அத்தியாயம்: 1, பாடம்: 84, ஹதீஸ் எண்: 278

حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏رَوْحٍ ‏ ‏قَالَ ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحُ بْنُ عُبَادَةَ الْقَيْسِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏
‏يُسْأَلُ عَنْ الْوُرُودِ فَقَالَ ‏ ‏نَجِيءُ نَحْنُ يَوْمَ الْقِيَامَةِ عَنْ كَذَا وَكَذَا انْظُرْ أَيْ ذَلِكَ فَوْقَ النَّاسِ قَالَ ‏ ‏فَتُدْعَى الْأُمَمُ بِأَوْثَانِهَا وَمَا كَانَتْ تَعْبُدُ الْأَوَّلُ فَالْأَوَّلُ ثُمَّ يَأْتِينَا رَبُّنَا بَعْدَ ذَلِكَ فَيَقُولُ مَنْ تَنْظُرُونَ فَيَقُولُونَ نَنْظُرُ رَبَّنَا فَيَقُولُ أَنَا رَبُّكُمْ فَيَقُولُونَ حَتَّى نَنْظُرَ إِلَيْكَ ‏ ‏فَيَتَجَلَّى لَهُمْ يَضْحَكُ قَالَ فَيَنْطَلِقُ بِهِمْ وَيَتَّبِعُونَهُ وَيُعْطَى كُلُّ إِنْسَانٍ مِنْهُمْ مُنَافِقٍ أَوْ مُؤْمِنٍ نُورًا ثُمَّ يَتَّبِعُونَهُ وَعَلَى جِسْرِ جَهَنَّمَ ‏ ‏كَلَالِيبُ ‏ ‏وَحَسَكٌ ‏ ‏تَأْخُذُ مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ يُطْفَأُ نُورُ الْمُنَافِقِينَ ثُمَّ يَنْجُو الْمُؤْمِنُونَ ‏ ‏فَتَنْجُو أَوَّلُ ‏ ‏زُمْرَةٍ ‏ ‏وُجُوهُهُمْ كَالْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ سَبْعُونَ أَلْفًا لَا يُحَاسَبُونَ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ‏ ‏كَأَضْوَإِ نَجْمٍ فِي السَّمَاءِ ثُمَّ كَذَلِكَ ثُمَّ تَحِلُّ الشَّفَاعَةُ وَيَشْفَعُونَ حَتَّى يَخْرُجَ مِنْ النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنْ الْخَيْرِ مَا يَزِنُ شَعِيرَةً فَيُجْعَلُونَ بِفِنَاءِ الْجَنَّةِ وَيَجْعَلُ أَهْلُ الْجَنَّةِ يَرُشُّونَ عَلَيْهِمْ الْمَاءَ حَتَّى يَنْبُتُوا نَبَاتَ الشَّيْءِ فِي السَّيْلِ وَيَذْهَبُ حُرَاقُهُ ثُمَّ يَسْأَلُ حَتَّى تُجْعَلَ لَهُ الدُّنْيَا وَعَشَرَةُ أَمْثَالِهَا مَعَهَا ‏

“மறுமை நாளில் நாம் இன்னின்னவாறு எல்லாருக்கும் உயரே வருவோம். அப்போது ஒவ்வொரு சமுதாயத்தாரும் அவரவர் வணங்கிய சிலைகளுடனும் வரிசையாக அழைக்கப்படுவர். பிறகு நம்மிடம் நம் இறைவன் வந்து, ‘நீங்கள் யாரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்பான். அப்போது (ஓரிறை நம்பிக்கையுள்ள) மக்கள், ‘நாங்கள் எங்கள் இறைவனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என்று பதிலளிப்பார்கள். அவன், ‘நான் தான் உங்கள் இறைவன்’ என்பான். மக்கள், ‘நாங்கள் உன்னைப் பார்க்காதவரை (உறுதி கொள்ள மாட்டோம்)’ என்று கூறுவார்கள். ஆகவே, இறைவன் சிரித்தபடி அவர்களிடையே காட்சியளிப்பான். அப்போது அவர்களிலுள்ள நம்பிக்கையாளர் (முஃமின்), நயவஞ்சகர் (முனாஃபிக்) ஆகிய ஒவ்வொருவருக்கும் ஓர் ஒளி வழங்கப்படும். அவர்கள் அந்த ஒளியைப் பின் தொடர்ந்து செல்வார்கள். நரகத்தின் (மேல் அமைக்கப்பட்டிருக்கும்) பாலத்தின் மீது கொக்கிகளும் முட்களும் இருக்கும். அவை அல்லாஹ் நாடிய சிலரை (அவரவர் தீமைக்கேற்ப) கவ்விப் பிடிக்கும். பிறகு நயவஞ்சகர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஒளி அணைக்கப்பட்டு விடும். அதன் பிறகு நம்பிக்கையாளர்கள் மட்டும் (அந்தப் பாலத்தைக் கடந்து) தப்பிச் செல்வார்கள். தப்பிச் செல்லும் முதல்கூட்டத்தில், பௌர்ணமி இரவின் முழு நிலவைப் போன்று ஒளிரும் முகத்தவர் எழுபதாயிரம் பேர் இருப்பர். அவர்களிடம் எந்த விசாரணையும் நடத்தப்படாது. பிறகு அவர்களைத் தொடர்ந்து வரும் கூட்டத்தார் வானத்துத் தாரகைகள் போன்று ஜொலிப்பர். இவ்வாறே அடுத்தடுத்து வருபவர்களும் (அவர்களது நன்மைகளுக்கேற்ப இலங்குவர்).

பிறகு பரிந்துரை (ஷஃபாஅத்) நடைபெறும். ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை’ என்று கூறிய எவரது உள்ளத்திலும் வாற்கோதுமையளவு நன்மை இருந்தாலும் அவர் நரகத்திலிருந்து வெளியேறும்வரை (பரிந்துரைக்கு அனுமதி பெற்றவர்கள்) அவருக்காகப் பரிந்துரைப்பார்கள். அவ்வாறு நரகத்திலிருந்து வெளியேற்றப்படுபவர்கள் சொர்க்கத்தின் தாழ்வாரத்தில் வைக்கப்படுவார்கள். அவர்கள் மீது சொர்க்கவாசிகள் (ஜீவ)நீரைத் தெளிப்பார்கள். வெள்ளத்தில் மிதந்து வரும் விதைப்பயிர் முளைப்பதைப் போன்று (பொலிவுடன்) அவர்கள் எழுகின்றவரையில் (ஜீவ)நீர் தெளிக்கப்பட்டு, அவர்கள் மீதிருந்த தீக்காயங்கள் மறைந்து விடும். தமக்கு உலகமும் இன்னும் அதைப் போன்று பத்து மடங்கும் (சொர்க்கத்தில்) கிடைக்கும்வரை வேண்டிக்கொண்டே இருப்பர்”.

குறிப்பு:

“மேலும், உங்களில் எவரும் அதைக் கடக்காமல் முடியாது …” என்ற 19:71 இறைவசனம் பற்றிய விளக்கம் கேட்கப் பட்டபோது ஜாபிர் (ரலி) அவர்கள் மேற்கண்டவாறு விளக்கம் கூறியதாக இடம்பெற்று உள்ளது. (நபி (ஸல்) அவர்களைப் பற்றி இதில் குறிப்பிடப் படவில்லை).

அத்தியாயம்: 1, பாடம்: 84, ஹதீஸ் எண்: 277

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنِّي لَأَعْلَمُ آخِرَ أَهْلِ الْجَنَّةِ دُخُولًا الْجَنَّةَ وَآخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنْهَا رَجُلٌ يُؤْتَى بِهِ يَوْمَ الْقِيَامَةِ فَيُقَالُ اعْرِضُوا عَلَيْهِ صِغَارَ ذُنُوبِهِ وَارْفَعُوا عَنْهُ كِبَارَهَا فَتُعْرَضُ عَلَيْهِ صِغَارُ ذُنُوبِهِ فَيُقَالُ عَمِلْتَ يَوْمَ كَذَا وَكَذَا كَذَا وَكَذَا وَعَمِلْتَ يَوْمَ كَذَا وَكَذَا كَذَا وَكَذَا فَيَقُولُ نَعَمْ لَا يَسْتَطِيعُ أَنْ يُنْكِرَ وَهُوَ مُشْفِقٌ مِنْ كِبَارِ ذُنُوبِهِ أَنْ تُعْرَضَ عَلَيْهِ فَيُقَالُ لَهُ فَإِنَّ لَكَ مَكَانَ كُلِّ سَيِّئَةٍ حَسَنَةً فَيَقُولُ رَبِّ قَدْ عَمِلْتُ أَشْيَاءَ لَا أَرَاهَا هَا هُنَا فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ضَحِكَ حَتَّى بَدَتْ ‏ ‏نَوَاجِذُهُ ‏
‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

“சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார்?; நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார்? என்று நான் நன்கறிவேன். மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்படுவார். அப்போது, ‘இவர் புரிந்த சிறு பாவங்களை இவருக்கு எடுத்துக் காட்டுங்கள்! இவர் புரிந்த பெரும்பாவங்களை இவரை விட்டு நீக்கிவிடுங்கள்!’ என்று கூறப்படும். அவ்வாறே அவருக்கு அவர் புரிந்த சிறுபாவங்கள் எடுத்துக் காட்டப்பட்டு, ‘நீ இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன(பாவத்)தைச் செய்திருக்கிறாய்; இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன(பாவத்)தைச் செய்திருக்கிறாய்’ என்று கூறப்படும். அவரும் ‘ஆம்’ என்று கூறுவார்; அவரால் எதையும் மறுக்க முடியாது. தாம் செய்த பெரும் பாவங்கள் தம்மிடம் எடுத்துக் காட்டப்படுமோ என்றும் அஞ்சிக் கொண்டிருப்பார். அந்நிலையில் அவரிடம், ‘நீ செய்த ஒவ்வொரு (சிறு) தீமைக்கும் ஈடாக ஒரு நன்மை உனக்கு உண்டு’ என்று கூறப்படும். அப்போது அவர், ‘இறைவா! நான் இன்னும் பல (பெரும் பாவச்) செயல்களைப் புரிந்திருந்தேனே! அவற்றையெல்லாம் இங்கு நான் காணவில்லையே!’ என்று கேட்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

இதைக் கூறும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 84, ஹதீஸ் எண்: 276

حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ عَمْرٍو الْأَشْعَثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُطَرِّفٍ ‏ ‏وَابْنِ أَبْجَرَ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ ‏ ‏رِوَايَةً ‏ ‏إِنْ شَاءَ اللَّهُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُطَرِّفُ بْنُ طَرِيفٍ ‏ ‏وَعَبْدُ الْمَلِكِ بْنُ سَعِيدٍ ‏ ‏سَمِعَا ‏ ‏الشَّعْبِيَّ ‏ ‏يُخْبِرُ عَنْ ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏قَالَ سَمِعْتُهُ ‏ ‏عَلَى الْمِنْبَرِ يَرْفَعُهُ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏بِشْرُ بْنُ الْحَكَمِ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُطَرِّفٌ ‏ ‏وَابْنُ أَبْجَرَ ‏ ‏سَمِعَا ‏ ‏الشَّعْبِيَّ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ ‏ ‏يُخْبِرُ بِهِ النَّاسَ عَلَى الْمِنْبَرِ قَالَ ‏ ‏سُفْيَانُ ‏ ‏رَفَعَهُ أَحَدُهُمَا أُرَاهُ ‏ ‏ابْنَ أَبْجَرَ ‏ ‏قَالَ ‏
‏سَأَلَ ‏ ‏مُوسَى ‏ ‏رَبَّهُ ‏ ‏مَا أَدْنَى أَهْلِ الْجَنَّةِ مَنْزِلَةً قَالَ هُوَ رَجُلٌ يَجِيءُ بَعْدَ مَا أُدْخِلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ فَيُقَالُ لَهُ ادْخُلْ الْجَنَّةَ فَيَقُولُ أَيْ رَبِّ كَيْفَ وَقَدْ نَزَلَ النَّاسُ مَنَازِلَهُمْ وَأَخَذُوا ‏ ‏أَخَذَاتِهِمْ ‏ ‏فَيُقَالُ لَهُ ‏ ‏أَتَرْضَى أَنْ يَكُونَ لَكَ مِثْلُ مُلْكِ مَلِكٍ مِنْ مُلُوكِ الدُّنْيَا فَيَقُولُ رَضِيتُ رَبِّ فَيَقُولُ لَكَ ذَلِكَ وَمِثْلُهُ وَمِثْلُهُ وَمِثْلُهُ وَمِثْلُهُ فَقَالَ فِي الْخَامِسَةِ رَضِيتُ رَبِّ فَيَقُولُ هَذَا لَكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ وَلَكَ مَا اشْتَهَتْ نَفْسُكَ وَلَذَّتْ عَيْنُكَ فَيَقُولُ رَضِيتُ رَبِّ قَالَ رَبِّ فَأَعْلَاهُمْ مَنْزِلَةً قَالَ أُولَئِكَ الَّذِينَ ‏ ‏أَرَدْتُ ‏ ‏غَرَسْتُ كَرَامَتَهُمْ بِيَدِي وَخَتَمْتُ عَلَيْهَا فَلَمْ تَرَ عَيْنٌ وَلَمْ تَسْمَعْ أُذُنٌ وَلَمْ يَخْطُرْ عَلَى قَلْبِ بَشَرٍ قَالَ وَمِصْدَاقُهُ فِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ ‏: ‏فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ ‏

‏الْآيَةَ ‏
‏حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ الْأَشْجَعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ أَبْجَرَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الشَّعْبِيَّ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ ‏ ‏يَقُولُا ‏ ‏عَلَى الْمِنْبَرِ إِنَّ ‏ ‏مُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏سَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ عَنْ ‏ ‏أَخَسِّ ‏ ‏أَهْلِ الْجَنَّةِ مِنْهَا حَظًّا ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِهِ ‏

“மூஸா (அலை) அவர்கள் இறைவனிடம், ‘சொர்க்கவாசிகளுள் மிகக் குறைந்த பதவி உடையவர் யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு, ‘சொர்க்கவாசிகள் அனைவரும் சொர்க்கத்திற்குள் நுழைந்த பிறகு ஒருவர் வருவார். அவரிடம் நீ (சென்று) சொர்க்கத்திற்குள் நுழைந்துகொள்! என்று கூறப்படும். அதற்கு அவர், இறைவா! எப்படி (நான் நுழைவேன்)? மக்கள் அனைவரும் அவரவர் இருப்பிடங்களைப் பிடித்துக்கொண்டு தமக்குக் கிடைத்ததை எடுத்துக் கொண்டு விட்டார்களே? என்று கூறுவார். அவரிடம், உலக அரசர்களில் ஒருவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியைப் போன்று உனக்குக் கிடைத்தால் திருப்தி தானே? என்று கேட்கப்படும். அதற்கு அவர், திருப்தியடைவேன் இறைவா! என்பார். அப்போது, அதுவும் உனக்குக் கிடைக்கும்; அதைப் போன்று இன்னொரு மடங்கும் அதைப் போன்று இன்னொரு மடங்கும் அதைப் போன்று இன்னொரு மடங்கும் அதைப் போன்று இன்னொரு மடங்கும் என்று இறைவன் குறிப்பிடுவான். ஐந்தாம் மடங்கு பற்றிக் கூறும்போது அவர், திருப்தியடைந்து விட்டேன் இறைவா! என்பார். மேலும், இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும். உன் மனம் விரும்புகின்ற, உன் பார்வை இரசிக்கின்ற அனைத்தும் உனக்குக் கிடைக்கும் என்று இறைவன் கூறுவான். அப்போது அவர், திருப்தியடைந்தேன் இறைவா! என்று கூறுவார். அவரே சொர்க்கவாசிகளுள் மிகக் குறைந்த பதவி உடையவர்’ என்று இறைவன் கூறினான்.

பின்னர் மூஸா (அலை), ‘இறைவா! சொர்க்கத்தில் மிக உயர்ந்த பதவியுடையவர் யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு இறைவன், ‘அவர்களை நானே தேர்ந்தெடுத்தேன். அவர்களுக்குரிய பதவிகளையும் நானே தீர்மானித்து அவற்றின்மீது நான் முத்திரை பதித்து விட்டேன். எனவே, (அவர்களது பதவிப் பேரின்பத்தை) எந்தக் கண்ணும் பார்த்தில்லை; எந்தக் காதும் கேட்டதில்லை; எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றியதில்லை’ என்றான்.

இதை மெய்ப்பிக்கும் வகையில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் வேதத்தில், ‘அவர்கள் செய்த (நற்)செயல்களுக்குரிய கூலியாக அவர்களுக்கென மறைத்து வைக்கப்பட்டுள்ள (மறுமையின்) அகநிறைவுப் பேரின்பத்தை எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது’ (32:17) என்று இடம் பெற்றுள்ளது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : முகீரா பின் ஷுஃபா (ரலி).

குறிப்பு:

இந்த அறிவிப்பு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக, முகீரா பின் ஷுஃபா (ரலி) சொற்பொழிவு மேடை மீது நின்றவாறு கூறியதாக இடம் பெற்றுள்ளது. அதிலும் அப்துல் மலிக் இப்னு அப்ஜர் (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில், “இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது (மர்ஃபூஉ)” என்றும் முதர்ரிஃப் பின் தரீஃப் (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில், “முகீரா (ரலி) அவர்கள் தாமே சொன்ன செய்தி” (மவ்கூஃப்) என்றும் இடம் பெற்றுள்ளது. உபைதுல்லாஹ் அல்-அஷ்ஜயீ (ரஹ்) வழி அறிவிப்பில், “மூஸா (அலை) அல்லாஹ்விடம் சொர்க்கவாசிகளில் மிகத் தாழ்ந்த பதவிக்குரியவரைப் பற்றிக் கேட்டார்கள்” என்று முஃகீரா (ரலி) கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது

அத்தியாயம்: 1, பாடம்: 84, ஹதீஸ் எண்: 275

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏النُّعْمَانِ بْنِ أَبِي عَيَّاشٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّ أَدْنَى أَهْلِ الْجَنَّةِ مَنْزِلَةً رَجُلٌ صَرَفَ اللَّهُ وَجْهَهُ عَنْ النَّارِ قِبَلَ الْجَنَّةِ وَمَثَّلَ لَهُ شَجَرَةً ذَاتَ ظِلٍّ فَقَالَ أَيْ رَبِّ قَدِّمْنِي إِلَى هَذِهِ الشَّجَرَةِ أَكُونُ فِي ظِلِّهَا ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ ‏ ‏ابْنِ مَسْعُودٍ ‏ ‏وَلَمْ يَذْكُرْ فَيَقُولُ يَا ابْنَ ‏ ‏آدَمَ ‏ ‏مَا ‏ ‏يَصْرِينِي مِنْكَ إِلَى آخِرِ الْحَدِيثِ وَزَادَ فِيهِ وَيُذَكِّرُهُ اللَّهُ سَلْ كَذَا وَكَذَا فَإِذَا انْقَطَعَتْ بِهِ الْأَمَانِيُّ قَالَ اللَّهُ هُوَ لَكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ قَالَ ‏ ‏ثُمَّ يَدْخُلُ بَيْتَهُ فَتَدْخُلُ عَلَيْهِ زَوْجَتَاهُ مِنْ الْحُورِ الْعِينِ فَتَقُولَانِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَاكَ لَنَا وَأَحْيَانَا لَكَ قَالَ فَيَقُولُ مَا أُعْطِيَ أَحَدٌ مِثْلَ مَا أُعْطِيتُ ‏

“(நரகவாசி) ஒருவரது முகத்தை அல்லாஹ் நரகத்திலிருந்து சொர்க்கத்தின் பக்கம் திருப்பி விடுவான். பின்னர், நிழல் தரும் மரம் ஒன்றை அவருக்குக் காட்டுவான். அப்போது அவர், ‘என் இறைவா! இந்த மரத்திற்கு என்னை முன்நடத்துவாயாக! நான் அதன் நிழலில் இருக்க வேண்டும்’ என்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி).

குறிப்பு:

மேற்காணும் அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்களது அறிவிப்பில், இபுனு மஸ்ஊத் (ரலி) அவர்களது அறிவிப்பிலுள்ள, “ஆதமின் மகனே! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக் கொண்டாய்?” என்பதிலிருந்து இறுதிவரையுள்ளவை தவிர்த்து, “நீ இன்னின்னதை ஆசைப்படு! என்று அறிவுறுத்தப் படும். அவர் அவ்வாறே ஆசைப் படுவார். நீ ஆசைப் பட்டதும் உலகத்தின் பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும் என்று அவரிடம் (அல்லாஹ்வால்) கூறப் படும்” என்ற சொற்றொடர்களும் இடம்பெறுகின்றன. மேற்கொண்டு, “அவர் (சொர்க்கத்திலுள்ள) தமது இல்லத்திற்குள் நுழைவார். அப்போது ஹூருல்ஈன் எனும் (கண்ணழகுக் கன்னியரான) சொர்க்கத் துணைவியர் இருவர் அவரிடம் வந்து, ‘எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!. அவன்தான் எங்களுக்காக உங்களையும் உங்களுக்காக எங்களையும் உயிர்ப்பித்தான்’ என்று கூறுவார்கள். அதற்கவர், ‘எனக்கு வழங்கப்பட்டதைப் போன்று வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை’ என்று (மகிழ்ந்து) கூறுவார். இவர்தாம் சொக்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவியுடைவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகவும் இடம் பெற்றுள்ளது.