அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2865

‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ: ‏
قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَنْ يَزْرَعَهَا وَعَجَزَ عَنْهَا فَلْيَمْنَحْهَا أَخَاهُ الْمُسْلِمَ وَلَا يُؤَاجِرْهَا إِيَّاهُ

“நிலம் வைத்திருப்பவர் அதை விளைவித்துக் கொள்ளட்டும்; இயலாவிட்டால், அதைத் தம் சகோதர முஸ்லிமிடம் விளைவிக்கக் கொடுத்துவிடட்டும்! அதற்காக அவரிடம் கூலி எதையும் பெற வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2864

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَلَّى بْنُ مَنْصُورٍ الرَّازِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الشَّيْبَانِيُّ ‏ ‏عَنْ ‏ ‏بُكَيْرِ بْنِ الْأَخْنَسِ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏
نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يُؤْخَذَ لِلْأَرْضِ أَجْرٌ أَوْ حَظٌّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நிலத்தை வாடகைக்கு விடுவதை, அல்லது (நிலத்தைக் கொடுத்துக் கட்டாயப்) பிரதிபலன் பெறுவதைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2863

‏حَدَّثَنَا ‏ ‏الْحَكَمُ بْنُ مُوسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِقْلٌ يَعْنِي ابْنَ زِيَادٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَوْزَاعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏
كَانَ لِرِجَالٍ فُضُولُ أَرَضِينَ مِنْ ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ كَانَتْ لَهُ فَضْلُ أَرْضٍ فَلْيَزْرَعْهَا أَوْ لِيَمْنَحْهَا أَخَاهُ فَإِنْ أَبَى فَلْيُمْسِكْ أَرْضَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலரிடம், தேவைக்குப் போக எஞ்சிய நிலங்கள் இருந்தன. ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எஞ்சிய நிலம் வைத்திருப்பவர் அதை விளைவிக்கட்டும்;  அல்லது அதைத் தம் (முஸ்லிம்) சகோதரர் எவருக்காவது (இலவசமாக விளைவிக்கக்) கொடுக்கட்டும்; அவர் மறுத்துவிட்டால் தமது நிலத்தை அப்படியே வைத்துக்கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2862

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْفَضْلِ ‏ ‏لَقَبُهُ ‏ ‏عَارِمٌ وَهُوَ أَبُو النُّعْمَانِ السَّدُوسِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَطَرٌ الْوَرَّاقُ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏
قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا فَإِنْ لَمْ يَزْرَعْهَا فَلْيُزْرِعْهَا أَخَاهُ

“நிலம் வைத்திருப்பவர் அதை விளைவித்துக் கொள்ளட்டும். இலையெனில் அதைத் தம் (முஸ்லிம்) சகோதரருக்கு விளைவிக்கக் கொடுத்து விடட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)