அத்தியாயம்: 7, பாடம்: 10, ஹதீஸ் எண்: 1427

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكٍ ‏ ‏قَالَ أَنْبَأَنِي ‏ ‏جَابِرُ بْنُ سَمُرَةَ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَخْطُبُ قَائِمًا ثُمَّ يَجْلِسُ ثُمَّ يَقُومُ فَيَخْطُبُ قَائِمًا فَمَنْ نَبَّأَكَ أَنَّهُ كَانَ يَخْطُبُ جَالِسًا فَقَدْ كَذَبَ فَقَدْ وَاللَّهِ صَلَّيْتُ مَعَهُ أَكْثَرَ مِنْ أَلْفَيْ صَلَاةٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஜும்ஆவின்போது) நின்றவாறே உரையாற்றுவார்கள். பிறகு உட்கார்ந்துவிட்டு (மீண்டும்) எழுந்து நின்றவாறே உரையாற்றுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உட்கார்ந்தவாறே உரை நிகழ்த்துவார்கள் என்று எவரேனும் உன்னிடம் கூறினால் அவர் பொய்யுரைத்தார். அல்லாஹ்வின் மீதாணை! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழுகைகளைத் தொழுதிருக்கிறேன்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் சமுரா (ரலி).

Share this Hadith:

Leave a Comment