அத்தியாயம்: 1, பாடம்: 61, ஹதீஸ் எண்: 200

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْوَلِيدِ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ بْنِ وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏وَائِلِ بْنِ حُجْرٍ ‏ ‏قَالَ :‏ ‏

كُنْتُ عِنْدَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَتَاهُ رَجُلَانِ يَخْتَصِمَانِ فِي أَرْضٍ فَقَالَ أَحَدُهُمَا إِنَّ هَذَا ‏ ‏انْتَزَى ‏ ‏عَلَى أَرْضِي يَا رَسُولَ اللَّهِ فِي الْجَاهِلِيَّةِ وَهُوَ ‏ ‏امْرُؤُ الْقَيْسِ بْنُ عَابِسٍ الْكِنْدِيُّ ‏ ‏وَخَصْمُهُ ‏ ‏رَبِيعَةُ بْنُ عِبْدَانَ ‏ ‏قَالَ ‏ ‏بَيِّنَتُكَ ‏ ‏قَالَ لَيْسَ لِي بَيِّنَةٌ قَالَ يَمِينُهُ قَالَ إِذَنْ يَذْهَبُ بِهَا قَالَ لَيْسَ لَكَ إِلَّا ذَاكَ قَالَ فَلَمَّا قَامَ لِيَحْلِفَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ ‏ ‏اقْتَطَعَ ‏ ‏أَرْضًا ظَالِمًا لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ ‏


قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏فِي رِوَايَتِهِ ‏ ‏رَبِيعَةُ بْنُ عَيْدَانَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு நான் இருந்தபோது, ஒரு நிலம் தொடர்பான வழக்கை இருவர் கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! அறியாமைக் காலத்தில் இவர், எனது நிலத்தை ஆக்ரமித்துக் கொண்டார்” என்று கூறினார். (அந்த வழக்குவாதியான) அவர், இம்ரஉல் கைஸ் பின் ஆபிஸ் அல்கிந்தீ என்பவராவார். அவருடைய பிரதிவாதி, ரபீஆ பின் இப்தான் என்பவராவார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உமது ஆதாரம் என்ன?” என்று (வாதியிடம்) கேட்டார்கள். அதற்கு அவர், “என்னிடம் ஆதாரம் ஏதுமில்லை” என்று பதிலளித்தார். “எனில், (பிரதிவாதியான) இவரது சத்தியம்தான் (தீர்வு)” என்று சொன்னார்கள். “அவர் (பொய்ச் சத்தியம் செய்து) அந்த நிலத்தைத் தட்டிக் கொண்டு போய்விடுவார்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இதைத் தவிர உம(து வழக்கு)க்கு வேறு தீர்வில்லை” என்று கூறினார்கள். சத்தியம் செய்வதற்காக பிரதிவாதி எழுந்தபோது, “அநியாயமாக ஒரு நிலத்தை அபகரித்துக் கொள்பவர், தம்மீது கோபம் கொண்ட நிலையிலேயே (மறுமையில்) அல்லாஹ்வைச் சந்திப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : வாஇல் பின் ஹுஜ்ரு (ரலி)


குறிப்பு:

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) வழி அறிவிப்பில், பிரதிவாதியின் பெயரான ரபீஆ பின் இப்தான் என்பதற்கு பதிலாக ரபீஆ பின் அய்தான் என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 61, ஹதீஸ் எண்: 199

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَهَنَّادُ بْنُ السَّرِيِّ ‏ ‏وَأَبُو عَاصِمٍ الْحَنَفِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِقُتَيْبَةَ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ بْنِ وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏:‏

جَاءَ رَجُلٌ مِنْ ‏ ‏حَضْرَمَوْتَ ‏ ‏وَرَجُلٌ مِنْ ‏ ‏كِنْدَةَ ‏ ‏إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏الْحَضْرَمِيُّ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذَا قَدْ غَلَبَنِي عَلَى أَرْضٍ لِي كَانَتْ لِأَبِي فَقَالَ الْكِنْدِيُّ هِيَ أَرْضِي فِي يَدِي أَزْرَعُهَا لَيْسَ لَهُ فِيهَا حَقٌّ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِلْحَضْرَمِيِّ أَلَكَ ‏ ‏بَيِّنَةٌ ‏ ‏قَالَ لَا قَالَ فَلَكَ يَمِينُهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الرَّجُلَ فَاجِرٌ لَا يُبَالِي عَلَى مَا حَلَفَ عَلَيْهِ وَلَيْسَ يَتَوَرَّعُ مِنْ شَيْءٍ فَقَالَ لَيْسَ لَكَ مِنْهُ إِلَّا ذَلِكَ فَانْطَلَقَ لِيَحْلِفَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمَّا أَدْبَرَ ‏ ‏أَمَا لَئِنْ حَلَفَ عَلَى مَالِهِ لِيَأْكُلَهُ ظُلْمًا لَيَلْقَيَنَّ اللَّهَ وَهُوَ عَنْهُ مُعْرِضٌ ‏

நபி (ஸல்) அவர்களிடம் (யமன் நாட்டிலுள்ள) ‘ஹள்ர மவ்த்’ எனும் இடத்தைச் சேர்ந்த (ஹள்ரமீ) ஒருவரும் ‘கிந்தா’ எனும் குலத்தைச் சேர்ந்த (கிந்தீ) இன்னொருவரும் வந்தனர். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தைக்குச் சொந்தமான நிலத்தை இவர் பறித்துக் கொண்டுவிட்டார்” என்று ஹள்ரமீ வழக்குரைத்தார். அதற்கு, “அது என் கைவசமுள்ள என்னுடைய நிலம்; அதில் நான் விவசாயம் செய்து வருகின்றேன்; அதில் இவருக்கு எந்த உரிமையும் கிடையாது” என்று கிந்தீ மறுப்புரைத்தார்.

ஹள்ரமீயிடம், “உம்மிடம் ஆதாரம் ஏதும் உண்டா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள். அவர், “‘இல்லை” என்று பதிலளித்தார். “எனில், அவரது சத்தியம்தான் உமக்கு(த் தீர்வு)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். “அவர் பொல்லாதவர்; தாம் எதற்குச் சத்தியம் செய்கிறோம் என்பதைப் பற்றி அவர் கவலைப்படமாட்டார்; விவகாரம் என்று வந்துவிட்டால் நேர்மையைப் பற்றி அவர் சிந்தித்தும் பார்ப்பவரல்லர்” என்று ஹள்ரமீ கூறினார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இதைத் தவிர உம(து வழக்கு)க்கு வேறு தீர்வில்லை” என்று கூறினார்கள். சத்தியம் செய்வதற்காக (கிந்தீ) கிளம்பினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இவருடைய செல்வத்தை உண்பதற்காக அநியாயமாக அவர் பொய்ச் சத்தியம் செய்தால், அவரைப் புறக்கணிக்கும் நிலையிலேயே (மறுமையில்) அல்லாஹ்வைச் சந்திப்பார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : வாஇல் பின் ஹுஜ்ரு (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 61, ஹதீஸ் எண்: 198

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏جَامِعِ بْنِ أَبِي رَاشِدٍ ‏ ‏وَعَبْدِ الْمَلِكِ بْنِ أَعْيَنَ ‏ ‏سَمِعَا ‏ ‏شَقِيقَ بْنَ سَلَمَةَ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏ابْنَ مَسْعُودٍ ‏ ‏يَقُولُ ‏:‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ حَلَفَ عَلَى مَالِ امْرِئٍ مُسْلِمٍ بِغَيْرِ حَقِّهِ لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏ثُمَّ قَرَأَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِصْدَاقَهُ مِنْ كِتَابِ اللَّهِ ‏[‏إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا] ‏إِلَى آخِرِ الْآيَةِ ‏

“தனக்கு உரிமையில்லாத, ஒரு முஸ்லிமுடைய சொத்தைப் பறித்துக் கொள்வதற்காகத் தன்னிலை நிரூபணத்தில் பொய்ச் சத்தியம் செய்பவர், அல்லாஹ்வை (மறுமையில்) அவர்மீது கோபம் கொண்ட நிலையில்தான் சந்திப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். பின்னர், அதை உறுதிப் படுத்துவதற்காக, “யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும் தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ …” என்ற அல்லாஹ்வின் (3:77ஆவது) வேதவசனத்தை இறுதிவரை எங்களுக்கு ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 61, ஹதீஸ் எண்: 197

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ :‏ ‏

عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ حَلَفَ عَلَى يَمِينِ ‏ ‏صَبْرٍ ‏ ‏يَقْتَطِعُ ‏ ‏بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ هُوَ فِيهَا فَاجِرٌ لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ. ‏‏قَالَ فَدَخَلَ ‏ ‏الْأَشْعَثُ بْنُ قَيْسٍ ‏ ‏فَقَالَ مَا يُحَدِّثُكُمْ ‏ ‏أَبُو عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏قَالُوا كَذَا وَكَذَا قَالَ صَدَقَ ‏ ‏أَبُو عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏فِيَّ نَزَلَتْ كَانَ بَيْنِي وَبَيْنَ ‏ ‏رَجُلٍ ‏ ‏أَرْضٌ ‏ ‏بِالْيَمَنِ ‏ ‏فَخَاصَمْتُهُ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏هَلْ لَكَ بَيِّنَةٌ فَقُلْتُ لَا قَالَ فَيَمِينُهُ قُلْتُ إِذَنْ يَحْلِفُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عِنْدَ ذَلِكَ مَنْ حَلَفَ عَلَى يَمِينِ ‏ ‏صَبْرٍ ‏ ‏يَقْتَطِعُ ‏ ‏بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ هُوَ فِيهَا فَاجِرٌ لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ فَنَزَلَتْ ‏[‏إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا ‏] ‏إِلَى آخِرِ الْآيَةِ ‏ ‏


حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ يَسْتَحِقُّ بِهَا مَالًا هُوَ فِيهَا فَاجِرٌ لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ كَانَتْ بَيْنِي وَبَيْنَ ‏ ‏رَجُلٍ ‏ ‏خُصُومَةٌ فِي بِئْرٍ ‏ ‏فَاخْتَصَمْنَا ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ شَاهِدَاكَ أَوْ يَمِينُهُ

“ஒரு முஸ்லிமுடைய சொத்தைப் பறித்துக் கொள்வதற்காகத் தன்னிலை நிரூபணத்தில் பொய்ச் சத்தியம் செய்பவர், அல்லாஹ்வை (மறுமையில்) அவர்மீது கோபம் கொண்ட நிலையில்தான் சந்திப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) (மக்களிடம்) கூறியிருந்தார். அவ்வேளை, அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அங்கு வந்து, “உங்களிடம் அபூஅப்திர் ரஹ்மான் (இப்னு மஸ்ஊது) கூறியதென்ன?” என்று மக்களிடம் கேட்டார். “அவர் இன்னின்னவாறு கூறினார்” என்று மக்கள் பதிலுரைத்தனர். “அபூஅப்திர் ரஹ்மான் (இப்னு மஸ்ஊது) உண்மையுரைத்தார். யமனில் உள்ள ஒரு நிலத்துண்டு (தொடர்பாக) எனக்கும் இன்னொருவருக்கும் (சச்சரவு) இருந்தது. அந்த வழக்கை நான் அல்லாஹ்வின் தூதரிடம் முறையிட்டேன். “உம்மிடம் நிரூபணச் சான்றேதுமுண்டா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் கேட்க, நான் “இல்லை” என்றேன். “எனில், (பிரதிவாதியான) அவர் சத்தியம் செய்ய வேண்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். “அவர் (பொய்ச்) சத்தியம் செய்து விடுவார்” என்றேன். அதற்கு, “ஒரு முஸ்லிமுடைய சொத்தைப் பறித்துக் கொள்வதற்காகத் தன்னிலை நிரூபணத்தில் பொய்ச்சத்தியம் செய்பவர், அல்லாஹ்வை (மறுமையில்) அவர்மீது கோபம் கொண்ட நிலையில்தான் சந்திப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அப்போதுதான், “அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும் தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றவர்களை …” என்ற (3:77ஆவது) வசனம் அருளப்பட்டது என்று விவரித்தார்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).


குறிப்பு :

அபூவாஇல் (ரஹ்) வழி அறிவிப்பு, “(பிறர்) பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொய்ச் சத்தியம் செய்பவர், அல்லாஹ்வை (மறுமையில்) அவர்மீது கோபம் கொண்ட நிலையில்தான் சந்திப்பார் …” என்று தொடங்குகிறது. அதில், “எனக்கும் இன்னொருவருக்கும் ஒரு கிணற்றுத் தகராறு இருந்தது. ஆகவே, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றோம். அவர்கள் என்னிடம், (தீர்ப்புக்குத் தேவை) உம்முடைய இரு சாட்சிகள், அல்லது அவரது சத்தியம் என்று கூறினார்கள்” என இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 61, ஹதீஸ் எண்: 196

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏الْعَلَاءُ وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏مَوْلَى ‏ ‏الْحُرَقَةِ ‏ ‏عَنْ ‏ ‏مَعْبَدِ بْنِ كَعْبٍ السَّلَمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَخِيهِ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أُمَامَةَ ‏:‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ ‏ ‏اقْتَطَعَ ‏ ‏حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ فَقَدْ أَوْجَبَ اللَّهُ لَهُ النَّارَ وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ فَقَالَ لَهُ رَجُلٌ وَإِنْ كَانَ شَيْئًا يَسِيرًا يَا رَسُولَ اللَّهِ قَالَ وَإِنْ ‏ ‏قَضِيبًا ‏ ‏مِنْ ‏ ‏أَرَاكٍ ‏


و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ بْنِ كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ كَعْبٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَخَاهُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ ‏ ‏يُحَدِّثُ أَنَّ ‏ ‏أَبَا أُمَامَةَ الْحَارِثِيَّ ‏ ‏حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ ‏

“ஒரு முஸ்லிமுக்குச் சொந்தமானதைப் பொய்ச் சத்தியம் செய்து கைப்பற்றுபவருக்கு அல்லாஹ் நரகத்தைக் கட்டாயமாக்கிவிட்டான்; சொர்க்கத்தைத் தடை செய்துவிட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

“அஃது ஓர் எளிய பொருளாக இருந்தாலுமா அல்லாஹ்வின் தூதரே?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(ஆம்! அது,) பல்துலக்கும் குச்சியாக இருந்தாலும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஉமாமா இயாஸ் பின் ஸஅலபா அல் ஹாரிஸீ (ரலி)