அத்தியாயம்: 12, பாடம்: 43, ஹதீஸ் எண்: 1747

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَأَبُو سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي زُرْعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اللَّهُمَّ اجْعَلْ رِزْقَ آلِ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏قُوتًا

“இறைவா! முஹம்மதின் குடும்பத்தாருக்குப் பசியைத் தணிக்கத் தேவையான உணவை வழங்குவாயாக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 43, ஹதீஸ் எண்: 1746

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏شُرَحْبِيلُ وَهُوَ ابْنُ شَرِيكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏قَدْ أَفْلَحَ مَنْ أَسْلَمَ وَرُزِقَ كَفَافًا وَقَنَّعَهُ اللَّهُ بِمَا آتَاهُ

“யார் முஸ்லிமாகி, அடிப்படை வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கி இருப்பதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்றுவிட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரிப்னுல் ஆஸ் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 43, ஹதீஸ் எண்: 754

حَدَّثَنَا ‏ ‏الْحَكَمُ بْنُ مُوسَى أَبُو صَالِحٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِقْلُ بْنُ زِيَادٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْأَوْزَاعِيَّ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏رَبِيعَةُ بْنُ كَعْبٍ الْأَسْلَمِيُّ ‏ ‏قَالَ ‏

‏كُنْتُ أَبِيتُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَتَيْتُهُ بِوَضُوئِهِ وَحَاجَتِهِ فَقَالَ لِي سَلْ فَقُلْتُ أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ قَالَ أَوْ غَيْرَ ذَلِكَ قُلْتُ هُوَ ذَاكَ قَالَ ‏ ‏فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ ‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஒரு நாள்) தங்கியிருந்தேன். அவர்கள் (இரவுத் தொழுகைக்காக எழுந்தபோது) இயற்கைக்கடனை நிறைவேற்றி(ய பின் துப்புரவு செய்து) கொள்வதற்கும் உளூச் செய்து கொள்வதற்கும் தண்ணீர் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள், “என்னிடம் (ஏதேனும்) கோருவீராக!” என்று என்னிடம் கூறினார்கள். “சொர்க்கத்தில் நான் உங்களுடன் இருக்க வேண்டும் என்று கோருகிறேன்” என்றேன். அதற்கு, “இதையன்றி வேறு ஏதேனும் (கோருவீராக)” என்றார்கள். நான், “(இல்லை) அதுதான்” என்றேன். அதற்கு அவர்கள், “அப்படியானால் உமது கோரிக்கை நிறைவேற அதிகமாக ஸஜ்தாச் செய்து எனக்கு உதவுவீராக!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர்: ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமீ (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 43, ஹதீஸ் எண்: 753

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْأَوْزَاعِيَّ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏الْوَلِيدُ بْنُ هِشَامٍ الْمُعَيْطِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مَعْدَانُ بْنُ أَبِي طَلْحَةَ الْيَعْمَرِيُّ ‏ ‏قَالَ لَقِيتُ ‏ ‏ثَوْبَانَ ‏ ‏مَوْلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْتُ ‏

‏أَخْبِرْنِي بِعَمَلٍ أَعْمَلُهُ يُدْخِلُنِي اللَّهُ بِهِ الْجَنَّةَ ‏ ‏أَوْ قَالَ قُلْتُ بِأَحَبِّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ ‏ ‏فَسَكَتَ ثُمَّ سَأَلْتُهُ فَسَكَتَ ثُمَّ سَأَلْتُهُ الثَّالِثَةَ فَقَالَ سَأَلْتُ عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏عَلَيْكَ بِكَثْرَةِ السُّجُودِ لِلَّهِ فَإِنَّكَ لَا تَسْجُدُ لِلَّهِ سَجْدَةً إِلَّا رَفَعَكَ اللَّهُ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْكَ بِهَا خَطِيئَةً ‏

‏قَالَ ‏ ‏مَعْدَانُ ‏ ‏ثُمَّ لَقِيتُ ‏ ‏أَبَا الدَّرْدَاءِ ‏ ‏فَسَأَلْتُهُ ‏ ‏فَقَالَ لِي مِثْلَ مَا قَالَ لِي ‏ ‏ثَوْبَانُ ‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஸவ்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து, “என்னை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைவிக்கத் தக்க, என்னால் செய்ய முடிந்த ஒரு நற்செயலை அல்லது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான ஒரு நற்செயலை எனக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டேன். அதற்கு ஸவ்பான் (ரலி) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். பிறகு நான் மீண்டும் (அதே கேள்வியைக்) கேட்டேன். அப்போதும் அவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். நான் மூன்றாவது முறையாக அவர்களிடம் கேட்டபோது, “இதுபற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அல்லாஹ்வுக்கு நீ அதிகமாக ஸஜ்தா (சிரவணக்கம்) செய்வாயாக! ஏனெனில், நீ அவனுக்காக ஒரு ஸஜ்தாச் செய்தால் அதற்காக அவன் உனது ஒரு தகுதியை உயர்த்தி உன் குற்றங்களில் ஒன்றை அவன் மன்னிக்காமல் இருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்றார்கள்.

பின்னர் நான் அபூதர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தபோது இது குறித்துக் கேட்டேன். அவர்களும் ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதைப் போன்றே கூறினார்கள்.

அறிவிப்பாளர்: ஸவ்பான் (ரலி), அபூதர்தா (ரலி) வழியாக மஅதான் பின் அபீதல்ஹா அல்யஃமரீ (ரஹ்)