அத்தியாயம்: 8, பாடம்: 3, ஹதீஸ் எண்: 1477

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ضَمْرَةَ بْنِ سَعِيدٍ الْمَازِنِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏

‏أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏ ‏سَأَلَ ‏ ‏أَبَا وَاقِدٍ اللَّيْثِيَّ ‏ ‏مَا كَانَ يَقْرَأُ بِهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْأَضْحَى وَالْفِطْرِ فَقَالَ كَانَ ‏ ‏يَقْرَأُ فِيهِمَا ‏ ‏بِق وَالْقُرْآنِ الْمَجِيدِ ‏ ‏وَاقْتَرَبَتْ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ

உமர் பின் அல்கத்தாப் (ரலி), அபூவாக்கித் அவ்ஃப் பின் அல்ஹாரிஸ் அல் லைஸீ (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் நோன்புப் பெருநாள்(தொழுகை)களில் எ(ந்த அத்தியாயத்)தை ஓதுவார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அபூவாக்கித் (ரலி), “காஃப் வல்குர்ஆனில் மஜீத் எனும் (50ஆவது) அத்தியாத்தையும் இக்தரபத்திஸ் ஸாஅத்து வன்ஷக்கல் கமர் எனும் (54ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூவாக்கித் (ரலி) வழியாக உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்).

Share this Hadith:

Leave a Comment