و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ عَنْ عَمِّهِ قَالَ :
خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمُصَلَّى فَاسْتَسْقَى وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ وَقَلَبَ رِدَاءَهُ وَصَلَّى رَكْعَتَيْنِ
நபி (ஸல்) தொழுகைத் திடலுக்குப் புறப்பட்டுச் சென்று, கிப்லாவை முன்னோக்கி நின்று மழைவேண்டி(த்தொழுகை நடத்தி)னார்கள்; தமது மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். மேலும், இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)தார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸைத் அல் மாஸினீ (ரலி)
குறிப்பு :
‘மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது’: வழக்கமாக மேல்துண்டை அணியும்போது, அதன் நடுப்பகுதி பிடறியில் இருக்கும்; இரு முனைகளும் மார்பில் புரளும். அதை மாற்றிப் போட்டால் நடுப்பகுதி கழுத்தில் இருக்கும்; இரு முனைகளும் முதுகில் புரளும்.