و حَدَّثَنِيهِ حَرْمَلَةُ بْنُ يَحْيَى أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ أَنَّ ابْنَ شِهَابٍ أَخْبَرَهُ قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ :
أَنَّ أُمَّ قَيْسٍ بِنْتَ مِحْصَنٍ وَكَانَتْ مِنْ الْمُهَاجِرَاتِ الْأُوَلِ اللَّاتِي بَايَعْنَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ أُخْتُ عُكَّاشَةَ بْنِ مِحْصَنٍ أَحَدُ بَنِي أَسَدِ بْنِ خُزَيْمَةَ قَالَ أَخْبَرَتْنِي أَنَّهَا أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِابْنٍ لَهَا لَمْ يَبْلُغْ أَنْ يَأْكُلَ الطَّعَامَ قَالَ عُبَيْدُ اللَّهِ أَخْبَرَتْنِي أَنَّ ابْنَهَا ذَاكَ بَالَ فِي حَجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَاءٍ فَنَضَحَهُ عَلَى ثَوْبِهِ وَلَمْ يَغْسِلْهُ غَسْلًا
திடஉணவு உட்கொள்ளும் பருவத்தை அடையாத என் ஆண் குழதையுடன் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். என் குழந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தண்ணீர் கொண்டு வரச் சொல்லி (சிறுநீர் பட்ட) தமது ஆடையின் மீது தெளித்தார்கள்; அதை(க் கசக்கி) அழுத்தமாகக் கழுவவில்லை.
அறிவிப்பாளர் : உம்மு கைஸ் பின்த்தி மிஹ்ஸன் (ரலி) வழியாக உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்)
குறிப்பு :
இந்த அறிவிப்பில் உம்மு கைஸ் பின்த்தி மிஹ்ஸன் (ரலி) என்ற நபித்தோழியைப் பற்றி, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தவர்; ஆரம்பத்தில் நாடு துறந்து ஹிஜ்ரத் சென்ற பெண்மணிகளுள் ஒருவர்; பனூ அஸத் பின் குஸைமா குலத்தைச் சேர்ந்த உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களின் சகோதரி” என்று அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் சிறப்பு அறிமுகம் செய்கின்றார்.