அத்தியாயம்: 30, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3243

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عُثْمَانَ، عَنِ ابْنِ أَبِي عَمْرَةَ الأَنْصَارِيِّ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ، الْجُهَنِيِّ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ أَلاَ أُخْبِرُكُمْ بِخَيْرِ الشُّهَدَاءِ الَّذِي يَأْتِي بِشَهَادَتِهِ قَبْلَ أَنْ يُسْأَلَهَا ‏”‏ ‏

நபி (ஸல்), “சாட்சிகளில் சிறந்தவர் யாரென உங்களுக்கு நான் சொல்லட்டுமா?  கேட்டுக்கொள்ளாமல் தாமாக முன்வந்து சாட்சியமளிப்பவரே சாட்சிகளில் சிறந்தவர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)

அத்தியாயம்: 30, பாடம்: 8, ஹதீஸ் எண்: 3242

وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، جَمِيعًا عَنْ أَبِي عَامِرٍ، قَالَ عَبْدٌ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِيُّ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ :‏

سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنْ رَجُلٍ، لَهُ ثَلاَثَةُ مَسَاكِنَ فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا قَالَ يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِي مَسْكَنٍ وَاحِدٍ ثُمَّ قَالَ أَخْبَرَتْنِي عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ‏”‏ ‏.

நான் காஸிம் பின் முஹம்மது (ரஹ்) அவர்களிடம் “ஒருவருக்கு மூன்று வீடுகள் இருந்தன. அவர் அவற்றில் ஒவ்வொன்றிலும் மூன்றில் ஒரு பாகத்தைத் தர்மம் செய்வதாக இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டார்” என்று கூறி(விளக்கம் கோரி)னேன்.

அதற்குக் காஸிம் பின் முஹம்மது (ரஹ்), “அதை அனைத்தையும் சேர்த்து ஒரே வீட்டில் கணக்கிட்டு இறுதி விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் புதிதாகச் செய்கின்றாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்பட்டதாகும்’ என்று கூறினார்கள் என ஆயிஷா (ரலி) எனக்கு அறிவித்தார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக ஸஅத் பின் இப்ராஹீம் (ரஹ்)

அத்தியாயம்: 30, பாடம்: 8, ஹதீஸ் எண்: 3241

حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ، مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَعَبْدُ اللَّهِ بْنُ عَوْنٍ الْهِلاَلِيُّ جَمِيعًا عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ قَالَ ابْنُ الصَّبَّاحِ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، حَدَّثَنَا أَبِي، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ ‏”‏ ‏

“நம்முடைய இந்த (மார்க்க) விஷயத்தில், இதில் இல்லாத ஒன்றை யார் புதிதாகப் புகுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 30, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3240

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ‏ قَالَ :‏

كَتَبَ أَبِي – وَكَتَبْتُ لَهُ – إِلَى عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرَةَ وَهُوَ قَاضٍ بِسِجِسْتَانَ أَنْ لاَ تَحْكُمَ بَيْنَ اثْنَيْنِ وَأَنْتَ غَضْبَانُ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ لاَ يَحْكُمْ أَحَدٌ بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ ‏”‏


وَحَدَّثَنَاهُ يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، ح وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ح وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي كِلاَهُمَا، عَنْ شُعْبَةَ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، كُلُّ هَؤُلاَءِ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ بِمِثْلِ حَدِيثِ أَبِي عَوَانَةَ ‏.‏

என் தந்தை அபூபக்ரா (ரலி), (ஈரான்-ஆப்கானிஸ்தான் எல்லையின்) சிஜிஸ்தான் பகுதியில் நீதிபதியாக இருந்த (என் சகோதரர்) உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அதை நானே எழுதினேன். அதில்:

மகனே! நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்காதே! ஏனெனில், “கோபமாக இருக்கும்போது, இருவரிடையே யாரும் தீர்ப்பளிக்க வேண்டாம்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்று அறிவுறுத்தினார்கள்.

அறிவிப்பளர் : அபூபக்ரா (ரலி) வழியாக அன்னாரின் மகன் அப்துர் ரஹ்மான் (ரஹ்)

அத்தியாயம்: 30, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3239

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أُسَامَةَ بْنِ الْهَادِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي قَيْسٍ، مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ :‏

سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِذَا حَكَمَ الْحَاكِمُ فَاجْتَهَدَ ثُمَّ أَصَابَ فَلَهُ أَجْرَانِ ‏.‏ وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ ثُمَّ أَخْطَأَ فَلَهُ أَجْرٌ ‏”‏ ‏


وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ، كِلاَهُمَا عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ مُحَمَّدٍ بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ وَزَادَ فِي عَقِبِ الْحَدِيثِ قَالَ يَزِيدُ فَحَدَّثْتُ هَذَا الْحَدِيثَ أَبَا بَكْرِ بْنَ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ فَقَالَ هَكَذَا حَدَّثَنِي أَبُو سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ ‏.‏

وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا مَرْوَانُ، – يَعْنِي ابْنَ مُحَمَّدٍ الدِّمَشْقِيَّ – حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أُسَامَةَ بْنِ الْهَادِ اللَّيْثِيُّ، بِهَذَا الْحَدِيثِ مِثْلَ رِوَايَةِ عَبْدِ الْعَزِيزِ بْنِ مُحَمَّدٍ بِالإِسْنَادَيْنِ جَمِيعًا ‏.‏

“நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து, சரியான தீர்ப்பு வழங்குவாராயின், அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் ஆய்வு செய்து வழங்கிய தீர்ப்பு, பிழையானதென்றால் அவருக்கு ஒரு நன்மை உண்டு” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் அபூஉமர் வழி அறிவிப்பில், “இந்த ஹதீஸை நான் அபூபக்ரு பின் முஹம்மது பின் அம்ரு பின் ஹஸ்மு (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், இவ்வாறே அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அபூஸலமா (ரஹ்) எனக்கு அறிவித்தார்கள்’ என்று யஸீத் பின் அப்தில்லாஹ் (ரஹ்) கூறினார்கள்” என ஹதீஸின் இறுதியில் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 30, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3238

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ الثَّقَفِيُّ، عَنْ وَرَّادٍ قَالَ :‏

كَتَبَ الْمُغِيرَةُ إِلَى مُعَاوِيَةَ سَلاَمٌ عَلَيْكَ أَمَّا بَعْدُ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِنَّ اللَّهَ حَرَّمَ ثَلاَثًا وَنَهَى عَنْ ثَلاَثٍ حَرَّمَ عُقُوقَ الْوَالِدِ وَوَأْدَ الْبَنَاتِ وَلاَ وَهَاتِ ‏.‏ وَنَهَى عَنْ ثَلاَثٍ قِيلٍ وَقَالٍ وَكَثْرَةِ السُّؤَالِ وَإِضَاعَةِ الْمَالِ ‏”‏

“ஸலாமுன் அலைக்க (உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்); இறைவாழ்த்துக்குப் பின்! அல்லாஹ் மூன்று விஷயங்களைத் தடை செய்துள்ளான்; மூன்றை (வெறுத்து) விலக்கியுள்ளான். பெற்றோரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, (அடுத்தவருக்குரியதைத் தனக்குத்) தருமாறு கேட்பது ஆகியவற்றைத் தடை செய்துள்ளான். ‘(அவ்வாறு) சொல்லப்பட்டது’, ‘அவர் சொன்னார்’ என(ஆதாரமற்றதை)ப் பேசுவதையும், அதிகமாக (வீண்) கேள்வி கேட்பதையும், செல்வத்தை வீணாகச் செல்வழிப்பதையும் (வெறுத்து) விலக்கியுள்ளான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் கேட்டுள்ளேன்” என முஃகீரா (ரலி), முஆவியா (ரலி) அவர்களுக்கு (மடல்) எழுதினார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி) வழியாக அன்னாரின் எழுத்தர் வர்ராத் (ரஹ்)

அத்தியாயம்: 30, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3237

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، حَدَّثَنِي ابْنُ أَشْوَعَ، عَنِ الشَّعْبِيِّ، حَدَّثَنِي كَاتِبُ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ :‏

كَتَبَ مُعَاوِيَةُ إِلَى الْمُغِيرَةِ اكْتُبْ إِلَىَّ بِشَىْءٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَكَتَبَ إِلَيْهِ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِنَّ اللَّهَ كَرِهَ لَكُمْ ثَلاَثًا قِيلَ وَقَالَ وَإِضَاعَةَ الْمَالِ وَكَثْرَةَ السُّؤَالِ ‏”‏ ‏

முஆவியா (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற (ஹதீஸ்) ஒன்றை எனக்கு எழுதி அனுப்புங்கள்” என முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்.

அதற்கு முஃகீரா (ரலி), “அல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங்களை வெறுத்துள்ளான். ‘(அவ்வாறு) சொல்லப்பட்டது’, ‘அவர் சொன்னார்’ போன்ற(ஆதாரமற்ற)வற்றைப் பேசுவது, செல்வத்தை வீணாகச் செலவழிப்பது, அதிகமாக (வீண்)கேள்விகள் கேட்பது ஆகியவையே அவை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்று பதில் எழுதினார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி) வழியாக அன்னாரின் எழுத்தர் வர்ராத் (ரஹ்)

அத்தியாயம்: 30, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3236

وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ وَرَّادٍ، مَوْلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ :‏

عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَرَّمَ عَلَيْكُمْ عُقُوقَ الأُمَّهَاتِ وَوَأْدَ الْبَنَاتِ وَمَنْعًا وَهَاتِ وَكَرِهَ لَكُمْ ثَلاَثًا قِيلَ وَقَالَ وَكَثْرَةَ السُّؤَالِ وَإِضَاعَةَ الْمَالِ ‏”‏ ‏.‏


وَحَدَّثَنِي الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ شَيْبَانَ، عَنْ مَنْصُورٍ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ مِثْلَهُ ‏.‏ غَيْرَ أَنَّهُ قَالَ وَحَرَّمَ عَلَيْكُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ وَلَمْ يَقُلْ إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ ‏.‏

“அன்னையரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, (பிறருக்கு உரியதைத் தர) மறுப்பது, (பிறருக்குரியதைத் தனக்குத் தருமாறு) கேட்பது ஆகியவற்றை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். மேலும், ‘(அவ்வாறு) சொல்லப்பட்டது’, ‘அவர் சொன்னார்’ போன்ற(ஆதாரமற்ற)தைப் பேசுவது, அதிகமாகக் கேள்வி கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகிய மூன்றையும் உங்களுக்கு அல்லாஹ் வெறுத்துள்ளான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி)


குறிப்பு :

ஷைபான் (ரஹ்) வழி அறிவிப்பில், “… அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான்…” என்று இல்லாமல், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உங்களுக்குத் தடை செய்துள்ளார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 30, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3235

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِنَّ اللَّهَ يَرْضَى لَكُمْ ثَلاَثًا وَيَكْرَهُ لَكُمْ ثَلاَثًا فَيَرْضَى لَكُمْ أَنْ تَعْبُدُوهُ وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا وَأَنْ تَعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلاَ تَفَرَّقُوا وَيَكْرَهُ لَكُمْ قِيلَ وَقَالَ وَكَثْرَةَ السُّؤَالِ وَإِضَاعَةَ الْمَالِ ‏”‏


وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سُهَيْلٍ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ وَيَسْخَطُ لَكُمْ ثَلاَثًا ‏.‏ وَلَمْ يَذْكُرْ وَلاَ تَفَرَّقُوا ‏.‏

“அல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங்களை விரும்புகின்றான்; உங்களுக்கு மூன்று விஷயங்களை வெறுக்கின்றான்:

1-அல்லாஹ் ஒருவனையே வணங்குவதையும்
2-அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பதையும்
3- நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடிப்பதையும் பிரிந்துவிடாமலிருப்பதையும் விரும்புகின்றான்.

(1) ’சொல்லப்பட்டது’, ‘அவர் சொன்னார்’ என(ஆதாரமின்றி)ப் பேசுவதையும்,
(2) அதிகமாக(பயனற்ற)க் கேள்விகள் கேட்பதையும்,
(3) செல்வத்தை வீணாகச் செலவழிப்பதையும் அவன் வெறுக்கின்றான்”

என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அபூஅவானா (ரஹ்) வழி அறிவிப்பில், ‘வெறுக்கின்றான்’ என்பதைக் குறிக்க‚ ‘யக்ரஹு’ என்பதற்குப் பகரமாக ‘யஸ்க(த்)து’ என இடம்பெற்றுள்ளது. “பிரிந்துவிடாமலிருப்பதையும் …” என்பது இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 30, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3234

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَخِي الزُّهْرِيِّ، عَنْ عَمِّهِ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ :‏

جَاءَتْ هِنْدٌ بِنْتُ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ مَا كَانَ عَلَى ظَهْرِ الأَرْضِ خِبَاءٌ أَحَبَّ إِلَىَّ مِنْ أَنْ يَذِلُّوا مِنْ أَهْلِ خِبَائِكَ وَمَا أَصْبَحَ الْيَوْمَ عَلَى ظَهْرِ الأَرْضِ خِبَاءٌ أَحَبَّ إِلَىَّ مِنْ أَنْ يَعِزُّوا مِنْ أَهْلِ خِبَائِكَ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ وَأَيْضًا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ‏”‏ ‏.‏ ثُمَّ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ مِسِّيكٌ فَهَلْ عَلَىَّ حَرَجٌ مِنْ أَنْ أُطْعِمَ مِنَ الَّذِي لَهُ عِيَالَنَا فَقَالَ لَهَا ‏”‏ لاَ إِلاَّ بِالْمَعْرُوفِ ‏”‏

ஹிந்த் பின்த்தி உத்பா பின் ரபீஆ (ரலி) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்) இப்பூமியின் மேலுள்ள வேறெந்த குடும்பத்தார் இழிவடைவதையும்விட உங்கள் குடும்பத்தார் இழிவடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. (நான் இஸ்லாத்தை ஏற்ற பிறகு) இன்று இப்பூமியின் மேலுள்ள வேறெந்த குடும்பத்தார் கண்ணியம் அடைவதையும்விட உங்கள் குடும்பத்தார் கண்ணியம் அடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக மாறிவிட்டது” என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “என் உயிர் கையிலுள்ள அ(ந்த ஏக இறை)வன் மீதாணையாக! உனது இந்த விருப்பம் மேன்மேலும் அதிகரிக்கும்” என்று கூறினார்கள்.

பிறகு ஹிந்த் பின்த்தி உத்பா (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூஸுஃப்யான் கருமியான மனிதர். அவருக்குரிய(செல்வத்)திலிருந்து (அவருக்குத் தெரியாமல்) எங்கள் பிள்ளைகளுக்கு நான் உணவளித்தால் அது என்மீது குற்றமாகுமா?” என்று கேட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ நியாயமான அளவுக்கு எடுத்தால் குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)