அத்தியாயம்: 3, பாடம்: 10, ஹதீஸ் எண்: 482

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏قَالَ ‏ ‏قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا ‏ ‏اغْتَسَلَ بَدَأَ بِيَمِينِهِ فَصَبَّ عَلَيْهَا مِنْ الْمَاءِ فَغَسَلَهَا ثُمَّ صَبَّ الْمَاءَ عَلَى ‏ ‏الْأَذَى ‏ ‏الَّذِي بِهِ بِيَمِينِهِ وَغَسَلَ عَنْهُ بِشِمَالِهِ حَتَّى إِذَا فَرَغَ مِنْ ذَلِكَ صَبَّ عَلَى رَأْسِهِ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ إِنَاءٍ وَاحِدٍ وَنَحْنُ جُنُبَانِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிக்கும்போது முதலில் தம் (உடலின்) வலப்பக்கத்தில் தண்ணீர் ஊற்றிக் கழுவுவார்கள். பிறகு தம் மறையுறுப்பின் மீது வலக்கரத்தால் தண்ணீர் ஊற்றி இடக்கரத்தால் அதை(த் தேய்த்து)க் கழுவுவார்கள். இவற்றைச் செய்து முடித்து விட்ட பின்னரே தலைக்குத் தண்ணீர் ஊற்றுவார்கள். நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் போது ஒரே பாத்திரத்தில் குளிப்போம்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்).

அத்தியாயம்: 3, பாடம்: 10, ஹதீஸ் எண்: 481

و حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏قَالَ ‏
‏دَخَلْتُ عَلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَا وَأَخُوهَا مِنْ الرَّضَاعَةِ فَسَأَلَهَا عَنْ غُسْلِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ الْجَنَابَةِ ‏ ‏فَدَعَتْ بِإِنَاءٍ قَدْرِ الصَّاعِ فَاغْتَسَلَتْ وَبَيْنَنَا وَبَيْنَهَا سِتْرٌ وَأَفْرَغَتْ عَلَى رَأْسِهَا ثَلَاثًا قَالَ وَكَانَ أَزْوَاجُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَأْخُذْنَ مِنْ رُءُوسِهِنَّ حَتَّى تَكُونَ ‏ ‏كَالْوَفْرَةِ ‏

நானும் ஆயிஷா (ரலி) அவர்களுடைய பால்குடிச் சகோதரர் ஒருவரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களுடைய சகோதரர், நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளித்த முறை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டபோது, எங்களுக்கும் அவர்களுக்குமிடையே திரையிட்ட நிலையில் ஆயிஷா (ரலி) ஒரு ‘ஸாஉ’ அளவுள்ள பாத்திரத்தில் நீர் கொண்டு வரச் சொல்லிக் குளித்துக் காட்டினார்கள். தமது தலை மீது மூன்று முறை தண்ணீர் ஊற்றினார்கள் (சைகை மூலம் அது எங்களுக்குத் தெரிந்தது).

நபி (ஸல்) அவர்களின் துணைவியர், தலையிலிருந்து காதின் சோனை வரை தொங்கும் அளவிற்குத் தம் தலை முடியைக் குறைத்து(அமைத்து)க் கொள்பவர்களாக இருந்தனர்.

அறிவிப்பாளர் : அபூ ஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்).

குறிப்பு :

ஒரு ஸாஉ என்பது தற்கால அளவின்படி ஏறத்தாழ இரண்டரை லிட்டர் ஆகும்.

அத்தியாயம்: 3, பாடம்: 10, ஹதீஸ் எண்: 480

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَغْتَسِلُ فِي الْقَدَحِ ‏ ‏وَهُوَ الْفَرَقُ ‏ ‏وَكُنْتُ أَغْتَسِلُ أَنَا وَهُوَ فِي الْإِنَاءِ الْوَاحِدِ ‏
‏وَفِي حَدِيثِ ‏ ‏سُفْيَانَ ‏ ‏مِنْ إِنَاءٍ وَاحِدٍ ‏ ‏قَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏قَالَ ‏ ‏سُفْيَانُ ‏ ‏وَالْفَرَقُ ثَلَاثَةُ ‏ ‏آصُعٍ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ‘ஃபரக்’ கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் குளிப்பார்கள். நானும் அவர்களும் ஒரே பாத்திரத்தில் (நீரள்ளிக்) குளிப்போம்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி).

குறிப்பு:

ஸுப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஒரே பாத்திரத்திலிருந்து (நீரள்ளிக்) குளிப்போம்” என்றும் “ஒரு ஃபரக் என்பது மூன்று ஸாஉ கொள்ளளவாகும்” என்றும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 10, ஹதீஸ் எண்: 479

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَغْتَسِلُ مِنْ إِنَاءٍ هُوَ ‏ ‏الْفَرَقُ ‏ ‏مِنْ الْجَنَابَةِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக ஒரு ‘ஃபரக்’ கொள்ளளவு பாத்திரத்தில் குளிப்பார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்).

குறிப்பு :

ஒரு ஃபரக் என்பது தற்கால அளவின்படி ஏறத்தாழ ஏழு லிட்டர் ஆகும்.