و حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ عَنْ طَاوُسٍ
أَنَّ أَبَا الصَّهْبَاءِ قَالَ لِابْنِ عَبَّاسٍ هَاتِ مِنْ هَنَاتِكَ أَلَمْ يَكُنْ الطَّلَاقُ الثَّلَاثُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَاحِدَةً فَقَالَ قَدْ كَانَ ذَلِكَ فَلَمَّا كَانَ فِي عَهْدِ عُمَرَ تَتَايَعَ النَّاسُ فِي الطَّلَاقِ فَأَجَازَهُ عَلَيْهِمْ
அபுஸ்ஸஹ்பா (ரஹ்), இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “உங்களிடமுள்ள அரிய தகவல்களைக் கூறுங்கள்; (ஒரே நேரத்தில் சொல்லப்படும்) மூன்று தலாக்குகள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்திலும் அபூபக்ரு (ரலி) காலத்திலும் ஒரு தலாக்காக இருக்கவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “ஆம்; அவ்வாறுதான் இருந்தது. பின்னர் உமர் (ரலி) காலத்தில் மக்கள் தலாக்கை மலிவாக்கி அவசரக் கோலத்தில் செய்ய ஆரம்பித்தபோது, உமர் (ரலி) (ஒரே நேரத்தில் சொல்லப்படும்) மூன்று தலாக்குகளை அவர்களுக்கு அனுமதித்தார்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி வழியாக தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)