அத்தியாயம்: 9, பாடம்: 00, ஹதீஸ் எண்: 1489

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عَبَّادُ بْنُ تَمِيمٍ الْمَازِنِيُّ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عَمَّهُ ‏ ‏وَكَانَ مِنْ ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُا ‏

‏خَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمًا يَسْتَسْقِي فَجَعَلَ إِلَى النَّاسِ ظَهْرَهُ يَدْعُو اللَّهَ وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ ‏ ‏وَحَوَّلَ ‏ ‏رِدَاءَهُ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ

ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மழை வேண்டிப் பிரார்த்திப்பதற்காகப் புறப்பட்டுச் சென்றார்கள். கிப்லாவை முன்னோக்கி, தம் முதுகை மக்கள் பக்கம் திருப்பி நின்றவர்களாக இறைவனிடம் இறைஞ்சினார்கள்; தமது மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். அதன் பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸைத் அல் மாஸினீ (ரலி)


குறிப்பு : ‘மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது’: வழக்கமாக மேல்துண்டை அணியும்போது, அதன் நடுப்பகுதி பிடறியில் இருக்கும்; இரு முனைகளும் மார்பில் புரளும். அதை மாற்றிப் போட்டால் நடுப்பகுதி கழுத்தில் இருக்கும்; இரு முனைகளும் முதுகில் புரளும்.

Share this Hadith:

Leave a Comment