அத்தியாயம்: 7, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1420

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَسَنُ بْنُ عَيَّاشٍ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

‏كُنَّا ‏ ‏نُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ نَرْجِعُ فَنُرِيحُ ‏ ‏نَوَاضِحَنَا ‏ ‏قَالَ ‏ ‏حَسَنٌ ‏ ‏فَقُلْتُ ‏ ‏لِجَعْفَرٍ ‏ ‏فِي أَيِّ سَاعَةٍ تِلْكَ قَالَ ‏ ‏زَوَالَ ‏ ‏الشَّمْسِ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஜும்ஆத்) தொழுவோம்; பிறகு திரும்பிச் சென்று (ஏற்றத்தில்) நீர் இறைத்துத் தரும் எங்கள் ஒட்டகங்களுக்கு ஓய்வளிப்போம்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

குறிப்பு : ஜஅஃபர் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் “அது எந்த நேரம்?” என்று நான் வினவினேன். அதற்கு, “சூரியன் உச்சியிலிருந்து சாயும் (நண்பகல்) நேரம்” என்று விடையளித்தார்கள் என்பதாக (இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான) ஹஸன் பின் அய்யாஷ் (ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.

Share this Hadith:

Leave a Comment