و حَدَّثَنِي الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ ح و حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ قَالَا جَمِيعًا حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ عَنْ جَعْفَرٍ عَنْ أَبِيهِ أَنَّهُ سَأَلَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ
مَتَى كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الْجُمُعَةَ قَالَ كَانَ يُصَلِّي ثُمَّ نَذْهَبُ إِلَى جِمَالِنَا فَنُرِيحُهَا
زَادَ عَبْدُ اللَّهِ فِي حَدِيثِهِ حِينَ تَزُولُ الشَّمْسُ يَعْنِي النَّوَاضِحَ
நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எந்த நேரத்தில் ஜும்ஆத் தொழுவார்கள்?” என்று கேட்டேன். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஜும்ஆ) தொழுவித்த பிறகு நாங்கள் எங்களுடைய ஒட்டகங்களிடம் சென்று அவற்றுக்கு ஓய்வளிப்போம்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) வழியாக முஹம்மத் பின் அலீ பின் அல்ஹுசைன் (ரஹ்)
குறிப்பு : அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அறிவிப்பில், “சூரியன் உச்சியிலிருந்து சாயும் (நண்பகல்) நேரத்தில் (ஜும்ஆத் தொழுவார்கள்)” என்றும், ஒட்டகங்கள் என்பது “ஏற்றத்தில் நீர் இறைத்துத் தரும் ஒட்டகங்களைக் குறிக்கும்” என்றும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.