و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي عَطَاءٌ :
أَنَّ ابْنَ عَبَّاسٍ أَرْسَلَ إِلَى ابْنِ الزُّبَيْرِ أَوَّلَ مَا بُويِعَ لَهُ أَنَّهُ لَمْ يَكُنْ يُؤَذَّنُ لِلصَّلَاةِ يَوْمَ الْفِطْرِ فَلَا تُؤَذِّنْ لَهَا قَالَ فَلَمْ يُؤَذِّنْ لَهَا ابْنُ الزُّبَيْرِ يَوْمَهُ وَأَرْسَلَ إِلَيْهِ مَعَ ذَلِكَ إِنَّمَا الْخُطْبَةُ بَعْدَ الصَّلَاةِ وَإِنَّ ذَلِكَ قَدْ كَانَ يُفْعَلُ قَالَ فَصَلَّى ابْنُ الزُّبَيْرِ قَبْلَ الْخُطْبَةِ
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) (மக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்று) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) நடைபெற்ற முதல் நாளில், இப்னு அப்பாஸ் (ரலி), “(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) நோன்புப் பெருநாள் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டதில்லை. எனவே, நீங்களும் அத்தொழுகைக்கு பாங்கு சொல்லாதீர்கள்” என்ற செய்தியை அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் அவர்களுக்குச் சொல்லி அனுப்பினார்கள்.
அவ்வாறே அன்றைய தினம் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் பாங்கு சொல்லவில்லை. மேலும், ‘பெருநாள் தொழுகைக்குப் பிறகுதான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறுதான் (முன்பு) செய்யப்பட்டுவந்தது’ எனும் செய்தியையும் அவர்களுக்கு இப்னு அப்பாஸ் (ரலி) தெரிவித்தார்கள். அவ்வாறே அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே (பெருநாள்) தொழுகை நடத்தினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அதாஉ (ரஹ்)