அத்தியாயம்: 7, பாடம்: 11, ஹதீஸ் எண்: 1428

حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏قَالَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَخْطُبُ قَائِمًا يَوْمَ الْجُمُعَةِ فَجَاءَتْ ‏ ‏عِيرٌ ‏ ‏مِنْ ‏ ‏الشَّامِ ‏ ‏فَانْفَتَلَ ‏ ‏النَّاسُ إِلَيْهَا حَتَّى لَمْ يَبْقَ إِلَّا اثْنَا عَشَرَ رَجُلًا فَأُنْزِلَتْ هَذِهِ الْآيَةُ الَّتِي فِي الْجُمُعَةِ ‏” وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا ‏ ‏انْفَضُّوا ‏ ‏إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا”

‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ ‏ ‏عَنْ ‏ ‏حُصَيْنٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ قَالَ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَخْطُبُ وَلَمْ يَقُلْ قَائِمًا

நபி (ஸல்) (ஒரு) வெள்ளிக்கிழமை உரையை நின்றவாறு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, ஷாம் (சிரியா) நாட்டிலிருந்து ஓர் ஒட்டகக் கூட்டம் (உணவுப் பொருட்களுடன்) வந்தது. உடனே மக்கள் அனைவரும் கலைந்து அதை நோக்கிச் சென்று விட்டனர்; பன்னிரண்டு பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர். அப்போதுதான் ‘அல்ஜும்ஆ’ (62ஆவது) அத்தியாயத்திலுள்ள “அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் உம்மை நிற்க வைத்துவிட்டு, அவற்றை நோக்கிச் சென்றுவிடுகின்றனர்” எனும் இந்த (11ஆவது) வசனம் அருளப்பெற்றது.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).

குறிப்பு: அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள் …’ என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது. ‘நின்றவாறு’ எனும் சொல் இடம்பெறவில்லை.

Share this Hadith:

Leave a Comment