அத்தியாயம்: 12, பாடம்: 20, ஹதீஸ் எண்: 1691

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْمُنْذِرِ بْنِ جَرِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏

‏كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي صَدْرِ النَّهَارِ قَالَ فَجَاءَهُ قَوْمٌ حُفَاةٌ عُرَاةٌ مُجْتَابِي ‏ ‏النِّمَارِ أَوْ الْعَبَاءِ مُتَقَلِّدِي السُّيُوفِ عَامَّتُهُمْ مِنْ ‏ ‏مُضَرَ ‏ ‏بَلْ كُلُّهُمْ مِنْ ‏ ‏مُضَرَ ‏ ‏فَتَمَعَّرَ ‏ ‏وَجْهُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِمَا رَأَى بِهِمْ مِنْ ‏ ‏الْفَاقَةِ ‏ ‏فَدَخَلَ ثُمَّ خَرَجَ فَأَمَرَ ‏ ‏بِلَالًا ‏ ‏فَأَذَّنَ وَأَقَامَ فَصَلَّى ثُمَّ خَطَبَ فَقَالَ ” ‏‏يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ ‏ ‏إِلَى آخِرِ الْآيَةِ ‏ ‏إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا“ ‏ ‏وَالْآيَةَ الَّتِي فِي ‏ ‏الْحَشْرِ ” ‏اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ ‏“ ‏ ‏تَصَدَّقَ رَجُلٌ مِنْ دِينَارِهِ مِنْ دِرْهَمِهِ مِنْ ثَوْبِهِ مِنْ صَاعِ ‏ ‏بُرِّهِ ‏ ‏مِنْ صَاعِ تَمْرِهِ حَتَّى قَالَ وَلَوْ ‏ ‏بِشِقِّ ‏ ‏تَمْرَةٍ قَالَ فَجَاءَ رَجُلٌ مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏بِصُرَّةٍ كَادَتْ كَفُّهُ تَعْجِزُ عَنْهَا بَلْ قَدْ عَجَزَتْ قَالَ ثُمَّ تَتَابَعَ النَّاسُ حَتَّى رَأَيْتُ كَوْمَيْنِ مِنْ طَعَامٍ وَثِيَابٍ حَتَّى رَأَيْتُ وَجْهَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَتَهَلَّلُ ‏ ‏كَأَنَّهُ مُذْهَبَةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً فَلَهُ أَجْرُهَا وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَا جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْمُنْذِرَ بْنَ جَرِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏ ‏كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَدْرَ النَّهَارِ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ جَعْفَرٍ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏ابْنِ مُعَاذٍ ‏ ‏مِنْ الزِّيَادَةِ قَالَ ثُمَّ صَلَّى الظُّهْرَ ثُمَّ خَطَبَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏وَأَبُو كَامِلٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الْأُمَوِيُّ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْمُنْذِرِ بْنِ جَرِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏ ‏كُنْتُ جَالِسًا عِنْدَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَتَاهُ قَوْمٌ مُجْتَابِي ‏ ‏النِّمَارِ وَسَاقُوا الْحَدِيثَ بِقِصَّتِهِ وَفِيهِ فَصَلَّى الظُّهْرَ ثُمَّ صَعِدَ مِنْبَرًا صَغِيرًا فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ أَمَّا بَعْدُ فَإِنَّ اللَّهَ أَنْزَلَ فِي كِتَابِهِ ‏ ” ‏يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا ‏ ‏رَبَّكُمُ‏‏“ ‏الْآيَةَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ ‏ ‏وَأَبِي الضُّحَى ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ هِلَالٍ الْعَبْسِيِّ ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏ ‏جَاءَ نَاسٌ مِنْ ‏ ‏الْأَعْرَابِ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَيْهِمْ الصُّوفُ فَرَأَى سُوءَ حَالِهِمْ قَدْ أَصَابَتْهُمْ حَاجَةٌ ‏ ‏فَذَكَرَ بِمَعْنَى حَدِيثِهِمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாங்கள் (ஒரு நாள்) முற்பகல் நேரத்தில் இருந்தபோது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் – இல்லையில்லை – அவர்களில் அனைவருமே ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, “மக்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்துகொள்ளுங்கள் …” எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும், ‘அல்ஹஷ்ர்’ அத்தியாயத்திலுள்ள, “நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்திற் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக் காட்டி(ஏழை முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது, “(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக் காசு, துணி, ஒரு ‘ஸாஉ’ கோதுமை, ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்” என்று கூறி, “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்” என்று வலியுறுத்தினார்கள்.

உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக் காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ கோதுமையிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது; தூக்கவே முடியவில்லை. தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக்கொண்டிருந்ததையும் நான் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)

குறிப்புகள்:

ஒரு ‘ஸாஉ’ என்பது நடுத்தரமான ஒருவரின் இரு கை நிறைய நான்கு முறை அள்ளிப் போட்டு வழங்குவதைக் குறிக்கும்.
முஆத் அல் அன்பரீ (ரஹ்) வழி அறிவிப்பும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஒரு நாள்) முற்பகல் நேரத்தில் நாங்கள் இருந்தோம்” என்றே தொடங்குகிறது.

உபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) வழி அறிவிப்பில், “பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) லுஹ்ருத் தொழுகை தொழுவித்துவிட்டு உரை நிகழ்த்தினார்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அபூஅவானா (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அணிந்த ஒரு கூட்டத்தார் வந்தார்கள்” என்று ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) லுஹ்ருத் தொழுவித்தார்கள். பிறகு சிறிய சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது ஏறி அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பின்னர் “அம்மா பஅத் (இறை வாழ்த்துக்குப் பின்…)” என்று கூறிவிட்டு, “அல்லாஹ் தனது வேதத்தில் மக்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனைப் பயந்துகொள்ளுங்கள்… (4:1) என்று கூறியுள்ளான்” என்றார்கள் என்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்துர் ரஹ்மான் பின் ஹிலால் அல் அப்ஸீ (ரஹ்) வழி அறிவிப்பு, “கிராமவாசிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்கள்மீது கம்பளியாடைகள் காணப்பட்டன. அவர்களது வறிய நிலையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கண்டார்கள். அவர்களுக்குத் தேவை ஏற்பட்டிருந்தது…” என்று ஜரீர் (ரலி) கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.

அத்தியாயம்: 12, பாடம்: 20, ஹதீஸ் எண்: 1690

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَدِيِّ بْنِ حَاتِمٍ ‏

‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ ذَكَرَ النَّارَ فَتَعَوَّذَ مِنْهَا ‏ ‏وَأَشَاحَ ‏ ‏بِوَجْهِهِ ثَلَاثَ مِرَارٍ ثُمَّ قَالَ ‏ ‏اتَّقُوا النَّارَ وَلَوْ ‏ ‏بِشِقِّ ‏ ‏تَمْرَةٍ فَإِنْ لَمْ تَجِدُوا فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு முறை) நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு அதிலிருந்து பாதுகாப்புக் கோரினார்கள். மேலும், (நரகத்தைக் கண்டு அஞ்சுவதைப் போன்று) தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள். பின்னர் “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் உங்களை நரகத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். அதுவும் இல்லாதவர் இன்சொல்லைக் கொண்டேனும் (நரகத்திலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அதீ பின் ஹா(த்)திம் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 20, ஹதீஸ் எண்: 1689

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَدِيِّ بْنِ حَاتِمٍ ‏ ‏قَالَ ‏

‏ذَكَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏النَّارَ فَأَعْرَضَ ‏ ‏وَأَشَاحَ ‏ ‏ثُمَّ قَالَ ‏ ‏اتَّقُوا النَّارَ ثُمَّ أَعْرَضَ ‏ ‏وَأَشَاحَ ‏ ‏حَتَّى ظَنَنَّا أَنَّهُ كَأَنَّمَا يَنْظُرُ إِلَيْهَا ثُمَّ قَالَ اتَّقُوا النَّارَ وَلَوْ ‏ ‏بِشِقِّ ‏ ‏تَمْرَةٍ فَمَنْ لَمْ يَجِدْ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ ‏

‏وَلَمْ يَذْكُرْ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏كَأَنَّمَا وَقَالَ حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு முறை) நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது நரகத்தைப் பார்த்து அஞ்சுவதைப் போன்று) தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். பின்னர் “நரகத்திலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். பிறகு (நரகத்தைக் கண்டு அஞ்சுவதைப் போன்று மீண்டும்) தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். அவர்கள் நரகத்தையே பார்க்கிறார்கள் போலும் என்று நாங்கள் எண்ணினோம். பின்னர் “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் – அதுவும் இல்லாதவர் – இன்சொல்லைக் கொண்டேனும் உங்களை நரகத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அதீ பின் ஹா(த்)திம் (ரலி)

குறிப்பு: அபூகுறைப் (ரஹ்) வழி அறிவிப்பில், ‘பார்க்கிறார்கள் போலும்’ எனும் குறிப்பு இடம்பெறவில்லை. ‘அவர்கள் நரகத்தையே பார்க்கிறார்களோ என்று நாங்கள் எண்ணினோம்’ என்றே இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 12, பாடம்: 20, ஹதீஸ் எண்: 1688

حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ حُجْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَدِيِّ بْنِ حَاتِمٍ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا سَيُكَلِّمُهُ اللَّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ فَيَنْظُرُ أَيْمَنَ مِنْهُ فَلَا يَرَى إِلَّا مَا قَدَّمَ وَيَنْظُرُ أَشْأَمَ مِنْهُ فَلَا يَرَى إِلَّا مَا قَدَّمَ وَيَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَلَا يَرَى إِلَّا النَّارَ تِلْقَاءَ وَجْهِهِ فَاتَّقُوا النَّارَ وَلَوْ ‏ ‏بِشِقِّ ‏ ‏تَمْرَةٍ ‏

‏زَادَ ‏ ‏ابْنُ حُجْرٍ ‏ ‏قَالَ ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏وَحَدَّثَنِي ‏ ‏عَمْرُو بْنُ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏خَيْثَمَةَ ‏ ‏مِثْلَهُ وَزَادَ فِيهِ وَلَوْ بِكَلِمَةٍ طَيِّبَةٍ ‏ ‏و قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏قَالَ ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏خَيْثَمَةَ

“அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் (தனித்தனியாகப்) பேசுவான். அப்போது அல்லாஹ்விற்கும் அவருக்கும் இடையே மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். பிறகு அவர் தமது வலப் பக்கம் பார்ப்பார். தாம் ஏற்கனவே (உலகில்) செய்த செயல்களைத் தவிர வேறெதையும் அங்கு அவர் காணமாட்டார். பின்னர் அவர் தமது இடப் பக்கம் பார்ப்பார். தாம் ஏற்கனவே (உலகில்) செய்த செயல்களைத் தவிர வேறெதையும் அங்கும் அவர் காணமாட்டார். மேலும், அவர் தமக்கு எதிரில் பார்ப்பார். தமது முகத்துக்கெதிரே நரக நெருப்பையே அவர் காண்பார். ஆகவே, முடிந்தால் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அதீ பின் ஹா(த்)திம் (ரலி)

குறிப்பு: அலீ பின் ஹுஜ்ரு (ரஹ்) வழி அறிவிப்பில், “இன்சொல்லைக் கொண்டேனும் (நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்)” என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 12, பாடம்: 20, ஹதீஸ் எண்: 1687

حَدَّثَنَا ‏ ‏عَوْنُ بْنُ سَلَّامٍ الْكُوفِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ الْجُعْفِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَعْقِلٍ ‏ ‏عَنْ ‏ ‏عَدِيِّ بْنِ حَاتِمٍ ‏ ‏قَالَ ‏

‏سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ ‏ ‏يَسْتَتِرَ ‏ ‏مِنْ النَّارِ وَلَوْ ‏ ‏بِشِقِّ ‏ ‏تَمْرَةٍ فَلْيَفْعَلْ.

“உங்களுள் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரக நெருப்பிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள இயலுமானவர், அவ்வாறே செய்துகொள்ளட்டும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அதீ பின் ஹா(த்)திம் (ரலி)