அத்தியாயம்: 12, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1662

حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مُحَمَّدٍ الْجَرْمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبْجَرَ الْكِنَانِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ ‏ ‏عَنْ ‏ ‏خَيْثَمَةَ ‏ ‏قَالَ ‏ ‏كُنَّا جُلُوسًا مَعَ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ‏ ‏إِذْ جَاءَهُ قَهْرَمَانٌ لَهُ فَدَخَلَ فَقَالَ أَعْطَيْتَ الرَّقِيقَ قُوتَهُمْ قَالَ لَا قَالَ فَانْطَلِقْ فَأَعْطِهِمْ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَفَى بِالْمَرْءِ إِثْمًا أَنْ يَحْبِسَ عَمَّنْ يَمْلِكُ قُوتَهُ

நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ரிப்னில் ஆஸ் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுடைய கருவூலக் காப்பாளர் வீட்டுக்குள் வந்தார். அவரிடம் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), “அடிமைகளுக்கு உணவு கொடுத்துவிட்டாயா?” என்று கேட்டார்கள். அவர், “இல்லை” என்றார். “உடனே சென்று அவர்களுக்கு உணவு கொடு” என்று கூறிவிட்டு,
“ஒருவரது அதிகாரத்தில் உள்ளவருக்கான உணவை அளிக்க மறுப்பதே அவர் பாவி என்பதற்குப் போது(மான சான்றாகு)ம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியிருக்கின்றார்கள்” என்று அறிவுறுத்தினார்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரிப்னில் ஆஸ் (ரலி) வழியாக கைஸமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்).

அத்தியாயம்: 12, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1661

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي كُرَيْبٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏
‏مُزَاحِمِ بْنِ زُفَرَ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دِينَارٌ أَنْفَقْتَهُ فِي سَبِيلِ اللَّهِ وَدِينَارٌ أَنْفَقْتَهُ فِي رَقَبَةٍ وَدِينَارٌ تَصَدَّقْتَ بِهِ عَلَى مِسْكِينٍ وَدِينَارٌ أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ أَعْظَمُهَا أَجْرًا الَّذِي أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ

“நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்ட ஒரு பொற்காசு, நீங்கள் ஓர் அடிமை(யின் விடுதலை)க்காகச் செலவிட்ட ஒரு பொற்காசு, நீங்கள் ஓர் ஏழைக்குத் தர்மம் செய்த ஒரு பொற்காசு, நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்காகச் செலவிட்ட ஒரு பொற்காசு – இவற்றுள் நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்காகச் செலவிட்ட ஒரு பொற்காசே அதிக நற்பலனை உடையதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 12, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1660

حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏حَمَّادِ بْنِ زَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أَسْمَاءَ ‏ ‏عَنْ ‏ ‏ثَوْبَانَ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَفْضَلُ دِينَارٍ يُنْفِقُهُ الرَّجُلُ دِينَارٌ يُنْفِقُهُ عَلَى عِيَالِهِ وَدِينَارٌ يُنْفِقُهُ الرَّجُلُ عَلَى دَابَّتِهِ فِي سَبِيلِ اللَّهِ وَدِينَارٌ يُنْفِقُهُ عَلَى أَصْحَابِهِ فِي سَبِيلِ اللَّهِ ‏
‏قَالَ ‏ ‏أَبُو قِلَابَةَ ‏ ‏وَبَدَأَ بِالْعِيَالِ ثُمَّ قَالَ ‏ ‏أَبُو قِلَابَةَ ‏ ‏وَأَيُّ رَجُلٍ أَعْظَمُ أَجْرًا مِنْ رَجُلٍ يُنْفِقُ عَلَى عِيَالٍ صِغَارٍ يُعِفُّهُمْ أَوْ يَنْفَعُهُمْ اللَّهُ بِهِ ‏ ‏وَيُغْنِيهِمْ

“ஒருவர் தம் குடும்பத்தாருக்காகச் செலவிடுகின்ற ஒரு (தீனார்) பொற்காசும் அல்லாஹ்வின் பாதையில் தமது வாகனத்திற்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும் அல்லாஹ்வின் பாதையில் தம் நண்பர்களுக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசுமே அவர் செலவிடுகின்ற பொற்காசுகளிலேயே சிறந்ததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸவ்பான் (ரலி)

குறிப்பு : அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபூ கிலாபா (ரஹ்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), குடும்பத்தாருக்குச் செலவிடுவதையே ஆரம்பமாகக் கூறினார்கள்” என்று கூறிவிட்டு, “தம் சின்னஞ் சிறு பிள்ளைகளுக்குச் செலவிடுகின்றவரைவிட அதிக நற்பலன் அடைந்துகொள்ளும் மனிதர் எவர்? (ஏனெனில்) அவர் தம் பிள்ளைகளைச் சுயமரியாதையோடு வாழச் செய்கிறார். அல்லது அவர் மூலம் அல்லாஹ் அவர்களுக்கு உதவி, அவர்களைத் தன்னிறைவுடன் வாழச் செய்கின்றான்” என்றும் கூறினார்கள் எனக் குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 12, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1558

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُلَيَّةَ ‏ ‏وَأَخْبَرَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏قَالَ وَقَالَتْ ‏ ‏حَفْصَةُ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ عَطِيَّةَ ‏ ‏قَالَتْ :‏‏

‏اغْسِلْنَهَا وِتْرًا ثَلَاثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا قَالَ وَقَالَتْ ‏ ‏أُمُّ عَطِيَّةَ ‏ ‏مَشَطْنَاهَا ثَلَاثَةَ ‏ ‏قُرُونٍ

“ஒற்றைப்படையாக(த் தண்ணீர் ஊற்றி)க் குளிப்பாட்டுங்கள். மூன்று, அல்லது ஐந்து, அல்லது ஏழு தடவைகள் (தண்ணீர் ஊற்றுங்கள்)” என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவருக்குத் தலைவாரி மூன்று பின்னல்கள் இட்டோம்.

அறிவிப்பாளர் : உம்மு அத்திய்யா (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும் மய்யித்தானது, நபி (ஸல்) அவர்களின் மகளார் ஸைனப் (ரலி) என்பது, இதனை அடுத்த 1559 ஹதீஸின்படி தெளிவாக்கப்பட்டுள்ளது