அத்தியாயம்: 17, பாடம்: 4, ஹதீஸ் எண்: 2627

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ‏ ‏أَنَّ ‏ ‏مُحَمَّدَ بْنَ شِهَابٍ ‏ ‏كَتَبَ يَذْكُرُ ‏ ‏أَنَّ ‏ ‏عُرْوَةَ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ ‏ ‏حَدَّثَتْهُ أَنَّ ‏ ‏أُمَّ حَبِيبَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَدَّثَتْهَا: ‏

‏أَنَّهَا قَالَتْ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ انْكِحْ أُخْتِي ‏ ‏عَزَّةَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَتُحِبِّينَ ذَلِكِ فَقَالَتْ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ لَسْتُ لَكَ ‏ ‏بِمُخْلِيَةٍ ‏ ‏وَأَحَبُّ مَنْ شَرِكَنِي فِي خَيْرٍ أُخْتِي فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِنَّ ذَلِكِ لَا يَحِلُّ لِي قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَإِنَّا نَتَحَدَّثُ أَنَّكَ تُرِيدُ أَنْ تَنْكِحَ ‏ ‏دُرَّةَ بِنْتَ أَبِي سَلَمَةَ ‏ ‏قَالَ بِنْتَ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏قَالَتْ نَعَمْ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَوْ أَنَّهَا لَمْ تَكُنْ ‏ ‏رَبِيبَتِي ‏ ‏فِي ‏ ‏حِجْرِي ‏ ‏مَا حَلَّتْ لِي إِنَّهَا ابْنَةُ أَخِي مِنْ الرَّضَاعَةِ أَرْضَعَتْنِي ‏ ‏وَأَبَا سَلَمَةَ ‏ ‏ثُوَيْبَةُ ‏ ‏فَلَا تَعْرِضْنَ عَلَيَّ بَنَاتِكُنَّ وَلَا أَخَوَاتِكُنَّ ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الزُّهْرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِإِسْنَادِ ‏ ‏ابْنِ أَبِي حَبِيبٍ ‏ ‏نَحْوَ حَدِيثِهِ وَلَمْ يُسَمِّ أَحَدٌ مِنْهُمْ فِي حَدِيثِهِ ‏ ‏عَزَّةَ ‏ ‏غَيْرُ ‏ ‏يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ

நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரி ‘அஸ்ஸா’வைத் தாங்கள் மணந்துகொள்ளுங்கள்” என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதை நீ விரும்புகின்றாயா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! ஆம். (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்கு மனைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகின்றேன்” என்று சொன்னேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அ(வளை மணப்ப)து எனக்கு அனுமதிக்கப்பட்டதன்று” என்றார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் அபூஸலமாவின் மகள் ‘துர்ரா’வை மணந்துகொள்ள விரும்புகின்றீர்கள் என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோமே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “அபூஸலமாவின் மகளையா?” என்று கேட்க, நான் “ஆம்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவள் எனது வளர்ப்பு மகளாக (இருந்துவருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும்கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனெனில்,) அவள் என் பால்குடிச் சகோதரரின் மகளாவாள். எனக்கும் (அவளுடைய தந்தை) அபூஸலமாவுக்கும் ‘ஸுவைபா’ (எனும் அடிமைப் பெண்) பாலூட்டியிருக்கின்றார். ஆகவே, உங்கள் பெண் மக்களையோ உங்கள் சகோதரிகளையோ (மணந்துகொள்ளும்படி) என்னிடம் கோராதீர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஹபீபா பின்த்தி அபீஸுஃப்யான் (ரலி)


குறிப்பு :

மனைவி உயிரோடிருக்கும்போது அவளுடைய சகோதரியை மணக்க முடியாது.

வேறு சில அறிவிப்பாளர்களின் வழியாக இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டிருப்பினும் யஸீத் பின் அபீஹபீப் (ரஹ்) வழி அறிவிப்பில் மட்டுமே உம்மு ஹபீபா (ரலி) அவர்களுடைய சகோதரியின் பெயர் ‘அஸ்ஸா’ என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்களின் மனைவியருள் ஒருவரான உம்மு ஸலமா (ரலி) அவர்களின் முதல் கணவர் அபூஸலமா (ரலி) அவர்களின் இயற்பெயர் அப்துல்லாஹ் என்பதாகும். அன்னாரின் தந்தை அப்துல் அஸதுக்கும், நபி (ஸல்) அவர்களின் அத்தை பர்ரா பின்த்தி அப்தில் முத்தலிப் அவர்களுக்கும் மகனாகப் பிறந்த அபூஸலமா (ரலி), தொடக்க கால முஸ்லிம்களுள் ஒருவராவார்; மனைவியுடன் அபிஸீனியாவிற்கு முதலில் புலம் பெயர்ந்து சென்றவர். இரண்டாவது ஹிஜ்ரத்தான மதீனாவிற்கும் புலம்பெயர்ந்து சென்ற நபித் தோழர்.

அத்தியாயம்: 17, பாடம்: 4, ஹதீஸ் எண்: 2626

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ حَبِيبَةَ بِنْتِ أَبِي سُفْيَانَ ‏ ‏قَالَتْ: ‏

‏دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْتُ لَهُ هَلْ لَكَ فِي ‏ ‏أُخْتِي ‏ ‏بِنْتِ ‏ ‏أَبِي سُفْيَانَ ‏ ‏فَقَالَ أَفْعَلُ مَاذَا قُلْتُ تَنْكِحُهَا قَالَ ‏ ‏أَوَ تُحِبِّينَ ذَلِكِ قُلْتُ لَسْتُ لَكَ ‏ ‏بِمُخْلِيَةٍ ‏ ‏وَأَحَبُّ مَنْ شَرِكَنِي فِي الْخَيْرِ أُخْتِي قَالَ فَإِنَّهَا لَا تَحِلُّ لِي قُلْتُ فَإِنِّي أُخْبِرْتُ أَنَّكَ تَخْطُبُ ‏ ‏دُرَّةَ بِنْتَ أَبِي سَلَمَةَ ‏ ‏قَالَ بِنْتَ ‏ ‏أُمِّ سَلَمَةَ ‏ ‏قُلْتُ نَعَمْ قَالَ ‏ ‏لَوْ أَنَّهَا لَمْ تَكُنْ ‏ ‏رَبِيبَتِي ‏ ‏فِي ‏ ‏حِجْرِي ‏ ‏مَا حَلَّتْ لِي إِنَّهَا ابْنَةُ أَخِي مِنْ الرَّضَاعَةِ أَرْضَعَتْنِي وَأَبَاهَا ‏ ‏ثُوَيْبَةُ ‏ ‏فَلَا تَعْرِضْنَ عَلَيَّ بَنَاتِكُنَّ وَلَا أَخَوَاتِكُنَّ ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏سُوَيْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَسْوَدُ بْنُ عَامِرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏سَوَاءً

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு முறை) என் வீட்டிற்கு வந்தபோது நான் அவர்களிடம், “அபூஸுஃப்யானின் மகளான என் சகோதரி விஷயத்தில் தங்களுக்கு நாட்டம் உண்டா?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள். நான் “அவளை நீங்கள் மணந்துகொள்ள வேண்டும்” என்றேன். அவர்கள், “இதை நீ விரும்புகின்றாயா?” என்று கேட்டார்கள். நான், “தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் (மனைவியென்று) இல்லையே! (தங்களுக்கு மனைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகின்றேன்” என்று சொன்னேன்.

அதற்கு நபி (ஸல்), “அ(வளை மணப்ப)து எனக்கு அனுமதிக்கப்பட்டதன்று” என்றார்கள். நான், “தாங்கள் அபூஸலமாவின் மகள் ’துர்ரா’வைப் பெண் கேட்பதாகக் கேள்விப்பட்டேனே!” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “உம்மு ஸலமா (வுக்கு முந்தைய கணவன் மூலம் பிறந்த) மகளையா?” என்று கேட்க, நான் “ஆம்” என்றேன். அவர்கள், “அவள் என் வளர்ப்பு மகளாக (இருந்து வருகின்றாள். அப்படி) இல்லாவிட்டாலும்கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனெனில்,) அவள் என் பால்குடிச் சகோதரரின் மகளாவாள். எனக்கும் அவளுடைய தந்தை(அபூஸலமாவு)க்கும் ‘ஸுவைபா’ (எனும் அடிமைப் பெண்) பாலூட்டியிருக்கிறார். ஆகவே, உங்கள் பெண் மக்களையோ உங்கள் சகோதரிகளையோ (மணந்து கொள்ளும்படி) என்னிடம் கோராதீர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஹபீபா பின்த்தி அபீஸுஃப்யான் (ரலி)


குறிப்பு :

மனைவி உயிரோடிருக்கும்போது அவளுடைய சகோதரியை மணக்க முடியாது; வளர்ப்பு மகளை மணக்க முடியாது; பால்குடிச் சகோதரரின் மகளை மணக்க முடியாது.