و حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ حَدَّثَنَا فُلَيْحٌ عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ قَالَ
سَأَلَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ عَمَّا قَرَأَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَوْمِ الْعِيدِ فَقُلْتُ بِاقْتَرَبَتِ السَّاعَةُ وَ ق وَالْقُرْآنِ الْمَجِيدِ
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாளி(ன் தொழுகையி)ல் எ(ந்த அத்தியாயத்)தை ஓதுவார்கள்?” என்று என்னிடம் உமர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நான் “இக்தரபத்திஸ் ஸாஅத்து எனும் (54ஆவது) அத்தியாயத்தையும் காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்” என்று விடையளித்தேன்.
அறிவிப்பாளர் : அபூவாக்கித் அவ்ஃப் பின் அல்ஹாரிஸ் அல்லைஸீ (ரலி)