அத்தியாயம்: 8, பாடம்: 4, ஹதீஸ் எண்: 1480

حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ شِهَابٍ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏

‏أَنَّ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا ‏ ‏جَارِيَتَانِ فِي أَيَّامِ ‏ ‏مِنًى ‏ ‏تُغَنِّيَانِ وَتَضْرِبَانِ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُسَجًّى بِثَوْبِهِ ‏ ‏فَانْتَهَرَهُمَا ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏فَكَشَفَ رَسُولُ اللَّهِ عَنْهُ وَقَالَ ‏ ‏دَعْهُمَا يَا ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ وَقَالَتْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَسْتُرُنِي بِرِدَائِهِ وَأَنَا أَنْظُرُ إِلَى ‏ ‏الْحَبَشَةِ ‏ ‏وَهُمْ يَلْعَبُونَ وَأَنَا جَارِيَةٌ فَاقْدِرُوا قَدْرَ ‏ ‏الْجَارِيَةِ ‏ ‏الْعَرِبَةِ الْحَدِيثَةِ السِّنِّ

‘மினா’வின் நாட்கள் ஒன்றில் என்னருகில் இரு (அன்சாரிச்) சிறுமியர் துஃப் (எனும் கஞ்சிராக்களை) அடித்துப் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தபோது (என் தந்தை) அபூபக்ரு (ரலி) என்னிடம் வந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது ஆடையால் போர்த்திக் கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ட) அபூபக்ரு (ரலி) அச்சிறுமியர் இருவரையும் அதட்டினார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் மீதிருந்த) துணியை விலக்கி, “அவர்களை விட்டு விடுங்கள், அபூபக்ரே! இவை பண்டிகை நாட்கள்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது மேலாடையால் என்னை மறைத்துக் கொண்டிருக்க, (பள்ளிவாசல் வளாகத்தில் ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் (என் வீட்டிலிருந்தபடி வேடிக்கை) பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் இளம்வயதுப் பெண்ணாக இருந்தேன். விளையாட்டுமீது பேராவல் கொண்ட இளம்வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு: அந்தக் காலத்தில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லமும் மஸ்ஜிதுந் நபவீயும் எதிரெதிரே இருந்துள்ளன.

அத்தியாயம்: 8, பாடம்: 4, ஹதீஸ் எண்: 1479

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

‏دَخَلَ عَلَيَّ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَعِنْدِي ‏ ‏جَارِيَتَانِ ‏ ‏مِنْ جَوَارِي ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏تُغَنِّيَانِ بِمَا ‏ ‏تَقَاوَلَتْ ‏ ‏بِهِ ‏ ‏الْأَنْصَارُ ‏ ‏يَوْمَ ‏ ‏بُعَاثَ ‏ ‏قَالَتْ وَلَيْسَتَا ‏ ‏بِمُغَنِّيَتَيْنِ فَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏أَبِمَزْمُورِ ‏ ‏الشَّيْطَانِ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَذَلِكَ فِي يَوْمِ عِيدٍ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا وَهَذَا عِيدُنَا ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَفِيهِ ‏ ‏جَارِيَتَانِ ‏ ‏تَلْعَبَانِ بِدُفٍّ

‘புஆஸ்’ எனும் (அறியாமைக் காலத்தில் நடந்த ஒரு) போரின்போது அன்சாரிகள் ஒருவரை நோக்கி ஒருவர் பாடிய பாடல்களை, பாடகியரல்லாத இரு அன்சாரிச் சிறுமியர் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது (என் தந்தை) அபூபக்ரு (ரலி) என்னிடம் வந்து, “இறைத்தூதர் இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அபூபக்ரே! (விடுங்கள். மகிழ்ச்சியை வெளிப்படுத்த) ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு: அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில், “இரு சிறுமியர் துஃப் எனும் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1472

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏دَاوُدَ بْنِ قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَخْرُجُ يَوْمَ الْأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ فَيَبْدَأُ بِالصَّلَاةِ فَإِذَا صَلَّى صَلَاتَهُ وَسَلَّمَ قَامَ فَأَقْبَلَ عَلَى النَّاسِ وَهُمْ جُلُوسٌ فِي مُصَلَّاهُمْ فَإِنْ كَانَ لَهُ حَاجَةٌ بِبَعْثٍ ذَكَرَهُ لِلنَّاسِ أَوْ كَانَتْ لَهُ حَاجَةٌ بِغَيْرِ ذَلِكَ أَمَرَهُمْ بِهَا وَكَانَ يَقُولُ ‏ ‏تَصَدَّقُوا تَصَدَّقُوا تَصَدَّقُوا وَكَانَ أَكْثَرَ مَنْ يَتَصَدَّقُ النِّسَاءُ ثُمَّ يَنْصَرِفُ ‏

‏فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى كَانَ ‏ ‏مَرْوَانُ بْنُ الْحَكَمِ ‏ ‏فَخَرَجْتُ ‏ ‏مُخَاصِرًا ‏ ‏مَرْوَانَ ‏ ‏حَتَّى أَتَيْنَا الْمُصَلَّى فَإِذَا ‏ ‏كَثِيرُ بْنُ الصَّلْتِ ‏ ‏قَدْ بَنَى مِنْبَرًا مِنْ طِينٍ وَلَبِنٍ فَإِذَا ‏ ‏مَرْوَانُ ‏ ‏يُنَازِعُنِي يَدَهُ كَأَنَّهُ يَجُرُّنِي نَحْوَ الْمِنْبَرِ وَأَنَا أَجُرُّهُ نَحْوَ الصَّلَاةِ فَلَمَّا رَأَيْتُ ذَلِكَ مِنْهُ قُلْتُ أَيْنَ ‏ ‏الِابْتِدَاءُ بِالصَّلَاةِ فَقَالَ لَا يَا ‏ ‏أَبَا سَعِيدٍ ‏ ‏قَدْ تُرِكَ مَا تَعْلَمُ قُلْتُ كَلَّا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَأْتُونَ بِخَيْرٍ مِمَّا أَعْلَمُ ثَلَاثَ مِرَارٍ ثُمَّ انْصَرَفَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ்ஜுப் பெருநாளன்றும் நோன்புப் பெருநாளன்றும் (திடலுக்குப்) புறப்பட்டுச் சென்று, முதலில் தொழுகையை நிறைவேற்றுவார்கள்.

தொழுகையை முடித்து ஸலாம் கொடுத்ததும் மக்களை முன்னோக்கி (உரை நிகழ்த்தியபடி) நிற்பார்கள். மக்கள் தொழுத இடத்தில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். ஏதேனும் படைப் பிரிவை அனுப்ப வேண்டிய தேவையிருந்தால் அதை மக்களிடம் அறிவிப்பார்கள்; அல்லது வேறு தேவை ஏதேனும் இருந்தால், அதற்கான உத்தரவைப் பிறப்பிப்பார்கள்.

(அன்றைய தினம்) அவர்கள், “தர்மம் செய்யுங்கள்; தர்மம் செய்யுங்கள்; தர்மம் செய்யுங்கள்” என்று (திரும்பத் திரும்பக்) கூறுவார்கள். மக்களில் அதிகமாகத் தர்மம் செய்வோர் பெண்களாக இருந்தார்கள். பிறகு திரும்பிச் செல்வார்கள்.

(முதலில் தொழுகை, பிறகு உரை எனும்) அதே நிலை தொடர்ந்து நீடித்தது – மர்வான் பின் அல்ஹகம் (மதீனாவின் ஆளுநராக) வரும்வரை. (மர்வான் ஆட்சிப் பொறுப்பேற்று) அவரும் நானும் கை கோத்தவர்களாக இணைந்து (பெருநாள் ஒன்றில்) தொழும் திடலுக்கு வந்தபோது, அங்குக் களிமண்ணாலும் செங்கல்லாலும் கட்டியிருந்த ஒரு சொற்பொழிவு மேடை (புதிதாகக்) காணப்பட்டது. அதை, கஸீர் பின் அஸ்ஸல்த் என்பவர் கட்டியிருந்தார்.

அப்போது மர்வான் என்னை சொற்பொழிவு மேடை நோக்கி இழுக்க, நான் அவரைத் தொழுகைக்காக இழுக்க அவர் என்னிடமிருந்து தனது கையை விடுவித்துக் கொண்டார். (தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்திட நின்றார்.) அவரிடம் இந்த (மாற்றமான) நிலையைக் கண்ட நான், “முதலில் நடைபெறவேண்டிய தொழுகை எங்கே?” என்று கேட்டேன். அதற்கு மர்வான், “இல்லை அபூஸயீதே! நீங்கள் அறிந்திருக்கும் அந்த நடைமுறை கைவிடப்பட்டது” என்று கூறினார். அதற்கு நான், “இல்லை, என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் அறிந்திருக்கும் (நபிவழியான) நடைமுறையைவிடச் சிறந்த ஒன்றை உங்களால் கொண்டுவர முடியாது” என்று மறுத்துப் பேசினேன்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு: “நான் அறிந்திருக்கும் (நபிவழியான) நடைமுறையைவிடச் சிறந்த ஒன்றை உங்களால் கொண்டுவர முடியாது” என்று மூன்று முறை கூறிவிட்டு, அபூஸயீத் (ரலி) திரும்பிச் சென்றுவிட்டார்கள் என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான இயாள் பின் அப்தில்லாஹ் பின் சஅத் (ரஹ்) அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1471

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏وَأَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبَا بَكْرٍ ‏ ‏وَعُمَرَ ‏ ‏كَانُوا يُصَلُّونَ الْعِيدَيْنِ قَبْلَ الْخُطْبَةِ

நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் உரை (குத்பா) நிகழ்த்துவதற்கு முன்பே இரு பெருநாள் தொழுகைகளைத் தொழுபவர்களாய் இருந்தனர்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1469

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏

‏أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏أَرْسَلَ إِلَى ‏ ‏ابْنِ الزُّبَيْرِ ‏ ‏أَوَّلَ مَا بُويِعَ لَهُ ‏ ‏أَنَّهُ لَمْ يَكُنْ يُؤَذَّنُ لِلصَّلَاةِ يَوْمَ الْفِطْرِ فَلَا تُؤَذِّنْ لَهَا قَالَ فَلَمْ يُؤَذِّنْ لَهَا ‏ ‏ابْنُ الزُّبَيْرِ ‏ ‏يَوْمَهُ وَأَرْسَلَ إِلَيْهِ مَعَ ذَلِكَ إِنَّمَا الْخُطْبَةُ بَعْدَ الصَّلَاةِ وَإِنَّ ذَلِكَ قَدْ كَانَ يُفْعَلُ قَالَ فَصَلَّى ‏ ‏ابْنُ الزُّبَيْرِ ‏ ‏قَبْلَ الْخُطْبَةِ

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) (மக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்று) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) நடைபெற்ற முதல் நாளில், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) நோன்புப் பெருநாள் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டதில்லை. எனவே, நீங்களும் அத்தொழுகைக்கு பாங்கு சொல்லாதீர்கள்” என்ற செய்தியை அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் அவர்களுக்குச் சொல்லி அனுப்பினார்கள்.

அவ்வாறே அன்றைய தினம் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் பாங்கு சொல்லவில்லை. மேலும், ‘பெருநாள் தொழுகைக்குப் பிறகுதான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறுதான் (முன்பு) செய்யப்பட்டுவந்தது’ எனும் செய்தியையும் அவர்களுக்கு இப்னு அப்பாஸ் (ரலி) தெரிவித்தார்கள். அவ்வாறே அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே (பெருநாள்) தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) வழியாக அதாஉ (ரஹ்)

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1468

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏وَعَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيِّ ‏ ‏قَالَا ‏

‏لَمْ يَكُنْ يُؤَذَّنُ يَوْمَ الْفِطْرِ وَلَا يَوْمَ الْأَضْحَى ثُمَّ سَأَلْتُهُ بَعْدَ حِينٍ عَنْ ذَلِكَ فَأَخْبَرَنِي قَالَ أَخْبَرَنِي ‏ ‏جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ ‏ ‏أَنْ لَا أَذَانَ لِلصَّلَاةِ يَوْمَ الْفِطْرِ حِينَ يَخْرُجُ الْإِمَامُ وَلَا بَعْدَ مَا يَخْرُجُ وَلَا إِقَامَةَ وَلَا نِدَاءَ وَلَا شَيْءَ لَا نِدَاءَ يَوْمَئِذٍ وَلَا إِقَامَةَ

“நோன்புப் பெருநாளிலோ ஹஜ்ஜுப் பெருநாளிலோ (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) தொழுகைக்காக பாங்கு சொல்லப்படவில்லை” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களும் கூறியதாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) என்னிடம் தெரிவித்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அதாஉ (ரஹ்) அவர்களிடம் அது குறித்து நான் (விபரம்) கேட்டேன். அதற்கு, “நோன்புப் பெருநாள் தொழுகைக்கு இமாம் புறப்பட்டு வரும்போதோ, புறப்பட்டு வந்த பின்போ பாங்கு கிடையாது. அதைப் போன்றே, இகாமத்தோ தொழுகைக்கான அழைப்போ வேறு அறிவிப்புகளோகூட கிடையாது. அன்றைய நாளில் பாங்கோ இகாமத்தோ கிடையாது” என்று ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறியதாக அதாஉ (ரஹ்) சொன்னார்கள்.

அறிவிப்பாளர்கள் : இப்னு அப்பாஸ் (ரலி) & ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1467

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

‏شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الصَّلَاةَ يَوْمَ الْعِيدِ فَبَدَأَ بِالصَّلَاةِ قَبْلَ الْخُطْبَةِ بِغَيْرِ أَذَانٍ وَلَا إِقَامَةٍ ثُمَّ قَامَ ‏ ‏مُتَوَكِّئًا ‏ ‏عَلَى ‏ ‏بِلَالٍ ‏ ‏فَأَمَرَ بِتَقْوَى اللَّهِ وَحَثَّ عَلَى طَاعَتِهِ وَوَعَظَ النَّاسَ وَذَكَّرَهُمْ ثُمَّ مَضَى حَتَّى أَتَى النِّسَاءَ فَوَعَظَهُنَّ وَذَكَّرَهُنَّ فَقَالَ ‏ ‏تَصَدَّقْنَ فَإِنَّ أَكْثَرَكُنَّ حَطَبُ جَهَنَّمَ فَقَامَتْ امْرَأَةٌ مِنْ ‏ ‏سِطَةِ ‏ ‏النِّسَاءِ ‏ ‏سَفْعَاءُ ‏ ‏الْخَدَّيْنِ فَقَالَتْ لِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لِأَنَّكُنَّ تُكْثِرْنَ الشَّكَاةَ ‏ ‏وَتَكْفُرْنَ ‏ ‏الْعَشِيرَ ‏ ‏قَالَ فَجَعَلْنَ يَتَصَدَّقْنَ مِنْ حُلِيِّهِنَّ يُلْقِينَ فِي ثَوْبِ ‏ ‏بِلَالٍ ‏ ‏مِنْ ‏ ‏أَقْرِطَتِهِنَّ ‏ ‏وَخَوَاتِمِهِنَّ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஒரு) பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அப்போது உரை நிகழ்த்துவதற்கு முன்னர், பாங்கோ இகாமத்தோ இல்லாமல் அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.

பிறகு பிலால் (ரலி) அவர்கள்மீது சாய்ந்து நின்றுகொண்டு, இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள்.

பிறகு அங்கிருந்து புறப்பட்டு, பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு (மார்க்க நெறிமுறைகளையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும், பெண்களை நோக்கி, “தர்மம் செய்யுங்கள். உங்களில் அதிகம் பேர் நரகத்தின் விறகுகள் ஆவீர்கள்” என்று கூறினார்கள்.

அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து, “அது ஏன், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் அதிகமாகக் குறை கூறுகின்றீர்கள்; (நன்றி மறந்து) கணவனின் கட்டளைகளை மறுத்து விடுகிறீர்கள்” என்று கூறினார்கள். அப்போது அப் பெண்கள் தம் காதணிகளையும் மோதிரங்களையும் (கழற்றி) பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போட்டனர்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1466

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ سَمِعْتُهُ يَقُولُ ‏

‏إِنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَامَ يَوْمَ الْفِطْرِ فَصَلَّى فَبَدَأَ بِالصَّلَاةِ قَبْلَ الْخُطْبَةِ ثُمَّ خَطَبَ النَّاسَ فَلَمَّا فَرَغَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَزَلَ وَأَتَى النِّسَاءَ فَذَكَّرَهُنَّ وَهُوَ ‏ ‏يَتَوَكَّأُ ‏ ‏عَلَى يَدِ ‏ ‏بِلَالٍ ‏ ‏وَبِلَالٌ ‏ ‏بَاسِطٌ ثَوْبَهُ يُلْقِينَ النِّسَاءُ صَدَقَةً ‏

‏قُلْتُ ‏ ‏لِعَطَاءٍ ‏ ‏زَكَاةَ يَوْمِ الْفِطْرِ قَالَ لَا وَلَكِنْ صَدَقَةً يَتَصَدَّقْنَ بِهَا حِينَئِذٍ تُلْقِي الْمَرْأَةُ ‏ ‏فَتَخَهَا ‏ ‏وَيُلْقِينَ وَيُلْقِينَ قُلْتُ ‏ ‏لِعَطَاءٍ ‏ ‏أَحَقًّا عَلَى الْإِمَامِ الْآنَ أَنْ يَأْتِيَ النِّسَاءَ حِينَ يَفْرُغُ فَيُذَكِّرَهُنَّ قَالَ إِي لَعَمْرِي إِنَّ ذَلِكَ لَحَقٌّ عَلَيْهِمْ وَمَا لَهُمْ لَا يَفْعَلُونَ ذَلِكَ

நபி (ஸல்) நோன்புப் பெருநாளன்று உரையாற்றுவதற்கு முன் எழுந்து தொழுதார்கள். அதற்குப் பிறகே மக்களுக்கு உரையாற்றினார்கள். நபி (ஸல்) உரையாற்றி முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு, பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால் (ரலி) மீது சாய்ந்து நின்றுகொண்டு, பெண்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். அப்போது பிலால் (ரலி) தமது ஆடையொன்றை விரித்துப் பிடிக்க, அதில் பெண்கள் தர்மப் பொருட்களைப் போட்டனர்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு : இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) கூறுகிறார்:

நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம் “நோன்புப் பெருநாள் (ஸதக்கத்துல் ஃபித்ரு) தர்மத்தையா (அப்பெண்கள் இட்டார்கள்)?” என்று கேட்டேன். அதற்கு, “இல்லை; அப்போதைக்குத் தாமாகவே முன்வந்து தர்மப் பொருட்களை அவர்கள் ஈந்தனர். பெண்கள் தம் மெட்டிகளையும் இன்னும் பிறவற்றையும் போட்டனர்” என்று அதாஉ (ரஹ்) கூறினார்கள்.

மேலும், நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், “உரை நிகழ்த்திய பின் பெண்கள் பகுதிக்குச் சென்று உபதேசம் செய்வது இன்றைக்கும் தலைவர்மீது கடமை என நீங்கள் கருதுகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு, “நிச்சயம். சத்தியமாக! அது அவர்களுக்குக் கடமைதான். அதை அவர்கள் எவ்வாறு செய்யாமலிருக்க முடியும்?” என்று அதாஉ (ரஹ்) கேட்டார்கள்.

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1465

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَطَاءً ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏يَقُولُا ‏

‏أَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَصَلَّى قَبْلَ الْخُطْبَةِ قَالَ ثُمَّ خَطَبَ فَرَأَى أَنَّهُ لَمْ يُسْمِعْ النِّسَاءَ فَأَتَاهُنَّ فَذَكَّرَهُنَّ وَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ ‏ ‏وَبِلَالٌ ‏ ‏قَائِلٌ بِثَوْبِهِ فَجَعَلَتْ الْمَرْأَةُ تُلْقِي الْخَاتَمَ ‏ ‏وَالْخُرْصَ ‏ ‏وَالشَّيْءَ ‏

‏و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏يَعْقُوبُ الدَّوْرَقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (பெருநாள் அன்று) உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுதார்கள். (தொழுகைக்குப்) பிறகு உரையாற்றினார்கள் என்பதற்கு நான் உறுதி கூறுகிறேன்.

தமது உரை, பெண்கள் பகுதிக்கு எட்டியிருக்காது என்று நினைத்துப் பெண்கள் பகுதிக்குச் சென்று, அவர்களுக்கு (இஸ்லாமிய சட்டவிதிகளையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை கூறினார்கள்; தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். (அவற்றைப் பெறுவதற்காக) பிலால் (ரலி), தமது ஆடையை விரித்து பிடித்துக் கொண்டிருந்தார். பெண்கள் தங்களுடைய மோதிரங்களையும் காதணிகளையும் பிறவற்றையும் (கழற்றிப்) போடலானார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)