அத்தியாயம்: 1, பாடம்: 1.23, ஹதீஸ் எண்: 85

حَدَّثَنَا ‏ ‏سُرَيْجُ بْنُ يُونُسَ ‏ ‏وَيَعْقُوبُ الدَّوْرَقِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏سَيَّارٍ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏قَالَ :‏

‏بَايَعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فَلَقَّنَنِي فِيمَا اسْتَطَعْتَ وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ ‏


قَالَ ‏ ‏يَعْقُوبُ ‏ ‏فِي رِوَايَتِهِ قَالَ حَدَّثَنَا ‏ ‏سَيَّارٌ

“ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலன் நாடுவேன்; (நீங்கள் கட்டளையிடுவதைச்) சிரமேற்றுச் செய்து முடிப்பேன்” என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி (பைஅத்) அளித்தபோது, “என்னால் இயன்றவரை என்று சேர்த்துச் சொல்” என்று திருத்தினார்கள்.

அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.23, ஹதீஸ் எண்: 84

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏زِيَادِ بْنِ عِلَاقَةَ ‏ ‏سَمِعَ ‏ ‏جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُا :

‏بَايَعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى النُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ

ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலன் நாடுவேன் என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் உறுதிமொழி (பைஅத்) அளித்தேன்.

அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 1.23, ஹதீஸ் எண்: 83

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏وَأَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ أَبِي خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏قَالَ ‏:

‏بَايَعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى إِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ

நான் தொழுகையை முறையாகக் கடைபிடிப்பேன் என்றும் ஜகாத் செலுத்துவேன் என்றும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலன் நாடுவேன் என்றும் அலாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் உறுதிமொழி (பைஅத்) அளித்தேன்.

அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 1.23, ஹதீஸ் எண்: 82

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبَّادٍ الْمَكِّيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِسُهَيْلٍ ‏ ‏إِنَّ ‏ ‏عَمْرًا ‏ ‏حَدَّثَنَا عَنْ ‏ ‏الْقَعْقَاعِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيكَ ‏ ‏قَالَ وَرَجَوْتُ أَنْ يُسْقِطَ عَنِّي رَجُلًا قَالَ فَقَالَ سَمِعْتُهُ مِنْ الَّذِي سَمِعَهُ مِنْهُ أَبِي كَانَ صَدِيقًا لَهُ ‏ ‏بِالشَّامِ ‏ ‏ثُمَّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏تَمِيمٍ الدَّارِيِّ :‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الدِّينُ النَّصِيحَةُ قُلْنَا لِمَنْ قَالَ لِلَّهِ وَلِكِتَابِهِ وَلِرَسُولِهِ وَلِأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ ‏


حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ ‏ ‏عَنْ ‏ ‏تَمِيمٍ الدَّارِيِّ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أُمَيَّةُ بْنُ بِسْطَامَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحٌ وَهُوَ ابْنُ الْقَاسِمِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُهَيْلٌ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَزِيدَ ‏ ‏سَمِعَهُ وَهُوَ يُحَدِّثُ ‏ ‏أَبَا صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏تَمِيمٍ الدَّارِيِّ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ

நபி (ஸல்), “மார்க்கம் (தீன்) என்பதே நலன் நாடுவதுதான்” என்று கூறினார்கள். நாங்கள், “யாருக்கு?” என்று கேட்டோம். நபி (ஸல்), “அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும்” என பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : தமீமுத்தாரீ (ரலி).


குறிப்பு :

இந்த ஹதீஸை, ஸுஃப்யான் (ரஹ்), ஸுஹைல் (ரஹ்) அவர்களிடம் அறிவிக்கும்போது, “உங்கள் தந்தை வழியாக அல்-கஅகாவும் அவர் வழியாக அம்ரும் இந்த ஹதீஸை எமக்கு அறிவித்தனர்” என்று தெரிவித்தார். அதற்கு ஸுஹைல், “எனக்கும் என் தந்தைக்குமிடையில் இன்னொருவர் வராதிருக்கவே நான் விரும்புகிறேன். என் தந்தை செவியுற்ற(அதா பின் யஸீத் என்ப)வரிடமிந்து நானும் (இந்த ஹதீஸை நேரடியாகச்) செவியுற்றிருக்கின்றேன். அவர் சிரியாவில் வைத்து என் தந்தைக்கு நண்பரானவர்” எனக் கூறிவிட்டு, “தமீமுத்தாரீ (ரலி) வழியாக அதா பின் யஸீத் எனக்கு அறிவித்தார் …” என்று தொடங்கி மேற்காணும் முழு ஹதீஸின் சொற்களையும் அறிவித்தார்.