حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَقَ الْمُسَيَّبِيُّ حَدَّثَنِي أَنَسٌ يَعْنِي ابْنَ عِيَاضٍ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ أَخْبَرَهُ:
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَقْبَلَ فُرْضَتَيْ الْجَبَلِ الَّذِي بَيْنَهُ وَبَيْنَ الْجَبَلِ الطَّوِيلِ نَحْوَ الْكَعْبَةِ يَجْعَلُ الْمَسْجِدَ الَّذِي بُنِيَ ثَمَّ يَسَارَ الْمَسْجِدِ الَّذِي بِطَرَفِ الْأَكَمَةِ وَمُصَلَّى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْفَلَ مِنْهُ عَلَى الْأَكَمَةِ السَّوْدَاءِ يَدَعُ مِنْ الْأَكَمَةِ عَشْرَةَ أَذْرُعٍ أَوْ نَحْوَهَا ثُمَّ يُصَلِّي مُسْتَقْبِلَ الْفُرْضَتَيْنِ مِنْ الْجَبَلِ الطَّوِيلِ الَّذِي بَيْنَكَ وَبَيْنَ الْكَعْبَةِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (‘தூத் தவா’வில்) கஅபாவின் திசையில் அமைந்த ஓர் உயரமான மலையின் இரு குன்றுகளை நோக்கி(அல்லாஹ்வை வணங்கி)னார்கள். (அதாவது தற்போது) அங்கு கட்டப்பட்டுள்ள பள்ளிவாசலை, மேட்டுப் புறத்தில் அமைந்த தொழும் இடத்திற்கு இடப்பக்கமாக ஆக்கிக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுத இடம், கருப்பு மேட்டிற்குக் கீழே சுமார் பத்து முழம் தள்ளி இருந்தது. உமக்கும்* கஅபாவிற்கும் இடையே அமைந்த உயரமான மலையின் இரு குன்றுகளை நோக்கித் தொழுதார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி வழியாக நாஃபிஉ (ரஹ்)
குறிப்பு:
*“உமக்கும்“ என்று இப்னு உமர் (ரலி) அவர்களால் குறிப்பிடப்படுபவர், அவரின் மாணவரும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளருமான நாஃபிஉ (ரஹ்) ஆவார்.