அத்தியாயம்: 1, பாடம்: 84, ஹதீஸ் எண்: 288

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ طَرِيفِ بْنِ خَلِيفَةَ الْبَجَلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مَالِكٍ الْأَشْجَعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏وَأَبُو مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏رِبْعِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏قَالَا ‏:‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَجْمَعُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى النَّاسَ فَيَقُومُ الْمُؤْمِنُونَ حَتَّى ‏ ‏تُزْلَفَ ‏ ‏لَهُمْ الْجَنَّةُ فَيَأْتُونَ ‏ ‏آدَمَ ‏ ‏فَيَقُولُونَ يَا أَبَانَا اسْتَفْتِحْ لَنَا الْجَنَّةَ فَيَقُولُ وَهَلْ أَخْرَجَكُمْ مِنْ الْجَنَّةِ إِلَّا خَطِيئَةُ أَبِيكُمْ ‏ ‏آدَمَ ‏ ‏لَسْتُ بِصَاحِبِ ذَلِكَ اذْهَبُوا إِلَى ابْنِي ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏خَلِيلِ ‏ ‏اللَّهِ قَالَ فَيَقُولُ ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏لَسْتُ بِصَاحِبِ ذَلِكَ إِنَّمَا كُنْتُ خَلِيلًا مِنْ وَرَاءَ وَرَاءَ اعْمِدُوا إِلَى ‏ ‏مُوسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الَّذِي كَلَّمَهُ اللَّهُ تَكْلِيمًا فَيَأْتُونَ ‏ ‏مُوسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَقُولُ لَسْتُ بِصَاحِبِ ذَلِكَ اذْهَبُوا إِلَى ‏ ‏عِيسَى ‏ ‏كَلِمَةِ اللَّهِ وَرُوحِهِ فَيَقُولُ ‏ ‏عِيسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَسْتُ بِصَاحِبِ ذَلِكَ فَيَأْتُونَ ‏ ‏مُحَمَّدًا ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَقُومُ فَيُؤْذَنُ لَهُ وَتُرْسَلُ الْأَمَانَةُ وَالرَّحِمُ فَتَقُومَانِ جَنَبَتَيْ الصِّرَاطِ يَمِينًا وَشِمَالًا فَيَمُرُّ أَوَّلُكُمْ كَالْبَرْقِ قَالَ قُلْتُ بِأَبِي أَنْتَ وَأُمِّي أَيُّ شَيْءٍ كَمَرِّ الْبَرْقِ قَالَ أَلَمْ تَرَوْا إِلَى الْبَرْقِ كَيْفَ يَمُرُّ وَيَرْجِعُ فِي طَرْفَةِ عَيْنٍ ثُمَّ كَمَرِّ الرِّيحِ ثُمَّ كَمَرِّ الطَّيْرِ ‏ ‏وَشَدِّ ‏ ‏الرِّجَالِ ‏ ‏تَجْرِي بِهِمْ أَعْمَالُهُمْ وَنَبِيُّكُمْ قَائِمٌ عَلَى الصِّرَاطِ يَقُولُ رَبِّ سَلِّمْ سَلِّمْ حَتَّى تَعْجِزَ أَعْمَالُ الْعِبَادِ حَتَّى يَجِيءَ الرَّجُلُ فَلَا يَسْتَطِيعُ السَّيْرَ إِلَّا زَحْفًا قَالَ وَفِي حَافَتَيْ الصِّرَاطِ ‏ ‏كَلَالِيبُ ‏ ‏مُعَلَّقَةٌ مَأْمُورَةٌ بِأَخْذِ مَنْ أُمِرَتْ بِهِ ‏ ‏فَمَخْدُوشٌ ‏ ‏نَاجٍ ‏ ‏وَمَكْدُوسٌ ‏ ‏فِي النَّارِ


وَالَّذِي نَفْسُ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏بِيَدِهِ إِنَّ قَعْرَ جَهَنَّمَ لَسَبْعُونَ خَرِيفًا ‏

“அல்லாஹ் (மறுமை நாளில்) மனிதர்களை ஒன்று கூட்டுவான். அங்கு நின்று கொண்டிருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கு அருகில் சொர்க்கம் கொண்டு வரப்படும். உடனே அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, ‘எங்கள் தந்தையே! எங்களுக்காகச் சொர்க்கத்தின் வாசலைத் திறக்கும்படிக் கூறுங்கள்!’ என்பார்கள். அதற்கு ஆதம் (அலை), ‘உங்கள் தந்தை ஆதம் செய்த தவறுதானே உங்களைச் சொர்க்கத்திலிருந்தே வெளியேற்றியது! அ(வ்வாறு சொர்க்கத்தைத் திறக்குமாறு கூறுவ)தற்கு நான் உரியவன் அல்லன். (ஆகவே,) நீங்கள் என் புதல்வரும் அல்லாஹ்வின் உற்ற நண்பருமான இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.

(அவ்வாறே மக்களும் செல்ல) இப்ராஹீம் (அலை), ‘நான் அதற்கு உரியவன் அல்லன். நான் உற்ற நண்பனாக இருந்ததெல்லாம் (வானவர் ஜிப்ரீல் தூதுவராக இருந்த ஒரு தடுப்புக்குப்) பின்னணியில்தான். (ஆகவே,) நீங்கள் அல்லாஹ் (நேரடியாக) உரையாடிய மூஸா (அலை) அவர்களை நாடிச் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.

அவ்வாறே மக்களும் மூஸா (அலை) அவர்களிடம் செல்ல, அவர்களும், ‘நான் அதற்கு உரியவன் அல்லன். (ஆகவே,) நீங்கள் அல்லாஹ்வின் சொல்லும் அவனுடைய ஆவியுமான ஈஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.

(அவ்வாறே மக்களும் செல்ல) ஈஸா (அலை), ‘நான் அதற்கு உரியவன் அல்லன்’ என்று கூறுவார்கள்.

பின்னர் மக்கள் முஹம்மது (ஸல்) அவர்களிடம் (என்னிடம்) வருவார்கள். நான் எழு(ந்து பரிந்துரைக்க அனுமதி கோரு)வேன். எனக்கு அனுமதி வழங்கப்படும். அப்போது அமானிதமும் இரத்தபந்த உறவும் அனுப்பி வைக்கப்படும். அவையிரண்டும் (நரகத்தின் மீதுள்ள ‘ஸிராத்’ எனும்) அப்பாலத்தின் இரு பக்கமும் வலம்-இடமாக நின்று கொள்ளும். அப்போது உங்களில் முதல் அணியினர் மின்னலைப் போன்று அதைக் கடந்து செல்வார்கள்.

பிறகு காற்று வீசுவதைப் போன்றும் பறவை, பறப்பதைப் போன்றும் மனிதர்கள் விரைந்து ஓடுவதைப் போன்றும் இறைநம்பிக்கையாளர்களை அழைத்துக் கொண்டு அவர்களது (நற்)செயல்கள் ஓடும். உங்கள் நபியோ அந்தப் பாலத்தின் மீது நின்றுகொண்டு, ‘இறைவா! காப்பாற்று! காப்பாற்று!’ என்று கூறிக்கொண்டிருப்பார். இறுதியில் அடியார்களின் செயல்கள் செயலிழந்து போகும்; அப்போது ஒருவர் வருவார். அவரால் நடக்க முடியாமல் தவழ்ந்தபடியே (அதைக் கடந்து) செல்வார். அந்தப் பாலத்தின் இரு ஓரங்களிலும் கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும். சிலரைப் பிடிக்கும்படி அவற்றுக்கு உத்தரவிடப்பட்டிருக்கும். சிலர் காயப்படுத்தப்பட்டுத் தப்பிவிடுவர்; சிலர் நரக நெருப்பில் தள்ளப்படுவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) & ஹுதைஃபா (ரலி)


குறிப்பு :

“மின்னலைப் போன்று கடந்து செல்வர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குறிப்பிட்டபோது, நான், “என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். மின்னலைப் போன்று கடந்துச் செல்வது என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “மின்னல் எவ்வாறு கண் இமைக்கும் நேரத்தில் சென்று விட்டுத் திரும்புகிறதென்று நீங்கள் பார்க்கவில்லையா?” என்று திருப்பிக் கேட்டார்கள் என்றும் “அபூஹுரைராவின் உயிர் கையில் உள்ளவன் மீது ஆணையாக! நரகத்தின் ஆழமானது எழுபது ஆண்டுகள் தொலைதூரம் கொண்டதாகும்” என்றும் அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள்.

அத்தியாயம்: 1, பாடம்: 84, ஹதீஸ் எண்: 287

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏وَاتَّفَقَا فِي سِيَاقِ الْحَدِيثِ إِلَّا مَا يَزِيدُ أَحَدُهُمَا مِنْ الْحَرْفِ بَعْدَ الْحَرْفِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو حَيَّانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي زُرْعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏

أُتِيَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمًا بِلَحْمٍ فَرُفِعَ إِلَيْهِ الذِّرَاعُ وَكَانَتْ تُعْجِبُهُ فَنَهَسَ مِنْهَا نَهْسَةً فَقَالَ ‏ ‏أَنَا سَيِّدُ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ وَهَلْ تَدْرُونَ بِمَ ذَاكَ يَجْمَعُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ فِي ‏ ‏صَعِيدٍ ‏ ‏وَاحِدٍ فَيُسْمِعُهُمْ الدَّاعِي ‏ ‏وَيَنْفُذُهُمْ الْبَصَرُ ‏ ‏وَتَدْنُو الشَّمْسُ فَيَبْلُغُ النَّاسَ مِنْ الْغَمِّ ‏ ‏وَالْكَرْبِ ‏ ‏مَا لَا يُطِيقُونَ وَمَا لَا يَحْتَمِلُونَ فَيَقُولُ بَعْضُ النَّاسِ لِبَعْضٍ أَلَا تَرَوْنَ مَا أَنْتُمْ فِيهِ أَلَا تَرَوْنَ مَا قَدْ بَلَغَكُمْ أَلَا تَنْظُرُونَ مَنْ يَشْفَعُ لَكُمْ إِلَى رَبِّكُمْ فَيَقُولُ بَعْضُ النَّاسِ لِبَعْضٍ ائْتُوا ‏ ‏آدَمَ ‏ ‏فَيَأْتُونَ ‏ ‏آدَمَ ‏ ‏فَيَقُولُونَ يَا ‏ ‏آدَمُ ‏ ‏أَنْتَ أَبُو الْبَشَرِ خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ وَنَفَخَ فِيكَ مِنْ رُوحِهِ وَأَمَرَ الْمَلَائِكَةَ فَسَجَدُوا لَكَ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلَا ‏ ‏تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ أَلَا ‏ ‏تَرَى إِلَى مَا قَدْ بَلَغَنَا فَيَقُولُ ‏ ‏آدَمُ ‏ ‏إِنَّ رَبِّي غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ وَإِنَّهُ نَهَانِي عَنْ الشَّجَرَةِ فَعَصَيْتُهُ نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى ‏ ‏نُوحٍ ‏ ‏فَيَأْتُونَ ‏ ‏نُوحًا ‏ ‏فَيَقُولُونَ يَا ‏ ‏نُوحُ ‏ ‏أَنْتَ أَوَّلُ الرُّسُلِ إِلَى الْأَرْضِ وَسَمَّاكَ اللَّهُ عَبْدًا شَكُورًا اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلَا ‏ ‏تَرَى مَا نَحْنُ فِيهِ أَلَا ‏ ‏تَرَى مَا قَدْ بَلَغَنَا فَيَقُولُ لَهُمْ إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ وَإِنَّهُ قَدْ كَانَتْ لِي دَعْوَةٌ دَعَوْتُ بِهَا عَلَى قَوْمِي نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَأْتُونَ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏فَيَقُولُونَ أَنْتَ نَبِيُّ اللَّهِ ‏ ‏وَخَلِيلُهُ ‏ ‏مِنْ أَهْلِ الْأَرْضِ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلَا ‏ ‏تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ أَلَا ‏ ‏تَرَى إِلَى مَا قَدْ بَلَغَنَا فَيَقُولُ لَهُمْ ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَا يَغْضَبُ بَعْدَهُ مِثْلَهُ وَذَكَرَ كَذَبَاتِهِ نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى ‏ ‏مُوسَى ‏ ‏فَيَأْتُونَ ‏ ‏مُوسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَقُولُونَ يَا ‏ ‏مُوسَى ‏ ‏أَنْتَ رَسُولُ اللَّهِ فَضَّلَكَ اللَّهُ بِرِسَالَاتِهِ وَبِتَكْلِيمِهِ عَلَى النَّاسِ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلَا ‏ ‏تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ أَلَا ‏ ‏تَرَى مَا قَدْ بَلَغَنَا فَيَقُولُ لَهُمْ ‏ ‏مُوسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ وَإِنِّي قَتَلْتُ نَفْسًا لَمْ أُومَرْ بِقَتْلِهَا نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى ‏ ‏عِيسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَأْتُونَ ‏ ‏عِيسَى ‏ ‏فَيَقُولُونَ يَا ‏ ‏عِيسَى ‏ ‏أَنْتَ رَسُولُ اللَّهِ وَكَلَّمْتَ النَّاسَ فِي الْمَهْدِ وَكَلِمَةٌ مِنْهُ أَلْقَاهَا إِلَى ‏ ‏مَرْيَمَ ‏ ‏وَرُوحٌ مِنْهُ فَاشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلَا ‏ ‏تَرَى مَا نَحْنُ فِيهِ أَلَا ‏ ‏تَرَى مَا قَدْ بَلَغَنَا فَيَقُولُ لَهُمْ ‏ ‏عِيسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ وَلَمْ يَذْكُرْ لَهُ ذَنْبًا نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَأْتُونِّي فَيَقُولُونَ يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏أَنْتَ رَسُولُ اللَّهِ وَخَاتَمُ الْأَنْبِيَاءِ وَغَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلَا ‏ ‏تَرَى مَا نَحْنُ فِيهِ أَلَا ‏ ‏تَرَى مَا قَدْ بَلَغَنَا فَأَنْطَلِقُ فَآتِي تَحْتَ الْعَرْشِ فَأَقَعُ سَاجِدًا لِرَبِّي ثُمَّ يَفْتَحُ اللَّهُ عَلَيَّ وَيُلْهِمُنِي مِنْ مَحَامِدِهِ وَحُسْنِ الثَّنَاءِ عَلَيْهِ شَيْئًا لَمْ يَفْتَحْهُ لِأَحَدٍ قَبْلِي ثُمَّ يُقَالُ يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏ارْفَعْ رَأْسَكَ سَلْ ‏ ‏تُعْطَهْ اشْفَعْ تُشَفَّعْ فَأَرْفَعُ رَأْسِي فَأَقُولُ يَا رَبِّ أُمَّتِي أُمَّتِي فَيُقَالُ يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏أَدْخِلْ الْجَنَّةَ مِنْ أُمَّتِكَ مَنْ لَا حِسَابَ عَلَيْهِ مِنْ الْبَابِ الْأَيْمَنِ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ وَهُمْ شُرَكَاءُ النَّاسِ فِيمَا سِوَى ذَلِكَ مِنْ الْأَبْوَابِ وَالَّذِي نَفْسُ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏بِيَدِهِ إِنَّ مَا بَيْنَ الْمِصْرَاعَيْنِ مِنْ ‏ ‏مَصَارِيعِ ‏ ‏الْجَنَّةِ لَكَمَا بَيْنَ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَهَجَرٍ ‏ ‏أَوْ كَمَا بَيْنَ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَبُصْرَى ‏


و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي زُرْعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏وُضِعَتْ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَصْعَةٌ مِنْ ثَرِيدٍ وَلَحْمٍ فَتَنَاوَلَ الذِّرَاعَ وَكَانَتْ أَحَبَّ الشَّاةِ إِلَيْهِ فَنَهَسَ نَهْسَةً فَقَالَ أَنَا سَيِّدُ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ نَهَسَ أُخْرَى فَقَالَ أَنَا سَيِّدُ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ فَلَمَّا رَأَى أَصْحَابَهُ لَا يَسْأَلُونَهُ قَالَ أَلَا تَقُولُونَ ‏ ‏كَيْفَهْ قَالُوا ‏ ‏كَيْفَهْ يَا رَسُولَ اللَّهِ قَالَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ ‏ ‏أَبِي حَيَّانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي زُرْعَةَ ‏ ‏وَزَادَ فِي قِصَّةِ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏فَقَالَ وَذَكَرَ قَوْلَهُ فِي الْكَوْكَبِ ‏[‏هَذَا رَبِّي ‏ و قَوْله ‏ ‏لِآلِهَتِهِمْ ‏بَلْ فَعَلَهُ كَبِيرُهُمْ هَذَا ‏ و قَوْله ‏‏إِنِّي سَقِيمٌ ‏]

‏قَالَ وَالَّذِي نَفْسُ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏بِيَدِهِ إِنَّ مَا بَيْنَ الْمِصْرَاعَيْنِ مِنْ مَصَارِيعِ الْجَنَّةِ إِلَى عِضَادَتَيْ الْبَابِ لَكَمَا بَيْنَ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَهَجَرٍ ‏ ‏أَوْ ‏ ‏هَجَرٍ ‏ ‏وَمَكَّةَ ‏ ‏قَالَ لَا أَدْرِي أَيَّ ذَلِكَ قَالَ ‏

ஒருநாள் (விருந்தொன்றில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைச்சி பரிமாறப்பட்டது. அப்போது அவர்களுக்கு மிகவும் விருப்பமான முன்கால் சப்பை ஒன்று அவர்களிடம் வழங்கப்பட்டது. அவர்கள் தம் பற்களால் கடித்து, அதிலிருந்து சிறிது உண்டார்கள். பிறகு, “நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவனாக இருப்பேன். அது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? (அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் ஒன்று திரட்டுவான். எவரேனும் அவர்களை அழைப்பாராயின் அதை அவர்கள் செவியேற்க முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை ஊடுருவிச் செல்லும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்களால் தாங்கிக் கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ இயலாத துன்பங்களும் துயரங்களும் அவர்களுக்கு ஏற்படும். அப்போது, ‘நீங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையைப் பார்த்தீர்களா? உங்களுக்கு எத்தகைய (கடினமான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் உணரவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரைப்பவரை(த் தேடி)ப் பார்க்கமாட்டீர்களா?’ என்று தங்களுக்குள் கேட்டுக் கொள்வார்கள். அப்போது, ‘(ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசக்கூடும்)’ என்று சிலர் கூறுவர்.

ஆகவே, மக்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, ‘ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்; அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்தான். தன்(ன்னிலிருந்து) உயிரை உங்களுக்குள் அவன் ஊதினான். மேலும், தன் வானவர்களுக்கு அவன் கட்டளையிட, அவர்கள் உங்களுக்குச் சிரம் பணிந்தனர். (அத்தகைய சிறப்புகளுக்கு உரிய) நீங்கள் இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்கள் இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்கின்றீர்களல்லவா?’ என்று கேட்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ‘(நான் செய்த தவற்றின்காரணத்தால்) என் இறைவன் என்மீது இன்று (கடுங்)கோபம் கொண்டிருக்கிறான். இதற்குமுன் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போன்று ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (நான் நெருங்கக்கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். (இந்நாளில்) என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது; என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹ் இடம் செல்லுங்கள்’ என்று சொல்லி விடுவார்கள்.

மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று, ‘நூஹே! நீங்கள் பூமி(யில் வசிப்பவர்களு)க்கு (அனுப்பப்பட்ட) முதலாவது இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்கின்றீர்களல்லவா?’ என்று கேட்பார்கள். அதற்கு நூஹ் (அலை), ‘என் இறைவன் இன்று (என்மீது) கடுங்கோபம் கொண்டுள்ளான். இதற்குமுன் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போன்று ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (எல்லா நபிமார்களுக்கும் இருப்பதைப் போன்று விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத்தாருக்கு எதிராகப் பயன்படுத்திவிட்டேன். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது; நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறிவிடுவார்கள்.

அவ்வாறே மக்களும் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று, ‘நீங்கள் இறைத்தூதரும் பூமியில் வசித்தவர்களில் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரையுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்கின்றீர்களல்லவா?’ என்று கேட்பார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை), ‘என் இறைவன் இன்று (என்மீது) கடுங்கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பு இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போன்று ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை’ என்று கூறிவிட்டுத் தாம் சொன்ன (மூன்று) பொய்களை நினைவு கூர்வார்கள். பிறகு, ‘நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது; நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. (ஆகவே) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) மூஸாவிடம் செல்லுங்கள்’ என்று கூறி விடுவார்கள்.

மக்கள் மூஸா (அலை) அவர்களிடம் சென்று, ‘மூஸாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். தன்னுடைய தூதுத்துவத்தை வழங்கியும் உங்களிடம் உரையாடியும் மக்கள் அனைவரையும்விட உங்களை அல்லாஹ் மேன்மைபடுத்தியுள்ளான். (ஆகவே) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்கின்றீர்களல்லவா?’ என்று கூறுவார்கள். அதற்கு மூஸா (அலை), ‘என் இறைவன் இன்று (என்மீது) கடுங்கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பு இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போன்று ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்படாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்தேன். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது; நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. (ஆகவே) நீங்கள் (இறைத்தூதர்) ஈஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறிவிடுவார்கள்.

மக்கள் ஈஸா (அலை) அவர்களிடம் சென்று, ‘ஈஸாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். நீங்கள் (குழந்தையாய்) தொட்டிலில் இருந்தபோதே மக்களிடம் பேசினீர்கள். மர்யமிடம் இறைவன் இட்ட அவனது சொல்லும் அவன் (ஊதிய) உயிரும் நீங்கள். ஆகவே, எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்கின்றீர்களல்லவா?’ என்று கேட்பார்கள். அதற்கு ஈஸா (அலை), ‘என் இறைவன் இன்று (என்மீது) கடுங்கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பு இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போன்று ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை – (தாம் புரிந்துவிட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல் – நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது; நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள்; நீங்கள் (இறைத்தூதர்) முஹம்மது (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறிவிடுவார்கள்.

அப்போது மக்கள் என்னிடம் வந்து, “முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர்; இறைத்தூதர்களில் இறுதி முத்திரையுமாவீர்கள். உங்களது முன்-பின் பாவங்களை இறைவன் மன்னித்து விட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்துள்ள (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்கின்றீர்களல்லவா?’ என்று கூறுவர்.

அப்போது நான் இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே சென்று என் இறைவனுக்கு(ப் பணிந்து) ஸஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறை புகழ்மாலைகளையும் அழகிய போற்றல்களையும் எனக்கு உதிக்கச் செய்வான். பிறகு, ‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி, ‘இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்!’ என்பேன். அதற்கு, ‘முஹம்மதே! சொர்க்கவாசல்களில் வலப்பக்க வாசல் வழியாக எந்தவிதக் கேள்விக் கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்; அவர்கள் மற்ற வாசல்கள்வழியாக நுழையும் மக்களுடனும் இணைந்து நுழைந்து கொள்ளலாம்’ என்று கூறப்படும்.

முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசலின் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் மக்காவிற்கும் (பஹ்ரைனிலுள்ள) ஹஜர் எனும் ஊருக்கும்/மக்காவுக்கும் (சிரியாவிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள தூரமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

உமாரதிப்னுல் கஃகாஃ (ரஹ்) வழி அறிவிப்பில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப் படுகிறது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தக்கடி (ஸரீத்) எனும் உணவும் (சமைக்கப்பட்ட) இறைச்சியும் ஒரு தட்டில் வைத்து வழங்கப்பட்டது. அப்போது அதிலிருந்து முன்கால் சப்பை ஒன்றை எடுத்துக் கடித்துச் சிறிது உண்டார்கள். ஆட்டிறைச்சிப் பகுதிகளில் அதுதான் அவர்களுக்கு விருப்பமான பகுதியாகும். பிறகு, “நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவனாக இருப்பேன்” என்று கூறினார்கள். பிறகு இன்னொரு முறை கடித்து விட்டு, “நான் மறுமை நாளில் மக்களின் தலைவனாக இருப்பேன்” என்று (மீண்டும்) கூறினார்கள். தம் தோழர்கள் அது குறித்து எவ்வாறு என்று வினவாததைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அது எவ்வாறு என்று நீங்கள் வினவமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். உடனே தோழர்கள், “அது எவ்வாறு, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(மறுமை நாளில்) மக்கள் அகிலத்தின் அதிபதிக்கு முன்னால் நின்று கொண்டிருப்பார்கள் …” என்று தொடங்கி, மேற்கண்ட ஹதீஸிலுள்ளதைப் போன்றே கூறினார்கள்.

மேலும், இப்ராஹீம் (அலை) (மக்களுக்காகத் தம்மால் பரிந்து பேச முடியாது என்று கூறிவிட்டு), தாம் (உலகில்) நட்சத்திரத்தைப் பார்த்து “இதுதான் என் இறைவன்” என்று கூறியது; அவரது ஊர்மக்களின் கடவுள் சிலைகளை (தாமே உடைத்துவிட்டு) “இவற்றில் பெரியதுதான் உடைத்தது” என்று கூறியது; (நோயில்லாமலேயே) “நான் நோயுற்றிருக்கிறேன்” என்று (மூன்று பொய்களைக்) கூறியது ஆகியவற்றை நினைவு கூர்ந்தார்கள் என்று இபுராஹீம் (அலை) பற்றியும்

“முஹம்மதின் உயிர் கையிலுள்ளவன் மீது சத்தியமாக! சொர்க்க வாயிலின் இரு பக்கத் தூண்களுக்கிடையேயான தூரம் மக்காவிற்கும் (பஹ்ரைனிலுள்ள) ஹஜர் எனும் ஊருக்கும்/ஹஜர் எனும் ஊருக்கும் மக்காவிற்கும் இடையிலுள்ள தூரமாகும்” என்று சொர்க்கவாசலின் தூணைப் பற்றியும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அதில் “மக்கா-ஹஜர்” அல்லது “ஹஜர்-மக்கா” இரண்டில் எதை முன்-பின்னாகச் சொன்னார்கள் என்று எனக்கு நினைவில்லை என்று அறிவிப்பாளர் கூறுகின்றார்.

அத்தியாயம்: 1, பாடம்: 84, ஹதீஸ் எண்: 286

حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْبَدُ بْنُ هِلَالٍ الْعَنَزِيُّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْبَدُ بْنُ هِلَالٍ الْعَنَزِيُّ ‏ ‏قَالَ ‏ ‏انْطَلَقْنَا إِلَى ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏وَتَشَفَّعْنَا ‏ ‏بِثَابِتٍ ‏ ‏فَانْتَهَيْنَا إِلَيْهِ وَهُوَ ‏ ‏يُصَلِّي الضُّحَى فَاسْتَأْذَنَ لَنَا ‏ ‏ثَابِتٌ ‏ ‏فَدَخَلْنَا عَلَيْهِ وَأَجْلَسَ ‏ ‏ثَابِتًا ‏ ‏مَعَهُ عَلَى سَرِيرِهِ فَقَالَ لَهُ يَا ‏ ‏أَبَا حَمْزَةَ ‏ ‏إِنَّ إِخْوَانَكَ مِنْ أَهْلِ ‏ ‏الْبَصْرَةِ ‏ ‏يَسْأَلُونَكَ أَنْ تُحَدِّثَهُمْ حَدِيثَ الشَّفَاعَةِ قَالَ :‏ ‏

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ ‏ ‏مَاجَ ‏ ‏النَّاسُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ فَيَأْتُونَ ‏ ‏آدَمَ ‏ ‏فَيَقُولُونَ لَهُ اشْفَعْ لِذُرِّيَّتِكَ فَيَقُولُ لَسْتُ لَهَا وَلَكِنْ عَلَيْكُمْ ‏ ‏بِإِبْرَاهِيمَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَإِنَّهُ ‏ ‏خَلِيلُ ‏ ‏اللَّهِ فَيَأْتُونَ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏فَيَقُولُ لَسْتُ لَهَا وَلَكِنْ عَلَيْكُمْ ‏ ‏بِمُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَإِنَّهُ كَلِيمُ اللَّهِ فَيُؤْتَى ‏ ‏مُوسَى ‏ ‏فَيَقُولُ لَسْتُ لَهَا وَلَكِنْ عَلَيْكُمْ ‏ ‏بِعِيسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَإِنَّهُ رُوحُ اللَّهِ وَكَلِمَتُهُ ‏ ‏فَيُؤتَى ‏ ‏عِيسَى ‏ ‏فَيَقُولُ لَسْتُ لَهَا وَلَكِنْ عَلَيْكُمْ ‏ ‏بِمُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأُوتَى فَأَقُولُ أَنَا لَهَا فَأَنْطَلِقُ فَأَسْتَأْذِنُ عَلَى رَبِّي فَيُؤْذَنُ لِي فَأَقُومُ بَيْنَ يَدَيْهِ فَأَحْمَدُهُ بِمَحَامِدَ لَا أَقْدِرُ عَلَيْهِ الْآنَ يُلْهِمُنِيهِ اللَّهُ ثُمَّ أَخِرُّ لَهُ سَاجِدًا فَيُقَالُ لِي يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏ارْفَعْ رَأْسَكَ وَقُلْ يُسْمَعْ لَكَ وَسَلْ ‏ ‏تُعْطَهْ وَاشْفَعْ تُشَفَّعْ فَأَقُولُ رَبِّ أُمَّتِي أُمَّتِي فَيُقَالُ انْطَلِقْ فَمَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ بُرَّةٍ أَوْ شَعِيرَةٍ مِنْ إِيمَانٍ فَأَخْرِجْهُ مِنْهَا فَأَنْطَلِقُ فَأَفْعَلُ ثُمَّ أَرْجِعُ إِلَى رَبِّي فَأَحْمَدُهُ بِتِلْكَ الْمَحَامِدِ ثُمَّ أَخِرُّ لَهُ سَاجِدًا فَيُقَالُ لِي يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏ارْفَعْ رَأْسَكَ وَقُلْ يُسْمَعْ لَكَ وَسَلْ ‏ ‏تُعْطَهْ وَاشْفَعْ تُشَفَّعْ فَأَقُولُ أُمَّتِي أُمَّتِي فَيُقَالُ لِي انْطَلِقْ فَمَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ ‏ ‏خَرْدَلٍ ‏ ‏مِنْ إِيمَانٍ فَأَخْرِجْهُ مِنْهَا فَأَنْطَلِقُ فَأَفْعَلُ ثُمَّ أَعُودُ إِلَى رَبِّي فَأَحْمَدُهُ بِتِلْكَ الْمَحَامِدِ ثُمَّ أَخِرُّ لَهُ سَاجِدًا فَيُقَالُ لِي يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏ارْفَعْ رَأْسَكَ وَقُلْ يُسْمَعْ لَكَ وَسَلْ ‏ ‏تُعْطَهْ وَاشْفَعْ تُشَفَّعْ فَأَقُولُ يَا رَبِّ أُمَّتِي أُمَّتِي فَيُقَالُ لِي انْطَلِقْ فَمَنْ كَانَ فِي قَلْبِهِ أَدْنَى أَدْنَى أَدْنَى مِنْ مِثْقَالِ حَبَّةٍ مِنْ ‏ ‏خَرْدَلٍ ‏ ‏مِنْ إِيمَانٍ فَأَخْرِجْهُ مِنْ النَّارِ فَأَنْطَلِقُ فَأَفْعَلُ ‏


هَذَا حَدِيثُ ‏ ‏أَنَسٍ ‏ ‏الَّذِي أَنْبَأَنَا بِهِ فَخَرَجْنَا مِنْ عِنْدِهِ فَلَمَّا كُنَّا ‏ ‏بِظَهْرِ الْجَبَّانِ ‏ ‏قُلْنَا لَوْ مِلْنَا إِلَى ‏ ‏الْحَسَنِ ‏ ‏فَسَلَّمْنَا عَلَيْهِ وَهُوَ مُسْتَخْفٍ فِي دَارِ ‏ ‏أَبِي خَلِيفَةَ ‏ ‏قَالَ فَدَخَلْنَا عَلَيْهِ فَسَلَّمْنَا عَلَيْهِ فَقُلْنَا يَا ‏ ‏أَبَا سَعِيدٍ ‏ ‏جِئْنَا مِنْ عِنْدِ أَخِيكَ ‏ ‏أَبِي حَمْزَةَ ‏ ‏فَلَمْ نَسْمَعْ مِثْلَ حَدِيثٍ حَدَّثَنَاهُ فِي الشَّفَاعَةِ قَالَ ‏ ‏هِيَهِ فَحَدَّثْنَاهُ الْحَدِيثَ فَقَالَ ‏ ‏هِيَهِ قُلْنَا مَا زَادَنَا قَالَ ‏ ‏قَدْ حَدَّثَنَا بِهِ مُنْذُ عِشْرِينَ سَنَةً وَهُوَ يَوْمَئِذٍ جَمِيعٌ وَلَقَدْ تَرَكَ شَيْئًا مَا أَدْرِي أَنَسِيَ الشَّيْخُ أَوْ كَرِهَ أَنْ يُحَدِّثَكُمْ فَتَتَّكِلُوا قُلْنَا لَهُ حَدِّثْنَا فَضَحِكَ وَقَالَ ‏
‏خُلِقَ الْإِنْسَانُ مِنْ عَجَلٍ ‏

‏مَا ذَكَرْتُ لَكُمْ هَذَا إِلَّا وَأَنَا أُرِيدُ أَنْ أُحَدِّثَكُمُوهُ ثُمَّ أَرْجِعُ إِلَى رَبِّي فِي الرَّابِعَةِ فَأَحْمَدُهُ بِتِلْكَ الْمَحَامِدِ ثُمَّ أَخِرُّ لَهُ سَاجِدًا فَيُقَالُ لِي يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏ارْفَعْ رَأْسَكَ وَقُلْ يُسْمَعْ لَكَ وَسَلْ تُعْطَ وَاشْفَعْ تُشَفَّعْ فَأَقُولُ يَا رَبِّ ائْذَنْ لِي فِيمَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ قَالَ لَيْسَ ذَاكَ لَكَ أَوْ قَالَ لَيْسَ ذَاكَ إِلَيْكَ وَلَكِنْ وَعِزَّتِي وَكِبْرِيَائِي وَعَظَمَتِي ‏ ‏وَجِبْرِيَائِي ‏ ‏لَأُخْرِجَنَّ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ قَالَ فَأَشْهَدُ عَلَى ‏ ‏الْحَسَنِ ‏ ‏أَنَّهُ حَدَّثَنَا بِهِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏أُرَاهُ قَالَ قَبْلَ عِشْرِينَ سَنَةً وَهُوَ يَوْمِئِذٍ جَمِيعٌ ‏

“(நிலை தடுமாற வைக்கும்) மறுமை நாள் நிகழும்போது மக்கள் (பரிந்துரைக்காக) அலைமோதுவார்கள். ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, ‘உங்களின் வழித்தோன்றல்க(களான எங்க)ளுக்காக நீங்கள் (அல்லாஹ்விடம்) பரிந்துரை செய்யுங்கள்’ என்று கோருவார்கள். அதற்கு ஆதம் (அலை), ‘அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் போங்கள். ஏனெனில், அவர்தாம் அல்லாஹ்வின் உற்ற நண்பர் ஆவார்’ என்று கூறிவிடுவார்கள்.

மக்கள், இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்வார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களும் ‘எனக்கு அந்தத் தகுதி இல்லை; நீங்கள் மூஸா (அலை) அவர்களிடம் போங்கள். ஏனெனில், அவர்தாம் அல்லாஹ்விடம் உரையாடியவர் ஆவார்’ என்று கூறிவிடுவார்கள்.

(மக்களின் கோரிக்கை) மூஸா (அலை) முன் வைக்கப்படும். மூஸா (அலை) அவர்களும் ‘அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் ஈஸா (அலை) அவர்களிடம் போங்கள். ஏனெனில், அவர்தாம் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய சொல்லுமாவார்’ என்று கூறிவிடுவார்கள்.

(மக்களின் கோரிக்கை) ஈஸா (அலை) முன் வைக்கப் படும். ஈஸா (அலை) அவர்களும் ‘எனக்கு அந்தத் தகுதி இல்லை; நீங்கள் முஹம்மது (ஸல்) அவர்களை அணுகுங்கள்’ என்று கூறிவிடுவார்கள்.

(மக்களின் கோரிக்கை இறுதியாக) என்னிடம் கொண்டு வரப்படும். அப்போது, ‘நான் அதற்குரியவனே’ என்று சொல்லிவிட்டு (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் சென்று அனுமதி கேட்பேன். எனக்கு அனுமதி வழங்கப்படும். உடனே நான் இறைவனுக்கு முன்னால் நின்று, தற்போது என் சொல்லிலடங்காத, அப்போது அல்லாஹ் என் எண்ணத்தில் ஏற்படுத்தும் புகழ்மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு அவனுக்காகச் சிரம் பணிந்தவனாக (ஸஜ்தாவில்) விழுந்து விடுவேன். அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து) ‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று அறிவிப்புச் செய்யப்படும். அப்போது நான், ‘என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்’ என்பேன்.

அப்போது, ‘செல்லுங்கள், எவரது உள்ளத்தில் மணிக்கோதுமை அல்லது வாற்கோதுமையளவு இறைநம்பிக்கை (ஈமான்) உள்ளதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்’ என்று கூறப்படும். நான் சென்று அவ்வாறே வெளியேற்றுவேன். பிறகு மீண்டும் என் இறைவனிடம் வந்து, அதே புகழ்மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு அவனுக்காகச் சிரம் பணிந்தவனாக (ஸஜ்தாவில்) விழுந்து விடுவேன். அப்போதும், ‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று கூறப்படும். அப்போதும் ‘என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்’ என்றே நான் கோரும்போது, ‘செல்லுங்கள், யாருடைய உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை (ஈமான்) உள்ளதோ அவரை (நரக)நெருப்பிலிருந்து வெளியேற்றுங்கள்’ என்று என்னிடம் கூறப்படும்.

நான் சென்று அவ்வாறே வெளியேற்றிவிட்டு, மீண்டும் என் இறைவனிடம் திரும்பி வருவேன். அதே புகழ்மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பின்னர் அவனுக்காகச் சிரம் பணிந்து விழுவேன். அப்போதும் என்னிடம், ‘முஹம்மதே! எழுந்திருங்கள். சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரையுங்கள்; ஏற்கப்படும்’ என்று சொல்லப்படும். அதற்கு நான், ‘என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்’ என்றே நான் கோரும்போது, ‘செல்லுங்கள், எவரது உள்ளத்தில் கடுகுமணியைவிட மிக மிக மிகச் சிறிய அளவு இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்’ என்று என்னிடம் கூறப்படும். நானும் சென்று அவ்வாறே செய்வேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

மஅபதிப்னு ஹிலால் அல்அனஸீ (ரஹ்) கூறியதாவது:

(பஸ்ராவாசியான) நாங்கள் அபூஹம்ஸா (என்றழைக்கப்பட்ட) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் பயணப் பட்டோம். (பரிந்துரை குறித்த ஹதீஸை அன்னார் எங்களுக்கு அறிவிப்பதற்கு) ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்களின் பரிந்துரையை கோரியிருந்தோம். அனஸ் (ரலி) ‘ளுஹா’ தொழுது கொண்டிருக்கையில் நாங்கள் அங்குப் போய்ச் சேர்ந்தோம். நாங்கள் உள்ளே நுழைய எங்களுக்காக ஸாபித் (ரஹ்) அனுமதி கேட்டார்கள். பிறகு நாங்கள் உள்ளே நுழைந்தோம். அப்போது அனஸ் (ரலி) தமது கட்டிலில் ஸாபித் (ரஹ்) அவர்களைத் தம்முடன் அமர வைத்துக் கொண்டார்கள். ஸாபித் (ரஹ்), “அபூஹம்ஸா! பஸ்ராவைச் சேர்ந்த உங்கள் சகோதரர்கள் பரிந்துரை (ஷஃபாஅத்) தொடர்பான ஹதீஸை அறிவிக்குமாறு கோருகின்றார்கள்” என்று கேட்டுக் கொண்டபோது, அனஸ் (ரலி) மேற்கண்ட ஹதீஸை எங்களுக்கு அறிவித்தார்கள்.

நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து (விடைபெற்றுப்) புறப்பட்டோம். நாங்கள் பாலைவன (மணல்)மேட்டுக்கு வந்தபோது, “நாம் ஹஸன் அல்-பஸரீ (ரஹ்) அவர்களைச் சந்தித்து ஸலாம் சொல்லிக் கொள்ளலாம்” என்று பேசிக்கொண்டோம். அன்னார், (ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃபிற்கு அஞ்சி) அபூகலீஃபா என்பவரது இல்லத்தில் ஒளிந்திருந்த அவர்களிடம் சென்று ஸலாம் கூறினோம். மேலும், “அபூஸயீத் (ஹஸன் அல்-பஸரீ) அவர்களே! நாங்கள் உங்கள் சகோதரர் அபூஹம்ஸா (அனஸ்-ரலி) அவர்களிடமிருந்து வருகிறோம். பரிந்துரை (ஷஃபாஅத்) தொடர்பாக அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸைப் போன்று வேறு யாரும் அறிவிக்க நாங்கள் கேட்டதில்லை” என்று கூறினோம்.

அதற்கு ஹஸன் அல்-பஸரீ (ரஹ்), “(அதைச்) சொல்லுங்கள்!” என்றார்கள். அந்த ஹதீஸை நாங்கள் அவர்களிடம் சொன்னோம். அப்போது அவர்கள், “இன்னும் சொல்லுங்கள்!” என்றார்கள். அதற்கு நாங்கள், “இதைவிடக் கூடுதலாக எங்களிடம் அனஸ் (ரலி) கூறவில்லை” என்றோம். அதற்கு ஹஸன் அல்பஸரீ (ரஹ்), “இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நினைவாற்றலும் உடல்பலமும் மிக்கவராக இருந்தபோது இந்த ஹதீஸை (இன்னும் விரிவாக) எமக்கு அனஸ் (ரலி)  அறிவித்தார்கள். அதில் சிலவற்றை இப்போது அனஸ் (ரலி) கூறாமல் விட்டுள்ளார்கள். முதியவரான அன்னார் அதை மறந்து விட்டார்களா? அன்றியும் (நபியவர்களின் பரிந்துரை கிடைத்துவிடும் என்று) நம்பி (நல்லறங்களில் நாட்டமில்லாமல்) இருந்து விடுவீர்கள் என்று (மீதியைச் சொல்ல) வெறுத்தார்களா? என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள்.

நாங்கள் ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்களிடம், “(மீதியைச்) எங்களுக்குச் சொல்லுங்கள்!” என்றோம். (இதைக் கேட்டவுடன்) ஹஸன் (ரஹ்) சிரித்துவிட்டு, “மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான். இந்த நபிமொழியை (முழுதுமாக) உங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதற்காகவே உங்களிடம் நான் இவ்வாறு குறிப்பிட்டேன்” (என்று சொல்லிவிட்டு),

“பிறகு நான்காம் முறையும் நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்று அதே புகழ்மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு அவனுக்காகச் சிரம்பணிந்தவனாக (ஸஜ்தாவில்) விழுந்து விடுவேன். ‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளூங்கள்; உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று கூறப்படும். நான், ‘என் இறைவா! லா இலாஹ இல்லல்லாஹ் மொழிந்தவர்கள் விஷயத்தில் (பரிந்துரை செய்ய) எனக்கு அனுமதி வழங்குவாயாக!’ என்று கேட்பேன். அதற்கு இறைவன், ‘அந்த உரிமை உங்களுக்கில்லை/அந்தப் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை’ என்று கூறிவிட்டு, ‘மாறாக என் வல்லமையின் மீதும் பெருமையின் மீதும் மகத்துவத்தின் மீதும் ஆணையாக! லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னவரை நிச்சயமாக நானே (நரகத்திலிருந்து) வெளியேற்றுவேன்’ என்று அல்லாஹ் கூறுவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்

என்ற கூடுதல் செய்தியை ஹஸன் அல்-பஸரீ (ரஹ்) அறிவித்தார்கள்.

அறிவிப்பாளர் மஅபதிப்னு ஹிலால் அல்அனஸீ (ரஹ்) கூறுகின்றார்: ஹஸன் அல்-பஸரீ (ரஹ்) இந்த ஹதீஸை எங்களுக்கு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே அறிவித்தார்கள் என்று நான் அறுதியிட்டுக் கூறுகிறேன். மேலும், “இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அனஸ் (ரலி) நினைவாற்றலும் உடல் பலமும் மிக்கவராக இருந்(தபோது இந்த ஹதீஸை முழுமையாக அறிவித்)தார்கள்” என்றும் ஹஸன் அல்-பஸரீ (ரஹ்) கூறினார்கள்.

அத்தியாயம்: 1, பாடம்: 84, ஹதீஸ் எண்: 285

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ الضَّرِيرُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ ‏ ‏وَهِشَامٌ صَاحِبُ الدَّسْتَوَائِيِّ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ :‏ ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏يَخْرُجُ مِنْ النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنْ الْخَيْرِ مَا ‏ ‏يَزِنُ ‏ ‏شَعِيرَةً ثُمَّ يَخْرُجُ مِنْ النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنْ الْخَيْرِ مَا يَزِنُ ‏ ‏بُرَّةً ‏ ‏ثُمَّ يَخْرُجُ مِنْ النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنْ الْخَيْرِ مَا يَزِنُ ذَرَّةً ‏


زَادَ ‏ ‏ابْنُ مِنْهَالٍ ‏ ‏فِي رِوَايَتِهِ ‏ ‏قَالَ ‏ ‏يَزِيدُ ‏ ‏فَلَقِيتُ ‏ ‏شُعْبَةَ ‏ ‏فَحَدَّثْتُهُ بِالْحَدِيثِ ‏ ‏فَقَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏حَدَّثَنَا بِهِ ‏ ‏قَتَادَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْحَدِيثِ إِلَّا أَنَّ ‏ ‏شُعْبَةَ ‏ ‏جَعَلَ مَكَانَ الذَّرَّةِ ذُرَةً ‏ ‏قَالَ ‏ ‏يَزِيدُ ‏ ‏صَحَّفَ فِيهَا ‏ ‏أَبُو بِسْطَامَ ‏

“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று கூறிய எவரது உள்ளத்தில் வாற்கோதுமை அளவு நன்மை இருந்தாலும் அவர் (நரக) நெருப்பிலிருந்து வெளியேற்றப்படுவார். பிறகு வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று கூறிய எவரது உள்ளத்தில் மணிக்கோதுமை அளவு நன்மை இருந்தாலும் அவரும் (நரக) நெருப்பிலிருந்து வெளியேற்றப்படுவார். பிறகு ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று கூறிய எவரது உள்ளத்தில் அணுவளவு நன்மை இருந்தாலும் அவரும் (நரக) நெருப்பிலிருந்து வெளியேற்றப்படுவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் மின்ஹால் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் ஷுஅபா அபூபிஸ்தாம் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது இந்த ஹதீஸை அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது ஷுஅபா (ரஹ்), ‘இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவித்ததாக கத்தாதா (ரஹ்) எமக்கு அறிவித்தார்கள்’ என்று உறுதி செய்ததோடு, தர்ரா என்ற சொல்லை, துரா என்று மாற்றிக் கூறினார்கள்” என்று யஸீத் பின் ஸுரைஉ (ரஹ்) கூறியதாகக் கூடுதலாகக் குறிப்பிடப்படுகிறது.

அத்தியாயம்: 1, பாடம்: 84, ஹதீஸ் எண்: 284

حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ الْجَحْدَرِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي كَامِلٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏‏قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَجْمَعُ اللَّهُ النَّاسَ يَوْمَ الْقِيَامَةِ فَيَهْتَمُّونَ لِذَلِكَ ‏ ‏و قَالَ ‏ ‏ابْنُ عُبَيْدٍ ‏ ‏فَيُلْهَمُونَ لِذَلِكَ ‏ ‏فَيَقُولُونَ لَوْ اسْتَشْفَعْنَا عَلَى رَبِّنَا حَتَّى يُرِيحَنَا مِنْ مَكَانِنَا هَذَا قَالَ فَيَأْتُونَ ‏ ‏آدَمَ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَقُولُونَ أَنْتَ ‏ ‏آدَمُ ‏ ‏أَبُو الْخَلْقِ خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ وَنَفَخَ فِيكَ مِنْ رُوحِهِ وَأَمَرَ الْمَلَائِكَةَ فَسَجَدُوا لَكَ اشْفَعْ لَنَا عِنْدَ رَبِّكَ حَتَّى يُرِيحَنَا مِنْ مَكَانِنَا هَذَا فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ فَيَذْكُرُ خَطِيئَتَهُ الَّتِي أَصَابَ فَيَسْتَحْيِي رَبَّهُ مِنْهَا وَلَكِنْ ائْتُوا ‏ ‏نُوحًا ‏ ‏أَوَّلَ رَسُولٍ بَعَثَهُ اللَّهُ قَالَ فَيَأْتُونَ ‏ ‏نُوحًا ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ فَيَذْكُرُ خَطِيئَتَهُ الَّتِي أَصَابَ فَيَسْتَحْيِي رَبَّهُ مِنْهَا وَلَكِنْ ائْتُوا ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الَّذِي اتَّخَذَهُ اللَّهُ ‏ ‏خَلِيلًا ‏ ‏فَيَأْتُونَ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ وَيَذْكُرُ خَطِيئَتَهُ الَّتِي أَصَابَ فَيَسْتَحْيِي رَبَّهُ مِنْهَا وَلَكِنْ ائْتُوا ‏ ‏مُوسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الَّذِي كَلَّمَهُ اللَّهُ وَأَعْطَاهُ التَّوْرَاةَ قَالَ فَيَأْتُونَ ‏ ‏مُوسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ وَيَذْكُرُ خَطِيئَتَهُ الَّتِي أَصَابَ فَيَسْتَحْيِي رَبَّهُ مِنْهَا وَلَكِنْ ائْتُوا ‏ ‏عِيسَى ‏ ‏رُوحَ اللَّهِ وَكَلِمَتَهُ فَيَأْتُونَ ‏ ‏عِيسَى ‏ ‏رُوحَ اللَّهِ وَكَلِمَتَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ وَلَكِنْ ائْتُوا ‏ ‏مُحَمَّدًا ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَبْدًا قَدْ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَأْتُونِي فَأَسْتَأْذِنُ عَلَى رَبِّي فَيُؤْذَنُ لِي فَإِذَا أَنَا رَأَيْتُهُ وَقَعْتُ سَاجِدًا فَيَدَعُنِي مَا شَاءَ اللَّهُ فَيُقَالُ يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏ارْفَعْ رَأْسَكَ قُلْ تُسْمَعْ سَلْ ‏ ‏تُعْطَهْ اشْفَعْ تُشَفَّعْ فَأَرْفَعُ رَأْسِي فَأَحْمَدُ رَبِّي بِتَحْمِيدٍ يُعَلِّمُنِيهِ رَبِّي ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا فَأُخْرِجُهُمْ مِنْ النَّارِ وَأُدْخِلُهُمْ الْجَنَّةَ ثُمَّ أَعُودُ فَأَقَعُ سَاجِدًا فَيَدَعُنِي مَا شَاءَ اللَّهُ أَنْ يَدَعَنِي ثُمَّ يُقَالُ ارْفَعْ رَأْسَكَ يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏قُلْ تُسْمَعْ سَلْ ‏ ‏تُعْطَهْ اشْفَعْ تُشَفَّعْ فَأَرْفَعُ رَأْسِي فَأَحْمَدُ رَبِّي بِتَحْمِيدٍ يُعَلِّمُنِيهِ ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا فَأُخْرِجَهُمْ مِنْ النَّارِ وَأُدْخِلُهُمْ الْجَنَّةَ ‏ ‏قَالَ فَلَا أَدْرِي فِي الثَّالِثَةِ أَوْ فِي الرَّابِعَةِ قَالَ ‏ ‏فَأَقُولُ يَا رَبِّ مَا بَقِيَ فِي النَّارِ إِلَّا مَنْ حَبَسَهُ الْقُرْآنُ أَيْ وَجَبَ عَلَيْهِ الْخُلُودُ ‏


‏قَالَ ‏ ‏ابْنُ عُبَيْدٍ ‏ ‏فِي رِوَايَتِهِ ‏ ‏قَالَ ‏ ‏قَتَادَةُ ‏ ‏أَيْ وَجَبَ عَلَيْهِ الْخُلُودُ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَجْتَمِعُ الْمُؤْمِنُونَ يَوْمَ الْقِيَامَةِ فَيَهْتَمُّونَ بِذَلِكَ ‏ ‏أَوْ يُلْهَمُونَ ذَلِكَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏أَبِي عَوَانَةَ ‏ ‏وَقَالَ فِي الْحَدِيثِ ثُمَّ آتِيهِ الرَّابِعَةَ ‏ ‏أَوْ أَعُودُ الرَّابِعَةَ ‏ ‏فَأَقُولُ يَا رَبِّ مَا بَقِيَ إِلَّا مَنْ حَبَسَهُ الْقُرْآنُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏أَنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏يَجْمَعُ اللَّهُ الْمُؤْمِنِينَ يَوْمَ الْقِيَامَةِ فَيُلْهَمُونَ لِذَلِكَ بِمِثْلِ حَدِيثِهِمَا وَذَكَرَ فِي الرَّابِعَةِ فَأَقُولُ يَا رَبِّ مَا بَقِيَ فِي النَّارِ إِلَّا مَنْ حَبَسَهُ الْقُرْآنُ أَيْ وَجَبَ عَلَيْهِ الْخُلُودُ ‏

“மறுமை நாளில் அல்லாஹ் மக்களை ஒன்று கூட்டும்போது மக்கள், ‘இந்த(ச் சோதனையான) நிலையிலிருந்து நம்மை விடுவிக்க, நம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாரையாவது) நாம் வேண்டிக் கொள்ளலாம்’ என்று கூறியவாறு (ஆதி மனிதரான) ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, ‘நீங்கள்தாம் மனித குலத்தின் தந்தை ஆவீர்கள்; அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்தான். தன்(ன்னிலிருந்து) உயிரை உங்களுக்குள் அவன் ஊதினான். மேலும், தன் வானவர்களுக்கு அவன் கட்டளையிட, அவர்கள் உங்களுக்குச் சிரம் பணிந்தனர். (அத்தகைய சிறப்புகளுக்கு உரிய) நீங்கள் இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்கள் இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்’ என்று கூறுவார்கள். அதற்கு ஆதம் (அலை), (உலகில்) தாம் புரிந்துவிட்ட தவறை நினைவு கூர்ந்து, அதனால் தம் இறைவனிடம் பேச வெட்கப்பட்டவர்களாக ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் (எனக்குப் பின் முக்கிய) முதல் தூதராக இறைவன் அனுப்பிவைத்த நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறிவிடுவார்கள்.

மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அன்னாரும் (உலகில்) தாம் புரிந்துவிட்ட தவறை நினைவு கூர்ந்து, அதனால் தம் இறைவனிடம் பேச வெட்கப்பட்டவர்களாக ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் அல்லாஹ் தன்னுடைய உற்ற நண்பராக்கிக் கொண்ட (நபி) இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறிவிடுவார்கள்.

மக்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்ல, அவர்களும் (உலகில்) தாம் புரிந்துவிட்ட தவறை நினைவு கூர்ந்து, அதனால் தம் இறைவனிடம் பேச வெட்கப்பட்டவர்களாக ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் அல்லாஹ் உரையாடி, தவ்ராத் (வேதத்)தையும் வழங்கிய (நபி) மூஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறிவிடுவார்கள்.

மக்கள் மூஸா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அன்னாரும் (உலகில்) தாம் புரிந்துவிட்ட தவறை நினைவு கூர்ந்து, அதனால் தம் இறைவனிடம் பேச வெட்கப்பட்டவர்களாக ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய சொல்லுமான (நபி) ஈஸாவிடம் செல்லுங்கள்’ என்று கூறிவிடுவார்கள்.

மக்கள் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையுமான (நபி) ஈஸாவிடம் செல்ல, அவர்களும் ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. எனவே, நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான (நபி) முஹம்மது (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறிவிடுவார்கள்.

உடனே மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான் என் இறைவனிடத்தில் அனுமதி கேட்பேன். எனக்கு அனுமதி அளிக்கப்படும். இறைவனைக் கண்டதும் சிரம் பணிந்தவனாக (ஸஜ்தாவில்) விழுந்து விடுவேன். அவன் நாடிய நேரம் வரை (அப்படியே) என்னை விட்டு விடுவான். பிறகு (இறைவனின் தரப்பிலிருந்து) ‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். கேளுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று கூறப்படும். உடனே நான் எனது தலையை உயர்த்தி என் இறைவன் எனக்குக் கற்றுத்தந்த புகழ்மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு, நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன் (நான் யார்-யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்று) எனக்கு வரம்பு விதிப்பான். பின்னர் அவர்களை நான் நரகத்திலிருந்து வெளியேற்றி, சொர்க்கத்துக்கு அனுப்பி வைப்பேன். பின்னர் மீண்டும் நான் (இறைவனிடம்) சென்று சிரம்பணிந்து விழுவேன். இறைவன் தான் நாடும் நேரம்வரை (அப்படியே) என்னை விட்ட பிறகு, ‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று சொல்லப்படும். நானும் அவ்வாறே என் தலையை உயர்த்தி, என் இறைவன் எனக்குக் கற்றுத்தந்த புகழ்மொழிகளைக் கூறி அவனை நான் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். (நான் யார்-யாருக்குப் பரிந்துரைக்கலாம் என்று) எனக்கு அவன் வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் நரகத்திலிருந்து வெளியேற்றி, சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். (இதைப் போன்றே மூன்று/நான்கு முறை நடக்கும்). பிறகு, ‘என் இறைவா! குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் விதியாக்கப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் எஞ்சியிருக்கவில்லை’ என்று கூறுவேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான முஹம்மது இப்னு உபைத் அல் குபைரீ (ரஹ்), ‘நம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாரையாவது) நாம் வேண்டிக் கொள்ளலாம் என்ற எண்ணம் மக்களின் மனங்களில் ஊட்டப்படும்’ என்றும் நபி (ஸல்) பரிந்துரை, மூன்று அல்லது நான்கு தடவைகள் நிகழும் என்றும் குறிப்பிடுகின்றார். மேலும், ‘குர்ஆன் தடுத்து விட்டவர்களைத் தவிர’ என்பதற்கு “நிரந்தர நரகம் விதியாக்கப்பட்டவர்களைத் தவிர” என்று கத்தாதா பின் திஆமா (ரஹ்) கூறியதாகக் குறிப்பிடுகின்றார்.

முஹம்மதிப்னுல் முஸன்னா (ரஹ்), முஹம்மதிப்னு பஷ்ஷார் (ரஹ்) ஆகிய இருவர்வழி அறிவிப்பில், “மறுமை நாளில் அல்லாஹ் மக்களை ஒன்று கூட்டும்போது …” என்பதற்கு பதிலாக, “மறுமை நாளில் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களை ஒன்று கூட்டும்போது …” என்று தொடங்குகிறது. இறுதியில் நபி (ஸல்) நான்காவது தடவையும் பரிந்துரைக்கக் கோரியதாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 84, ஹதீஸ் எண்: 283

حَدَّثَنَا ‏ ‏هَدَّابُ بْنُ خَالِدٍ الْأَزْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عِمْرَانَ ‏ ‏وَثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏يَخْرُجُ مِنْ النَّارِ أَرْبَعَةٌ فَيُعْرَضُونَ عَلَى اللَّهِ فَيَلْتَفِتُ أَحَدُهُمْ فَيَقُولُ أَيْ رَبِّ إِذْ أَخْرَجْتَنِي مِنْهَا فَلَا تُعِدْنِي فِيهَا ‏ ‏فَيُنْجِيهِ اللَّهُ مِنْهَا ‏

“(நரக) நெருப்பிலிருந்து வெளியேறும் நான்கு பேர் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படுவார்கள். அப்போது அவர்களில் ஒருவர், ‘இறைவா! இ(ந்தக் கொடிய நரகத்)திலிருந்து என்னை நீ வெளியேற்றியபின் அதனிடம் என்னைத் திருப்பி அனுப்பி விடாதே!’ என்று (நரகத்தை நோக்கித்) திரும்பிப் பார்த்துக் கூறுவார். அல்லாஹ் அவரை (முடிவாக) அதிலிருந்து காப்பாற்றுவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 84, ஹதீஸ் எண்: 282

و حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْفَضْلُ بْنُ دُكَيْنٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ يَعْنِي مُحَمَّدَ بْنَ أَبِي أَيُّوبَ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏يَزِيدُ الْفَقِيرُ ‏ ‏قَالَ ‏:‏

كُنْتُ قَدْ ‏ ‏شَغَفَنِي ‏ ‏رَأْيٌ مِنْ رَأْيِ ‏ ‏الْخَوَارِجِ ‏ ‏فَخَرَجْنَا فِي عِصَابَةٍ ذَوِي عَدَدٍ نُرِيدُ أَنْ نَحُجَّ ثُمَّ نَخْرُجَ عَلَى النَّاسِ قَالَ فَمَرَرْنَا عَلَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏فَإِذَا ‏ ‏جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏يُحَدِّثُ الْقَوْمَ جَالِسٌ إِلَى سَارِيَةٍ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَإِذَا هُوَ قَدْ ذَكَرَ ‏ ‏الْجَهَنَّمِيِّينَ قَالَ فَقُلْتُ لَهُ يَا صَاحِبَ رَسُولِ اللَّهِ مَا هَذَا الَّذِي تُحَدِّثُونَ وَاللَّهُ يَقُولُ ‏:[ ‏إِنَّكَ مَنْ تُدْخِلْ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ ‏‏وَ ‏‏كُلَّمَا أَرَادُوا أَنْ يَخْرُجُوا مِنْهَا أُعِيدُوا فِيهَا ]‏

‏فَمَا هَذَا الَّذِي تَقُولُونَ قَالَ فَقَالَ أَتَقْرَأُ الْقُرْآنَ قُلْتُ نَعَمْ قَالَ فَهَلْ سَمِعْتَ بِمَقَامِ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏يَعْنِي الَّذِي يَبْعَثُهُ اللَّهُ فِيهِ قُلْتُ نَعَمْ قَالَ ‏ ‏فَإِنَّهُ مَقَامُ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْمَحْمُودُ الَّذِي يُخْرِجُ اللَّهُ بِهِ مَنْ يُخْرِجُ قَالَ ثُمَّ ‏ ‏نَعَتَ ‏ ‏وَضْعَ الصِّرَاطِ وَمَرَّ النَّاسِ عَلَيْهِ قَالَ وَأَخَافُ أَنْ لَا أَكُونَ أَحْفَظُ ذَاكَ قَالَ غَيْرَ أَنَّهُ قَدْ زَعَمَ أَنَّ قَوْمًا يَخْرُجُونَ مِنْ النَّارِ بَعْدَ أَنْ يَكُونُوا فِيهَا قَالَ ‏ ‏يَعْنِي فَيَخْرُجُونَ كَأَنَّهُمْ عِيدَانُ السَّمَاسِمِ قَالَ فَيَدْخُلُونَ نَهَرًا مِنْ أَنْهَارِ الْجَنَّةِ فَيَغْتَسِلُونَ فِيهِ فَيَخْرُجُونَ كَأَنَّهُمْ الْقَرَاطِيسُ ‏

فَرَجَعْنَا قُلْنَا وَيْحَكُمْ أَتُرَوْنَ الشَّيْخَ يَكْذِبُ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَرَجَعْنَا فَلَا وَاللَّهِ مَا خَرَجَ مِنَّا غَيْرُ رَجُلٍ وَاحِدٍ أَوْ كَمَا قَالَ ‏ ‏أَبُو نُعَيْمٍ ‏

(மறுமையில் பரிந்துரை, நரக விடுதலை என்பதெல்லாம் இல்லை எனும்) காரிஜிய்யாக்களின் கருத்துருவாக்கம் என் உள்ளத்தை உறுத்திக் கொண்டேயிருந்தது. இந்நிலையில் (கணிசமான) எண்ணிக்கை கொண்ட ஒரு குழுவாக நாங்கள் ஹஜ் செய்துவிட்டுப் பிறகு (காரிஜிய்யாக்களின் கருத்தைப் பற்றி விசாரிக்க) மக்களிடம் புறப்பட்டுச் செல்லத் தீர்மானித்தோம். அப்பயணத்தில் நாங்கள் மதீனாவை அடைந்தோம். அங்கு ஒரு தூண் அருகில் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அமர்ந்து கொண்டு மக்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிய செய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்தபோது ‘நரக விடுதலை பெறுவோர்’ பற்றியும் குறிப்பிட்டார்கள்.

நான், “இறைத்தூதரின் தோழரே! ‘எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய் …’ (3:192) என்றும் ‘அவர்கள் அ(அந்த நரகத்)தை விட்டு வெளியேற முயலும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்படுவர் …” (32:20) என்றும் அல்லாஹ் கூறுகின்றான். ஆனால், நீங்களோ வேறு விதமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே?” என்று கேட்டேன்.

அதற்கு ஜாபிர் (ரலி), “நீங்கள் குர்ஆனை ஓதிவருபவர்தாமே?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அவ்வாறாயின், மகாமு மஹ்மூது எனும் உயர்ந்த இடத்தில் முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ் எழுப்புவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அப்போது அவர்கள், “அந்த மகாமு மஹ்மூது எனும் உயர்ந்த இடத்தில் நபி (ஸல்) இருக்கும் நிலையில்தான் அவர்களின் மூலம் அல்லாஹ் சிலரை (நரகத்திலிருந்து) வெளியேற்றுவான்” என்று கூறிவிட்டு, பிறகு ‘ஸிராத்’ எனும் பாலம் அமைக்கப்படுவது பற்றியும் அதைக் கடந்து மக்கள் செல்வது பற்றியும் விவரித்தார்கள். மேலும், “இதை நான் மனனமிட்டுக் கொள்ளாதவனாகி விடுவேனோ என்று அஞ்சுகிறேன்” என்றும் குறிப்பிட்டார்கள்.

மேலும், “எள்ளுச் செடியின் குச்சிகளைப் போன்று சிலர் நரகத்திலிருந்து (கரிய நிறத்தில் கருகி) வெளியேறுவார்கள். பிறகு சொர்க்க நதிகளில் ஒன்றில் நீராடி, வெள்ளைத் தாள்களைப் போன்று (புதுப்பொலிவுடன்) வெளியேறுவார்கள்” என்று கூறினார்கள்.

நாங்கள், “(காரிஜிய்யாக்களே!) உங்களுக்கு நாசம் உண்டாகட்டும்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மீது இந்த அறிஞர் பொய்யுரைக்கின்றார் என்றா நீங்கள் கருதுகின்றீர்கள்?” என்று சொல்லிக் கொண்டே (அங்கிருந்து) திரும்பினோம். அல்லாஹ்வின் மீதாணையாக! (பரிந்துரையும் நரக விடுதலையும் உண்டு எனும் எங்கள் கொள்கையிலிருந்து) எங்களில் ஒரேயொரு மனிதரைத் தவிர வேறெவரும் விலகி விடாத நிலையில் நாங்கள் (ஹஜ்ஜிலிருந்து) திரும்பினோம்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) அறிவித்ததாக யஸீத் அல்-ஃபகீர் (ரஹ்)

அத்தியாயம்: 1, பாடம்: 84, ஹதீஸ் எண்: 281

حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَيْسُ بْنُ سُلَيْمٍ الْعَنْبَرِيُّ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏يَزِيدُ الْفَقِيرُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏:‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ قَوْمًا يُخْرَجُونَ مِنْ النَّارِ يَحْتَرِقُونَ فِيهَا إِلَّا ‏ ‏دَارَاتِ ‏ ‏وُجُوهِهِمْ حَتَّى يَدْخُلُونَ الْجَنَّةَ ‏

“முகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தவிர மற்ற (அங்கங்கள்) யாவும் கரிந்து விட்டிருக்கும் நிலையில் நரக நெருப்பிலிருந்து வெளியேறி, சொர்க்கத்திற்குள் நுழையும் கூட்டத்தாரும் உண்டு” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 84, ஹதீஸ் எண்: 280

حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏قَالَ :‏

قُلْتُ ‏ ‏لِعَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏أَسَمِعْتَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يُحَدِّثُ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ اللَّهَ يُخْرِجُ قَوْمًا مِنْ النَّارِ بِالشَّفَاعَةِ؟ قَالَ نَعَمْ ‏

நான் அம்ரு பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், “மக்களில் சிலரைப் பரிந்துரையின் பேரில் அல்லாஹ் நரகத்திலிருந்து வெளியேற்றுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அறிவிப்பதை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்)

அத்தியாயம்: 1, பாடம்: 84, ஹதீஸ் எண்: 279

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏سَمِعَ ‏ ‏جَابِرًا ‏ ‏يَقُولُ ‏:‏

سَمِعَهُ مِنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِأُذُنِهِ يَقُولُ ‏ ‏إِنَّ اللَّهَ يُخْرِجُ نَاسًا مِنْ النَّارِ فَيُدْخِلَهُمْ الْجَنَّةَ

“மக்களில் சிலரை அல்லாஹ் நரகத்திலிருந்து வெளியேற்றி, சொர்க்கத்திற்குள் அனுப்புவான்” என்று நபி (ஸல்) கூறியதை நான் செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)