அத்தியாயம்: 9, பாடம்: 3, ஹதீஸ் எண்: 1497

و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ مَعْرُوفٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا النَّضْرِ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏

‏مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُسْتَجْمِعًا ‏ ‏ضَاحِكًا حَتَّى أَرَى مِنْهُ ‏ ‏لَهَوَاتِهِ ‏ ‏إِنَّمَا كَانَ يَتَبَسَّمُ قَالَتْ وَكَانَ إِذَا رَأَى غَيْمًا أَوْ رِيحًا عُرِفَ ذَلِكَ فِي وَجْهِهِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَرَى النَّاسَ إِذَا رَأَوْا الْغَيْمَ فَرِحُوا رَجَاءَ أَنْ يَكُونَ فِيهِ الْمَطَرُ وَأَرَاكَ إِذَا رَأَيْتَهُ عَرَفْتُ فِي وَجْهِكَ الْكَرَاهِيَةَ قَالَتْ فَقَالَ يَا ‏ ‏عَائِشَةُ ‏ ‏مَا ‏ ‏يُؤَمِّنُنِي ‏ ‏أَنْ يَكُونَ فِيهِ عَذَابٌ قَدْ عُذِّبَ قَوْمٌ بِالرِّيحِ وَقَدْ رَأَى قَوْمٌ الْعَذَابَ فَقَالُوا ”هَذَا عَارِضٌ مُمْطِرُنَا “‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (பெரும்பாலும்) புன்னகைப்பவர்களாகவே இருந்தார்களேயன்றி, ஒரேயடியாகத் தமது உள்நாக்குத் தெரியும் அளவுக்குச் சிரித்ததை ஒருபோதும் நான் கண்டதில்லை.

மேகத்தையோ, அல்லது கொடுங் காற்றையோ கண்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முகத்தில் கலக்கம் தென்படும். (ஒரு நாள்) நான், “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும்போது தங்களது முகத்தில் கலக்கம் தென்படக் காண்கின்றேனே (ஏன்)?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “ஆயிஷா, அதில் (இறைவனின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. (‘ஆத்’ எனும்) ஒரு சமூகத்தார் கொடுங் காற்றால் வேதனை செய்யப்பட்டனர். அந்தச் சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்துவிட்டு, ‘இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்’ என்றே கூறி(ஏமாந்து போயி)னர்” என பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு : ”இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம் என்றே கூறி(ஏமாறி)னர்” அல்குர்ஆன் 46:24

அத்தியாயம்: 9, பாடம்: 3, ஹதீஸ் எண்: 1496

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ جُرَيْجٍ ‏ ‏يُحَدِّثُنَا عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏

‏كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا عَصَفَتْ الرِّيحُ قَالَ ‏ ‏اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ قَالَتْ وَإِذَا ‏ ‏تَخَيَّلَتْ ‏ ‏السَّمَاءُ تَغَيَّرَ لَوْنُهُ وَخَرَجَ وَدَخَلَ وَأَقْبَلَ وَأَدْبَرَ فَإِذَا مَطَرَتْ ‏ ‏سُرِّيَ عَنْهُ ‏ ‏فَعَرَفْتُ ذَلِكَ فِي وَجْهِهِ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَسَأَلْتُهُ فَقَالَ لَعَلَّهُ يَا ‏ ‏عَائِشَةُ ‏ ‏كَمَا قَالَ قَوْمُ ‏ ‏عَادٍ ‏” ‏فَلَمَّا رَأَوْهُ ‏ ‏عَارِضًا ‏ ‏مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَذَا ‏ ‏عَارِضٌ ‏ ‏مُمْطِرُنَا “

சூறாவளிக் காற்று வீசும்போது நபி (ஸல்), “இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும், அதிலுள்ள (பிற) நன்மையையும், அத்துடன் அனுப்பப்பட்ட நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், அதிலுள்ள (பிற) தீங்கிலிருந்தும், அத்துடன் அனுப்பப்பட்ட தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறுவார்கள்.

வானத்தில் மேகமூட்டம் ஏற்பட்டால் நபி (ஸல்) முகம் மாறிவிடும்; (தமது அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள்; (தவிப்புடன்) முன்னும் பின்னுமாக நடப்பார்கள். வானம் மழை பொழிந்துவிட்டால், அந்த (தவிப்பு) நிலை அவர்களைவிட்டு நீங்கிவிடும்.

இதை நான் அவர்களது முகத்திலிருந்து அறிந்துகொண்டு (இது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆயிஷா! ‘ஆத்’ சமுதாயத்தார், அந்த வேதனை (கொண்டு வரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்துகொண்டிருப்பதைக் கண்டபோது, (தவறாகப் புரிந்துகொண்டு) “இது நமக்கு மழை பொழிவிக்கும் மேகமாகும்” (46:24) என்று கூறினார்களே, அத்தகைய மேகமாகவும் இது இருக்கலாம்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

 

அத்தியாயம்: 9, பாடம்: 3, ஹதீஸ் எண்: 1495

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرٍ وَهُوَ ابْنُ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَقُولُ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا كَانَ يَوْمُ الرِّيحِ وَالْغَيْمِ عُرِفَ ذَلِكَ فِي وَجْهِهِ وَأَقْبَلَ وَأَدْبَرَ فَإِذَا مَطَرَتْ سُرَّ بِهِ وَذَهَبَ عَنْهُ ذَلِكَ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَسَأَلْتُهُ فَقَالَ ‏ ‏إِنِّي خَشِيتُ أَنْ يَكُونَ عَذَابًا سُلِّطَ عَلَى أُمَّتِي وَيَقُولُ إِذَا رَأَى الْمَطَرَ رَحْمَةٌ

கொடுங்காற்று, மழைமேகம் ஆகியவை மிகுந்துள்ள நாட்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முகத்தில் கலக்கம் தென்படும்; (நிம்மதி இல்லாமல்) முன்னும் பின்னும் நடப்பார்கள். மழை பொழிந்துவிட்டால் அந்த (தவிப்பு) நிலை அவர்களைவிட்டு நீங்கி விடும்; மகிழ்ச்சி வந்துவிடும்.

நான் அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டதற்கு, “அது என் சமுதாயத்தார் மீது சாட்டப்பட்ட (இறைவனின்) வேதனையாக இருக்குமோ என்று நான் அஞ்சினேன்” என்று விடையளித்தார்கள். மழையைக் கண்டுவிட்டால் அவர்கள், “(இது இறைவனின்) அருள்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)