حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ قَالَ مُحَمَّدُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي عَطَاءٌ قَالَ:
حَضَرْنَا مَعَ ابْنِ عَبَّاسٍ جَنَازَةَ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَرِفَ فَقَالَ ابْنُ عَبَّاسٍ هَذِهِ زَوْجُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا رَفَعْتُمْ نَعْشَهَا فَلَا تُزَعْزِعُوا وَلَا تُزَلْزِلُوا وَارْفُقُوا فَإِنَّهُ كَانَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تِسْعٌ فَكَانَ يَقْسِمُ لِثَمَانٍ وَلَا يَقْسِمُ لِوَاحِدَةٍ
قَالَ عَطَاءٌ الَّتِي لَا يَقْسِمُ لَهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيِّ بْنِ أَخْطَبَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ عَبْدِ الرَّزَّاقِ عَنْ ابْنِ جُرَيْجٍ بِهَذَا الْإِسْنَادِ وَزَادَ قَالَ عَطَاءٌ كَانَتْ آخِرَهُنَّ مَوْتًا مَاتَتْ بِالْمَدِينَةِ
நபி (ஸல்) அவர்களுடைய மனைவி மைமூனா (ரலி) அவர்களின் ஜனாஸாவில் ‘ஸரிஃப்’ எனும் இடத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் நாங்கள் கலந்துகொண்டோம். அப்போது, “இவர் நபி (ஸல்) அவர்களுடைய மனைவி ஆவார். இவரது (உடல் வைக்கப்பட்டுள்ள) கட்டிலைத் தூக்கும்போது அலுங்காமல் குலுங்காமல் மெதுவாக(எடுத்து)ச் செல்லுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர். எட்டுப் பேருக்கு அவர்கள் (இரவைப்) பங்கிட்டுவந்தார்கள்; ஒரேயொருவருக்கு மட்டும் பங்கிட்டுத் தரவில்லை” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்)
குறிப்பு :
“நபி (ஸல்) இரவைப் பங்கிட்டுக் கொடுக்காத அந்தத் துணைவி, ஸஃபிய்யா பின்த்தி ஹுயை பின் அக்தப் ஆவார்” என்று அறிவிப்பாளர் அதாஉ (ரஹ்) குறிப்பிடுகின்றார்.
இப்னு ஜுரைஜ் (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்களின் துணைவியருள் மதீனாவில் இறந்த அவர்தாம் இறுதியானவர் என அதாஉ (ரஹ்) கூறினார்” என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.