و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ عُمَرَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ أَنَّهُ قَالَ :
كُنْتُ أَسِيرُ مَعَ ابْنِ عُمَرَ بِطَرِيقِ مَكَّةَ قَالَ سَعِيدٌ فَلَمَّا خَشِيتُ الصُّبْحَ نَزَلْتُ فَأَوْتَرْتُ ثُمَّ أَدْرَكْتُهُ فَقَالَ لِي ابْنُ عُمَرَ أَيْنَ كُنْتَ فَقُلْتُ لَهُ خَشِيتُ الْفَجْرَ فَنَزَلْتُ فَأَوْتَرْتُ فَقَالَ عَبْدُ اللَّهِ أَلَيْسَ لَكَ فِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُسْوَةٌ فَقُلْتُ بَلَى وَاللَّهِ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ عَلَى الْبَعِيرِ
நான் (ஓர் இரவில்) மக்கா செல்லும் சாலையில் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் பயணித்துக் கொண்டிருந்தேன். சுப்ஹு நேரம் (நெருங்கிவிட்டது) குறித்து நான் அஞ்சி, (எனது வாகனத்திலிருந்து) இறங்கி வித்ருத் தொழுதேன். பிறகு இப்னு உமர் (ரலி) அவர்களுடன் போய்ச் சேர்ந்துகொண்டபோது, “(இவ்வளவு நேரம்) எங்கே இருந்தீர்?” என்று அவர்கள் கேட்டார்கள். நான், “சுப்ஹு நேரம் (நெருங்கிவிட்டது) குறித்து அஞ்சினேன். எனவே (வாகனத்திலிருந்து) இறங்கி வித்ருத் தொழுதேன்” என்று கூறினேன். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமக்கு அழகிய முன்மாதிரி இல்லையா?” என்று இப்னு உமர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நான், “ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக (உள்ளது)!” என்றேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒட்டகத்தின் மீதமர்ந்து வித்ருத் தொழுதிருக்கின்றார்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஸயீத் பின் யஸார் (ரஹ்)