فِي كُلِّ رَكْعَتَيْنِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகும்; நீங்கள் ஸுப்ஹு நேரத்தை அடைந்துவிட்டதாகக் கண்டால் ஒரு ரக்அத் வித்ருத் தொழுதுகொள்ளுங்கள்!” என்று சொன்னதாக இப்னு உமர் (ரலி) கூறினார்கள். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “இரண்டிரண்டு ரக்அத்கள் என்பதற்கு என்ன பொருள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ஒவ்வோர் இரண்டு ரக்அத்திலும் ஸலாம் கொடுப்பதாகும்” என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக உக்பா பின் ஹுரைஸ் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment