அத்தியாயம்: 3, பாடம்: 11, ஹதீஸ் எண்: 496

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ يَعْنِي الثَّقَفِيَّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَعْفَرٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ :‏ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا ‏ ‏اغْتَسَلَ مِنْ جَنَابَةٍ صَبَّ عَلَى رَأْسِهِ ثَلَاثَ ‏ ‏حَفَنَاتٍ ‏ ‏مِنْ مَاءٍ


فَقَالَ لَهُ ‏ ‏الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏إِنَّ شَعْرِي كَثِيرٌ قَالَ ‏ ‏جَابِرٌ ‏ ‏فَقُلْتُ لَهُ يَا ابْنَ أَخِي كَانَ شَعْرُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَكْثَرَ مِنْ شَعْرِكَ وَأَطْيَبَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது இரு கைகள் நிரம்பத் தண்ணீர் அள்ளித் தமது தலையில் மூன்று முறை ஊற்றுவார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இந்த ஹதீஸைச் செவிமடுத்த ஹஸன் பின் முஹம்மது (ரஹ்), “எனக்குத் தலைமுடி அதிகமாக இருக்கிறதே?” என்று ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு ஜாபிர் (ரலி), “என் சகோதரர் மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடி உமது முடியை விட அதிகமாகவும் அழகானதாகவும் இருக்கும் (அவர்களே மூன்று முறைதான் தலைக்குத் தண்ணீர் ஊற்றினார்கள்)” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 3, பாடம்: 11, ஹதீஸ் எண்: 495

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَإِسْمَعِيلُ بْنُ سَالِمٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ :‏ ‏

‏أَنَّ ‏ ‏وَفْدَ ثَقِيفٍ ‏ ‏سَأَلُوا النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالُوا إِنَّ أَرْضَنَا أَرْضٌ بَارِدَةٌ فَكَيْفَ بِالْغُسْلِ فَقَالَ أَمَّا أَنَا ‏ ‏فَأُفْرِغُ عَلَى رَأْسِي ثَلَاثًا ‏


‏قَالَ ‏ ‏ابْنُ سَالِمٍ ‏ ‏فِي رِوَايَتِهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو بِشْرٍ ‏ ‏وَقَالَ ‏ ‏إِنَّ ‏ ‏وَفْدَ ثَقِيفٍ ‏ ‏قَالُوا يَا رَسُولَ اللَّهِ ‏

ஸகீஃப் குலத்தாரின் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம், “எங்கள் நாடு குளிர் பிரதேசமாகும்; (நாங்கள்) எப்படி குளிப்பது?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்), “நான் என் தலையின் மீது மூன்று முறை தண்ணீர் ஊற்றுவேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

இஸ்மாயில் பின் ஸாலிம் (ரஹ்) வழி அறிவிப்பில், ஸகீஃப் குலத்தாரின் தூதுக் குழுவினர் ‘அல்லாஹ்வின் தூதரே’ என்று அழைத்துக் கேள்வி கேட்டதாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 11, ஹதீஸ் எண்: 494

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ صُرَدٍ ‏ ‏عَنْ ‏ ‏جُبَيْرِ بْنِ مُطْعِمٍ :‏ ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ ذُكِرَ عِنْدَهُ الْغُسْلُ مِنْ الْجَنَابَةِ فَقَالَ أَمَّا أَنَا ‏ ‏فَأُفْرِغُ عَلَى رَأْسِي ثَلَاثًا

பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றி நபி (ஸல்) முன்னிலையில் பேச்சு வந்தபோது, அவர்கள், “நான் (தொடக்கமாக) என் தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றுவேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 11, ஹதீஸ் எண்: 493

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ صُرَدٍ ‏ ‏عَنْ ‏ ‏جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ‏ ‏قَالَ :‏ ‏

‏تَمَارَوْا ‏ ‏فِي الْغُسْلِ عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ بَعْضُ الْقَوْمِ أَمَّا أَنَا فَإِنِّي أَغْسِلُ رَأْسِي كَذَا وَكَذَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَّا أَنَا فَإِنِّي ‏ ‏أُفِيضُ عَلَى رَأْسِي ثَلَاثَ أَكُفٍّ

தத்தம் குளிக்கும் விதம் பற்றி நபித் தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையில் பேசிக் கொண்டிருந்தனர். ஒருவர், “நான் என் தலையை இப்படி இப்படிக் கழுவுகின்றேன்” என்று கூறியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் (தொடக்கமாக) என் தலையில் மூன்று முறை இரு கைகள் நிரம்பத் தண்ணீரை ஊற்றிக் கழுவுவேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)