அத்தியாயம்: 9, பாடம்: 3, ஹதீஸ் எண்: 1496

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ جُرَيْجٍ ‏ ‏يُحَدِّثُنَا عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏

‏كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا عَصَفَتْ الرِّيحُ قَالَ ‏ ‏اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ قَالَتْ وَإِذَا ‏ ‏تَخَيَّلَتْ ‏ ‏السَّمَاءُ تَغَيَّرَ لَوْنُهُ وَخَرَجَ وَدَخَلَ وَأَقْبَلَ وَأَدْبَرَ فَإِذَا مَطَرَتْ ‏ ‏سُرِّيَ عَنْهُ ‏ ‏فَعَرَفْتُ ذَلِكَ فِي وَجْهِهِ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَسَأَلْتُهُ فَقَالَ لَعَلَّهُ يَا ‏ ‏عَائِشَةُ ‏ ‏كَمَا قَالَ قَوْمُ ‏ ‏عَادٍ ‏” ‏فَلَمَّا رَأَوْهُ ‏ ‏عَارِضًا ‏ ‏مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَذَا ‏ ‏عَارِضٌ ‏ ‏مُمْطِرُنَا “

சூறாவளிக் காற்று வீசும்போது நபி (ஸல்), “இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும், அதிலுள்ள (பிற) நன்மையையும், அத்துடன் அனுப்பப்பட்ட நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், அதிலுள்ள (பிற) தீங்கிலிருந்தும், அத்துடன் அனுப்பப்பட்ட தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறுவார்கள்.

வானத்தில் மேகமூட்டம் ஏற்பட்டால் நபி (ஸல்) முகம் மாறிவிடும்; (தமது அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள்; (தவிப்புடன்) முன்னும் பின்னுமாக நடப்பார்கள். வானம் மழை பொழிந்துவிட்டால், அந்த (தவிப்பு) நிலை அவர்களைவிட்டு நீங்கிவிடும்.

இதை நான் அவர்களது முகத்திலிருந்து அறிந்துகொண்டு (இது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆயிஷா! ‘ஆத்’ சமுதாயத்தார், அந்த வேதனை (கொண்டு வரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்துகொண்டிருப்பதைக் கண்டபோது, (தவறாகப் புரிந்துகொண்டு) “இது நமக்கு மழை பொழிவிக்கும் மேகமாகும்” (46:24) என்று கூறினார்களே, அத்தகைய மேகமாகவும் இது இருக்கலாம்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

 

Share this Hadith:

Leave a Comment