وَحَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، جَمِيعًا عَنْ مُعَاذٍ، – وَاللَّفْظُ لأَبِي غَسَّانَ – حَدَّثَنَا مُعَاذٌ، – وَهُوَ ابْنُ هِشَامٍ الدَّسْتَوَائِيُّ – حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا الْحَسَنُ، عَنْ ضَبَّةَ بْنِ مِحْصَنٍ الْعَنَزِيِّ، عَنْ أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ :
” إِنَّهُ يُسْتَعْمَلُ عَلَيْكُمْ أُمَرَاءُ فَتَعْرِفُونَ وَتُنْكِرُونَ فَمَنْ كَرِهَ فَقَدْ بَرِئَ وَمَنْ أَنْكَرَ فَقَدْ سَلِمَ وَلَكِنْ مَنْ رَضِيَ وَتَابَعَ ” . قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَلاَ نُقَاتِلُهُمْ قَالَ ” لاَ مَا صَلَّوْا ” . أَىْ مَنْ كَرِهَ بِقَلْبِهِ وَأَنْكَرَ بِقَلْبِهِ
وَحَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، – يَعْنِي ابْنَ زَيْدٍ – حَدَّثَنَا الْمُعَلَّى بْنُ زِيَادٍ وَهِشَامٌ عَنِ الْحَسَنِ، عَنْ ضَبَّةَ بْنِ مِحْصَنٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . بِنَحْوِ ذَلِكَ غَيْرَ أَنَّهُ قَالَ “ فَمَنْ أَنْكَرَ فَقَدْ بَرِئَ وَمَنْ كَرِهَ فَقَدْ سَلِمَ ”
وَحَدَّثَنَاهُ حَسَنُ بْنُ الرَّبِيعِ الْبَجَلِيُّ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ هِشَامٍ، عَنِ الْحَسَنِ، عَنْ ضَبَّةَ بْنِ مِحْصَنٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . فَذَكَرَ مِثْلَهُ إِلاَّ قَوْلَهُ “ وَلَكِنْ مَنْ رَضِيَ وَتَابَعَ ” . لَمْ يَذْكُرْهُ
நபி (ஸல்), “உங்களுக்குச் சில ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். தீமையை வெறுத்தவர் பிழைத்தார்; மறுத்தவர் தப்பித்தார். (மாறாக,) யார் (தீமையைக் கண்டும்) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு” என்று (ஒரு முறை) கூறினார்கள்.
மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர்கள் தொழுகையை நிறைவேற்றும்வரை (போரிட) வேண்டாம்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா (ரலி)
குறிப்புகள் :
ஹிஷாம் (ரஹ்) வழி அறிவிப்பில், “(தீமையை) மறுத்தவர் பிழைத்தார்; வெறுத்தவர் தப்பித்தார்” என்று இடம் பெற்றுள்ளது.
இப்னுல் முபாரக் (ரஹ்) வழி அறிவிப்பில், “(மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.