அத்தியாயம்: 9, பாடம்: 1, ஹதீஸ் எண்: 1491

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏وَعَبْدُ الْأَعْلَى ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَس

‏أَنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ لَا يَرْفَعُ يَدَيْهِ فِي شَيْءٍ مِنْ دُعَائِهِ إِلَّا فِي ‏ ‏الِاسْتِسْقَاءِ حَتَّى يُرَى بَيَاضُ إِبْطَيْهِ ‏

‏غَيْرَ أَنَّ ‏ ‏عَبْدَ الْأَعْلَى ‏ ‏قَالَ يُرَى بَيَاضُ إِبْطِهِ ‏ ‏أَوْ بَيَاضُ إِبْطَيْهِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي عَرُوبَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏أَنَّ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏حَدَّثَهُمْ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْوَهُ

நபி (ஸல்) மழைவேண்டிப் பிரார்த்தித்தபோது தவிர, வேறு எந்தப் பிரார்த்தனையின் போதும் தம் அக்குள்களின் வெண்மை தென்படும் அளவிற்கு தம் இரு கைகளையும் உயர்த்தமாட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி).

குறிப்பு : அப்துல் அஃலா (ரஹ்) அறிவிப்பில், “அவர்கள் தமது அக்குளின் வெண்மை (என ஒருமையில்) அல்லது இரு அக்குள்களின் (என இருமையில்) வெண்மை தென்படும் அளவிற்கு (உயர்த்தினார்கள்)” என்று இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment