حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، حَدَّثَنَا الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ عَمْرِو بْنِ سَعِيدٍ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْحِمْيَرِيِّ، عَنْ ثَلاَثَةٍ، مِنْ وَلَدِ سَعْدٍ كُلُّهُمْ يُحَدِّثُهُ عَنْ أَبِيهِ :
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَى سَعْدٍ يَعُودُهُ بِمَكَّةَ فَبَكَى قَالَ ” مَا يُبْكِيكَ ” . فَقَالَ قَدْ خَشِيتُ أَنْ أَمُوتَ بِالأَرْضِ الَّتِي هَاجَرْتُ مِنْهَا كَمَا مَاتَ سَعْدُ ابْنُ خَوْلَةَ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ” اللَّهُمَّ اشْفِ سَعْدًا اللَّهُمَّ اشْفِ سَعْدًا ” . ثَلاَثَ مِرَارٍ . قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي مَالاً كَثِيرًا وَإِنَّمَا يَرِثُنِي ابْنَتِي أَفَأُوصِي بِمَالِي كُلِّهِ قَالَ ” لاَ ” . قَالَ فَبِالثُّلُثَيْنِ قَالَ ” لاَ ” . قَالَ فَالنِّصْفُ قَالَ ” لاَ ” . قَالَ فَالثُّلُثُ قَالَ ” الثُّلُثُ وَالثُّلُثُ كَثِيرٌ إِنَّ صَدَقَتَكَ مِنْ مَالِكَ صَدَقَةٌ وَإِنَّ نَفَقَتَكَ عَلَى عِيَالِكَ صَدَقَةٌ وَإِنَّ مَا تَأْكُلُ امْرَأَتُكَ مِنْ مَالِكَ صَدَقَةٌ وَإِنَّكَ أَنْ تَدَعَ أَهْلَكَ بِخَيْرٍ – أَوْ قَالَ بِعَيْشٍ – خَيْرٌ مِنْ أَنْ تَدَعَهُمْ يَتَكَفَّفُونَ النَّاسَ ” . وَقَالَ بِيَدِهِ .
وَحَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عَمْرِو بْنِ سَعِيدٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْحِمْيَرِيِّ، عَنْ ثَلاَثَةٍ مِنْ وَلَدِ سَعْدٍ قَالُوا مَرِضَ سَعْدٌ بِمَكَّةَ فَأَتَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعُودُهُ . بِنَحْوِ حَدِيثِ الثَّقَفِيِّ
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَنِي ثَلاَثَةٌ، مِنْ وَلَدِ سَعْدِ بْنِ مَالِكٍ كُلُّهُمْ يُحَدِّثُنِيهِ بِمِثْلِ حَدِيثِ صَاحِبِهِ فَقَالَ مَرِضَ سَعْدٌ بِمَكَّةَ فَأَتَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُهُ . بِمِثْلِ حَدِيثِ عَمْرِو بْنِ سَعِيدٍ عَنْ حُمَيْدٍ الْحِمْيَرِيِّ
நபி (ஸல்), மக்காவில் (உடல் நலிவுற்றிருந்த) என்னை நலம் விசாரிப்பதற்காக என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுதேன். நபி (ஸல்), “ஏன் அழுகின்றீர்?” என்று கேட்டார்கள். “ஸஅத் பின் கவ்லா இறந்ததைப் போன்று நான் துறந்து சென்ற இந்த (மக்கா) மண்ணிலேயே இறந்துவிடுவேனோ என அஞ்சுகிறேன்” என்று நான் சொன்னேன். அதற்கு நபி (ஸல்) , “இறைவா! ஸஅதுக்குக் குணமளிப்பாயாக! இறைவா! ஸஅதுக்குக் குணமளிப்பாயாக!” என மூன்று முறை பிரார்த்தித்தார்கள்.
நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. எனக்கு என் ஒரே மகள் மட்டுமே (இப்போது) வாரிசாக வருகிறாள். ஆகவே, என் செல்வங்கள் அனைத்திலும் (அவை அறவழியில் செலவிடப்பட) மரண சாஸனம் எழுதிவிடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்), “வேண்டாம்” என்றார்கள். நான் “மூன்றில் இரண்டு பாகங்களில்?” என்று கேட்டேன்.
அதற்கும் “வேண்டாம்” என்றார்கள். “அவ்வாறாயின் பாதியிலாவது?” என்று கேட்டேன். அதற்கும் “வேண்டாம்” என்று சொன்னார்கள். “அவ்வாறாயின் மூன்றில் ஒரு பாகத்திலேனும்?” என்று கேட்டேன்.
நபி (ஸல்), “மூன்றில் ஒரு பாகமா! மூன்றில் ஒரு பாகம்கூட அதிகம்தான். நீர் உமது செல்வத்திலிருந்து (பிறருக்கு) ஈவதும் ஈகைதான். நீர் உம்முடைய குடும்பத்தாருக்கு வழங்கும் செலவுத் தொகையும் ஈகைதான். உமது செல்வத்திலிருந்து உம்முடைய துணைவி உண்பதும் ஈகைதான். நீர் உம்முடைய வீட்டாரை மக்களிடம் கையேந்தும் நிலையில் (என்று கூறும்போது தமது கையால் கையேந்துவதுபோல் செய்து காட்டினார்கள்) விட்டுச்செல்வதைவிட (பொருளாதார) நலத்துடன் விட்டுச்செல்வதே சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) வழியாக அன்னாரின் மக்கள் ஆமிர், முஸ்அப், முஹம்மது.
குறிப்பு :
மேற்காணும் நிகழ்வுக்குப் பின்னர், தங்கள் தந்தை ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி), உடல் நலம் பெற்று, 80 வயது வரை உயிர்வாழ்ந்தார்கள்; அவர்களுக்கு மக்களாக நாங்கள் பிறந்தோம் என ஆமிர் (ரஹ்), முஸ்அப் (ரஹ்), முஹம்மது (ரஹ்) ஆகிய மூவர் அறிவிக்கின்றனர்.
ஹம்மாது (ரஹ்) வழி அறிவிப்பு, “(எங்கள் தந்தை) ஸஅத் (ரலி) மக்காவில் உடல் நலிவுற்றிருந்தபோது அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்தார்கள் …“ என்று ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களின் மூன்று மகன்கள் அறிவிப்பதாகத் தொடங்குகின்றது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.