அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2875

‏حَدَّثَنَا ‏ ‏حَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو تَوْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏
قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا أَوْ لِيَمْنَحْهَا أَخَاهُ فَإِنْ أَبَى فَلْيُمْسِكْ أَرْضَهُ

“நிலம் வைத்திருப்பவர் அதைத் தாமே விளைவிக்கட்டும்! அல்லது அதைத் தம் (முஸ்லிம்) சகோதரருக்கு (பிரதிபலன் கருதாமல்) இலவசமாக(விளைவிக்க)க் கொடுத்துவிடட்டும். அவர் மறுத்தால் தமது நிலத்தை அப்படியே (விளைவிக்காமல்) வைத்துக்கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2874

‏و حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدٍ الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ عَتِيقٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ: ‏
نَهَى النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ بَيْعِ السِّنِينَ ‏


وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ أَبِي شَيْبَةَ ‏ ‏عَنْ بَيْعِ الثَّمَرِ سِنِينَ

நபி (ஸல்), பல்லாண்டு விளைச்சலை (முன்கூட்டியே) விற்கும் (முஆவமா) முறைக்குத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில் “பல்லாண்டுகள் மரத்தில் விளையும் கனிகளை முன்கூட்டியே விற்பதைத் தடை செய்தார்கள்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2873

‏و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ: ‏
نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ بَيْعِ الْأَرْضِ الْبَيْضَاءِ سَنَتَيْنِ أَوْ ثَلَاثًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தரிசு நிலத்தை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு (குத்தகைக்குக்) கொடுப்பதைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2872

‏و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو وَهُوَ ابْنُ الْحَارِثِ ‏ ‏أَنَّ ‏ ‏بُكَيْرًا ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ أَبِي سَلَمَةَ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏النُّعْمَانِ بْنِ أَبِي عَيَّاشٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏كِرَاءِ ‏ ‏الْأَرْضِ ‏


قَالَ ‏ ‏بُكَيْرٌ ‏ ‏وَحَدَّثَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏يَقُولُ ‏ ‏كُنَّا ‏ ‏نُكْرِي ‏ ‏أَرْضَنَا ثُمَّ تَرَكْنَا ذَلِكَ حِينَ سَمِعْنَا حَدِيثَ ‏ ‏رَافِعِ بْنِ خَدِيجٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதற்குத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்புகள் :

“நாங்கள் எங்கள் நிலங்களை (பழைய வழக்கத்தில்) குத்தகைக்கு விட்டுவந்தோம். பின்னர் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அறிவித்த (2883) ஹதீஸை நாங்கள் செவியுற்றபோது அதை விட்டுவிட்டோம்” என்று இப்னு உமர் (ரலி) சொல்லக் கேட்டிருக்கிறேன் என்பதாக நாஃபிஉ (ரஹ்) கூறினார்.

(நில உரிமையாளர், தம்முடைய நிலத்தில் உழைக்கும் விவசாயியிடம், விளைச்சல் எப்படி இருந்தாலும் குறிப்பிட்ட அளவு தானியத்தைத் தமக்குக் குத்தகைத் தொகைக்காகத் தந்துவிட வேண்டும் என்ற முன் நிபந்தனையுடன் நிலத்தைக் குத்தகைக்கு விடும் பழக்கம் அரபியர்களிடம் இருந்து வந்தது. அவ்வகைக் குத்தகை தடை செய்யப்பட்டது – ஹதீஸ் 2861இன் அடிக்குறிப்பு)

அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2871

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَمَّادٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ: ‏
سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَهَبْهَا أَوْ لِيُعِرْهَا


و حَدَّثَنِيهِ ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْجَوَّابِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمَّارُ بْنُ رُزَيْقٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ فَلْيَزْرَعْهَا أَوْ فَلْيُزْرِعْهَا رَجُلًا

“நிலம் வைத்திருப்பவர் அதை(த்தாமே) விளைவிக்கட்டும்! இல்லையெனில் அதை (சகோதரர் எவருக்காவது) அன்பளிப்பாக அல்லது இரவலாகக் கொடுத்துவிடட்டும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

அல் அஃமஷ் (ரஹ்) வழி அறிவிப்பில், “… தாமே விளைவிக்கட்டும்! அல்லது வேறு யாருக்கேனும் விளைவிக்கக் கொடுக்கட்டும்!” என நபி (ஸல்) கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2870

‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَأَحْمَدُ بْنُ عِيسَى ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ وَهْبٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ عِيسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏هِشَامُ بْنُ سَعْدٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا الزُّبَيْرِ الْمَكِّيَّ ‏ ‏حَدَّثَهُ قَالَ سَمِعْتُ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُ: ‏
كُنَّا فِي زَمَانِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَأْخُذُ الْأَرْضَ بِالثُّلُثِ أَوْ الرُّبُعِ ‏ ‏بِالْمَاذِيَانَاتِ فَقَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ذَلِكَ فَقَالَ ‏ ‏مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا فَإِنْ لَمْ يَزْرَعْهَا فَلْيَمْنَحْهَا أَخَاهُ فَإِنْ لَمْ يَمْنَحْهَا أَخَاهُ فَلْيُمْسِكْهَا

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் “நீர் நிலையோரம் (நன்கு) விளையும் பயிர்களில் மூன்றில் ஒரு பாகம் அல்லது நான்கில் ஒரு பாகம் கொடுத்துவிடுகிறோம்” எனும் நிபந்தனையின் பேரில் நிலத்தை(க் குத்தகைக்கு)ப் பெற்றுவந்தோம். இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எழுந்து நின்று, “நிலம் வைத்திருப்பவர் அதில் தாமே விளைக்கட்டும். அவ்வாறு விளைக்காவிட்டால் தம் (முஸ்லிம்) சகோதரருக்கு (பிரதிபலன் எதிர் பாராமல் விளைவிக்க) இலவசமாகக் கொடுத்துவிடட்டும். இல்லையெனில் அதை (அப்படியே) வைத்திருக்கட்டும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2869

‏حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ: ‏
كُنَّا نُخَابِرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَنُصِيبُ مِنْ ‏ ‏الْقِصْرِيِّ وَمِنْ كَذَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا أَوْ فَلْيُحْرِثْهَا أَخَاهُ وَإِلَّا فَلْيَدَعْهَا

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் ‘முகாபரா’ முறையில் விவசாயம் செய்துவந்தோம். அப்போது (குத்தகைதாரரிடம்) கதிர்களைப் போரடித்து எஞ்சியுள்ள தானியத்தையும் (நீரோட்டம் நன்றாக உள்ள பகுதியின்) குறிப்பிட்ட விளைச்சலையும் பெற்றுவந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நிலம் வைத்திருப்பவர் அதைத் தாமே விளைவிக்கட்டும்; அல்லது தம் சகோதரருக்கு (இலவசமாகப்) விளைவிக்கக் கொடுத்து விடட்டும். இல்லாவிட்டால் அதை அப்படியே வைத்திருக்கட்டும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

‘முகாபரா‘ என்பது விளைச்சலில் குறிப்பிட்ட சதவீதத்தைத் தரவேண்டும் என்று விவசாயியிடம் முன் நிபந்தனை விதித்து, தரிசு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது.

அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2868

‏و حَدَّثَنِي ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَلِيمُ بْنُ حَيَّانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مِينَاءَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُ: ‏
إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ كَانَ لَهُ فَضْلُ أَرْضٍ فَلْيَزْرَعْهَا أَوْ لِيُزْرِعْهَا أَخَاهُ وَلَا تَبِيعُوهَا ‏


فَقُلْتُ ‏ ‏لِسَعِيدٍ ‏ ‏مَا قَوْلُهُ وَلَا تَبِيعُوهَا ‏ ‏يَعْنِي ‏ ‏الْكِرَاءَ ‏ ‏قَالَ نَعَمْ

“தமது தேவை போக எஞ்சிய நிலத்தை வைத்திருப்பவர், அதை விளைவிக்கட்டும்; அல்லது தம் (முஸ்லிம்) சகோதரருக்கு விளைவிக்கக் கொடுத்துவிடட்டும்! அதை விற்றுவிட வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

நான் ஸயீத் பின் மீனா (ரஹ்) அவர்களிடம், “அதை விற்றுவிட வேண்டாம் என்பதன் பொருள்  குத்தகைக்குவிட வேண்டாம் என்பதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம்” என்றார்கள் என்பதாக இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸலீம் பின் ஹய்யான் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2867

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ: ‏
أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏الْمُخَابَرَةِ

நபி (ஸல்) ‘முகாபரா’ எனும் வியாபாரத்தைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

‘முகாபரா‘ என்பது விளைச்சலில் குறிப்பிட்ட சதவீதத்தைத் தரவேண்டும் என்று விவசாயியிடம் முன் நிபந்தனை விதித்து, தரிசு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது.

அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2866

‏و حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏قَالَ سَأَلَ ‏ ‏سُلَيْمَانُ بْنُ مُوسَى ‏ ‏عَطَاءً ‏ ‏فَقَالَ أَحَدَّثَكَ ‏ ‏جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ: ‏
أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا أَوْ لِيُزْرِعْهَا أَخَاهُ وَلَا يُكْرِهَا قَالَ نَعَمْ

“நிலம் வைத்திருப்பவர் அதை விளைவித்துக் கொள்ளட்டும்; அல்லது, அதைத் தம் (முஸ்லிம்) சகோதரரிடம் விளைவிக்கக் கொடுத்துவிடட்டும்! அதற்காக அவரிடம் (குத்தகை) தொகை பெற வேண்டாம் என்று நபி (ஸல்) கூறினார்கள் என ஜாபிர் (ரலி) உங்களுக்கு அறிவித்தார்களா?” என்று ஸுலைமான் பின் மூஸா (ரஹ்), அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம் கேட்டதற்கு, அதாஉ (ரஹ்) “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்)