அத்தியாயம்: 6, பாடம்: 47, ஹதீஸ் எண்: 1358

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏قَالَ ‏ ‏جَاءَ رَجُلٌ يُقَالُ لَهُ ‏ ‏نَهِيكُ بْنُ سِنَانٍ ‏ ‏إِلَى ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏فَقَالَ يَا ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏كَيْفَ تَقْرَأُ هَذَا الْحَرْفَ أَلِفًا تَجِدُهُ أَمْ يَاءً‏) مِنْ مَاءٍ غَيْرِ ‏ ‏آسِنٍ (‏ أَوْ)مِنْ مَاءٍ غَيْرِ ‏ ‏يَاسِنٍ( ؟

‏قَالَ فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏وَكُلَّ الْقُرْآنِ قَدْ أَحْصَيْتَ غَيْرَ هَذَا قَالَ إِنِّي لَأَقْرَأُ ‏ ‏الْمُفَصَّلَ ‏ ‏فِي رَكْعَةٍ فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏هَذًّا ‏ ‏كَهَذِّ الشِّعْرِ ‏ ‏إِنَّ أَقْوَامًا يَقْرَءُونَ الْقُرْآنَ ‏ ‏لَا يُجَاوِزُ ‏ ‏تَرَاقِيَهُمْ ‏ ‏وَلَكِنْ إِذَا وَقَعَ فِي الْقَلْبِ فَرَسَخَ فِيهِ نَفَعَ إِنَّ أَفْضَلَ الصَّلَاةِ الرُّكُوعُ وَالسُّجُودُ ‏

‏إِنِّي لَأَعْلَمُ ‏ ‏النَّظَائِرَ ‏ ‏الَّتِي كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْرُنُ بَيْنَهُنَّ سُورَتَيْنِ فِي كُلِّ رَكْعَةٍ ثُمَّ قَامَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏فَدَخَلَ ‏ ‏عَلْقَمَةُ ‏ ‏فِي ‏ ‏إِثْرِهِ ‏ ‏ثُمَّ خَرَجَ فَقَالَ قَدْ أَخْبَرَنِي بِهَا ‏

‏قَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏فِي رِوَايَتِهِ جَاءَ رَجُلٌ مِنْ ‏ ‏بَنِي بَجِيلَةَ ‏ ‏إِلَى ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏وَلَمْ يَقُلْ ‏ ‏نَهِيكُ بْنُ سِنَانٍ

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏قَالَ ‏ ‏جَاءَ رَجُلٌ إِلَى ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏يُقَالُ لَهُ ‏ ‏نَهِيكُ بْنُ سِنَانٍ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏وَكِيعٍ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ فَجَاءَ ‏ ‏عَلْقَمَةُ ‏ ‏لِيَدْخُلَ عَلَيْهِ فَقُلْنَا لَهُ سَلْهُ عَنْ ‏ ‏النَّظَائِرِ ‏ ‏الَّتِي كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْرَأُ بِهَا فِي رَكْعَةٍ فَدَخَلَ عَلَيْهِ فَسَأَلَهُ ثُمَّ خَرَجَ عَلَيْنَا فَقَالَ عِشْرُونَ سُورَةً مِنْ ‏ ‏الْمُفَصَّلِ ‏ ‏فِي تَأْلِيفِ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِنَحْوِ حَدِيثِهِمَا وَقَالَ إِنِّي لَأَعْرِفُ ‏ ‏النَّظَائِرَ ‏ ‏الَّتِي كَانَ يَقْرَأُ بِهِنَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اثْنَتَيْنِ فِي رَكْعَةٍ عِشْرِينَ سُورَةً فِي عَشْرِ رَكَعَاتٍ

நஹீக் பின் சினான் என்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து, “அபூஅப்திர் ரஹ்மான் அவர்களே! குர்ஆனில் (47ஆவது அத்தியாயத்திலுள்ள) இந்த எழுத்தை எப்படி ஓதுகின்றீர்?: ‘மிம்மாயின் ஃகைரி ஆசினின்’ என்று அலிஃபுடன் ஓதுகின்றீரா?, அல்லாது ‘மிம்மாயின் ஃகைரி யாசினின்’ என்று ‘யா’வுடன் ஓதுகின்றீரா?” எனக் கேட்டார்.

அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “இதைத் தவிர குர்ஆன் முழுவதையும் சரியாக மனனமிட்டு விட்டாயோ?” என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர், “நான் முஃபஸ்ஸல் எனும் (ஹுஜுராத் முதல் அந்நாஸ் (49-114) வரையிலான) அத்தியாயங்களை ஒரே ரக்அத்தில் ஓதுகின்றேன்” என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக ஓதுவீரோ? மக்களில் சிலர் குர்ஆனை ஓதுவார்கள். அது அவர்களது தொண்டைக் குழியைக் கடந்து செல்லாது. அது மட்டும் அவர்களது உள்ளத்திற்குள் சென்று பதிந்துவிட்டால் நிச்சயம் பயன் தரும். தொழுகையில் மிகச் சிறந்த நிலை ருகூஉவும் ஸஜ்தாவுமாகும். நபி (ஸல்) தமது தொழுகையின் ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டாகச் சேர்த்து ஓதிவந்த சரிநிகர் அத்தியாயங்களை நான் அறிவேன்” என்று கூறினார்கள்.

(இதைக் கூறிய) பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) (தமது இல்லத்தினுள்) சென்றார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து அல்கமா (ரஹ்) அவர்களும் உள்ளே சென்றார்கள். (சிறிது நேரம் கழித்து) அல்கமா (ரஹ்) வெளியே வந்து “அந்த (சரிநிகர்) அத்தியாயங்கள் (எவை என்பது) பற்றி எனக்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அறிவித்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு மஸ்ஊத் (ரலி) வழியாக அபூவாஇல் (ரஹ்)

குறிப்புகள்:

அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், பனூ பஜீலா குலத்தைச் சேர்ந்த ஒருவர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்தார் என்றே இடம்பெற்றுள்ளது. நஹீக் பின் சினான் எனும் பெயர் இடம்பெறவில்லை.

அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில்,
அல்கமா (ரஹ்), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்தினுள்ளே) போகும்போது நாங்கள், “நீங்கள் அவர்களிடம் (சென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரே ரக்அத்தில் ஓதிவந்த அந்த சரிநிகர் அத்தியாயங்கள் (எவை என்பது) குறித்துக் கேளுங்கள்!” என்று வேண்டினோம். அல்கமா (ரஹ்) உள்ளே சென்று, இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வினவினார்கள். பின்னர் எங்களிடம் வந்து, “(அவை:) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) தொகுத்துவைத்துள்ள குர்ஆன் பிரதியின்படி (ஆரம்ப) இருபது முஃபஸ்ஸல் அத்தியாயங்களாகும்” என்று கூறினார்கள்.

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் மற்றும் ஈஸா பின் யூனுஸ் ஆகியோர் வழி அறிவிப்பில்,
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஒரு ரக்அத்தில் இரண்டு அத்தியாயங்கள் வீதம் பத்து ரக்அத்களில் இருபது அத்தியாயங்களாக ஓதிவந்த சரிநிகர் அத்தியாயங்களை நான் அறிவேன்” என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment