அத்தியாயம்: 38, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3982

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، قَالَ سَمَّيْتُ ابْنَتِي بَرَّةَ فَقَالَتْ لِي زَيْنَبُ بِنْتُ أَبِي سَلَمَةَ :‏

إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ هَذَا الاِسْمِ وَسُمِّيتُ بَرَّةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ لاَ تُزَكُّوا أَنْفُسَكُمُ اللَّهُ أَعْلَمُ بِأَهْلِ الْبِرِّ مِنْكُمْ ‏”‏ ‏.‏ فَقَالُوا بِمَ نُسَمِّيهَا قَالَ ‏”‏ سَمُّوهَا زَيْنَبَ ‏”‏

நான் என் மகளுக்கு, பர்ரா (நல்லவள்) எனப் பெயர் சூட்டினேன். அப்போது ஸைனப் பின்த்தி அபீஸலமா (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இந்தப் பெயரைச் சூட்ட வேண்டாமெனத் தடை செய்தார்கள். (முதலில்) எனக்கு ‘பர்ரா’ என்ற பெயரே சூட்டப்பட்டிருந்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களை நீங்களே தூய்மைப்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களில் நல்லவர் யார் என அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று சொன்னார்கள். மக்கள், “அவருக்கு நாங்கள் என்ன பெயர் சூட்ட வேண்டும்?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவருக்கு ஸைனப் எனப் பெயர் சூட்டுங்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஸைனப் பின்த்தி உம்மி ஸலமா (ரலி) வழியாக முஹம்மது பின் அம்ரு பின் அதாஉ (ரஹ்)

அத்தியாயம்: 38, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3981

حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالاَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَطَاءٍ، حَدَّثَتْنِي زَيْنَبُ، بِنْتُ أُمِّ سَلَمَةَ قَالَتْ :‏

كَانَ اسْمِي بَرَّةَ فَسَمَّانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَيْنَبَ ‏.‏ قَالَتْ وَدَخَلَتْ عَلَيْهِ زَيْنَبُ بِنْتُ جَحْشٍ وَاسْمُهَا بَرَّةُ فَسَمَّاهَا زَيْنَبَ ‏‏

எனக்கு (முதலில்) ‘பர்ரா’ (நல்லவள்) என்ற பெயதான் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்கு ஸைனப் (நறுமண மலர்) எனப் பெயர் சூட்டினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களுடைய துணைவியார்) ஸைனப் பின்த்தி ஜஹ்ஷ் (ரலி) வந்தார். அவருக்கும் பர்ரா (நல்லவர்) என்ற பெயரே இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவருக்கும் ‘ஸைனப்’ எனப் பெயர் சூட்டினார்கள்.

அறிவிப்பாளர் : ஸைனப் பின்த்தி உம்மி ஸலமா (ரலி)

அத்தியாயம்: 38, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3980

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالُوا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ، سَمِعْتُ أَبَا رَافِعٍ، يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ ح

وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ زَيْنَبَ، كَانَ اسْمُهَا بَرَّةَ فَقِيلَ تُزَكِّي نَفْسَهَا ‏.‏ فَسَمَّاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَيْنَبَ ‏.‏ وَلَفْظُ الْحَدِيثِ لِهَؤُلاَءِ دُونَ ابْنِ بَشَّارٍ ‏.‏ وَقَالَ ابْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ عَنْ شُعْبَةَ ‏

ஸைனப் (ரலி) அவர்களுக்கு (முதலில்) ‘பர்ரா’ (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது, “அவர், (தன்னை நல்லவள் என) தற்பெருமை கொள்கிறார்” என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே, அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸைனப் (நறுமண மலர்) என்று பெயர் சூட்டினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 38, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3979

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَابْنُ أَبِي عُمَرَ، – وَاللَّفْظُ لِعَمْرٍو – قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، مَوْلَى آلِ طَلْحَةَ عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ :‏

كَانَتْ جُوَيْرِيَةُ اسْمُهَا بَرَّةَ فَحَوَّلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم اسْمَهَا جُوَيْرِيَةَ وَكَانَ يَكْرَهُ أَنْ يُقَالَ خَرَجَ مِنْ عِنْدِ بَرَّةَ


وَفِي حَدِيثِ ابْنِ أَبِي عُمَرَ عَنْ كُرَيْبٍ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ‏

அன்னை ஜுவைரியா (ரலி) அவர்களுக்கு (முதலில்) ‘பர்ரா’ என்ற பெயர் இருந்தது. அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘ஜுவைரியா’ (இளையவள்) எனப் பெயர் மாற்றினார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘பர்ரா’விடமிருந்து (நல்லவளிடமிருந்து) புறப்பட்டுவிட்டார்கள்“ என்று சொல்லப்படுவதை அவர்கள் வெறுத்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 38, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3978

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ :‏

أَنَّ ابْنَةً لِعُمَرَ، كَانَتْ يُقَالُ لَهَا عَاصِيَةُ فَسَمَّاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَمِيلَةَ ‏

என் தந்தை உமர் (ரலி) அவர்களுக்கு, ‘ஆஸியா’ (பாவி) என்ற பெயரில் மகளொருவர் இருந்தார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஜமீலா (அழகி) என(மாற்று)ப் பெயர் சூட்டினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 38, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3977

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالُوا حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم غَيَّرَ اسْمَ عَاصِيَةَ وَقَالَ ‏ “‏ أَنْتِ جَمِيلَةُ ‏”‏


قَالَ أَحْمَدُ مَكَانَ أَخْبَرَنِي عَنْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஆஸியா (பாவி) எனும் பெயரை மாற்றிவிட்டு, “நீ (பாவியல்ல), ஜமீலா (அழகி)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹ்) வழி அறிவிப்பில், “நாஃபிஉ (ரஹ்) எனக்கு அறிவித்தார்” என்றில்லாமல் “கூறினார்” என இடம்பெற்றுள்ளது.