அத்தியாயம்: 40, பாடம்: 5, ஹதீஸ் எண்: 4174

حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، وَأَبُو طَاهِرٍ وَأَحْمَدُ بْنُ عِيسَى قَالَ أَحْمَدُ حَدَّثَنَا وَقَالَ الآخَرَانِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مَخْرَمَةُ، عَنْ أَبِيهِ، عَنْ نَافِعٍ قَالَ :‏

كَانَ ابْنُ عُمَرَ إِذَا اسْتَجْمَرَ اسْتَجْمَرَ بِالأَلُوَّةِ غَيْرِ مُطَرَّاةٍ وَبِكَافُورٍ يَطْرَحُهُ مَعَ الأَلُوَّةِ ثُمَّ قَالَ هَكَذَا كَانَ يَسْتَجْمِرُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم

இப்னு உமர் (ரலி), நறுமணப் புகையிட்டால், அகில் கட்டையால் நறுமணப் புகையிடுவார்கள். அதில் வேறெந்த நறுமணப் பொருளையும் சேர்க்கமாட்டார்கள். (சில வேளைகளில்) அகிலுடன் கற்பூரத்தையும் போடுவார்கள். பிறகு “இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புகையிடுவார்கள்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)

அத்தியாயம்: 40, பாடம்: 5, ஹதீஸ் எண்: 4173

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، كِلاَهُمَا عَنِ الْمُقْرِئِ، قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي جَعْفَرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَنْ عُرِضَ عَلَيْهِ رَيْحَانٌ فَلاَ يَرُدُّهُ فَإِنَّهُ خَفِيفُ الْمَحْمِلِ طَيِّبُ الرِّيحِ ‏”‏ ‏

“ஒருவரிடம் வாசனைத் திரவியம் எடுத்துக்கொள்ளுமாறு கோரப்பட்டால், அதை அவர் மறுக்க வேண்டாம். ஏனெனில், அது எடுத்துச் செல்ல எளிதானதும் சிறந்த நறுமணமும் ஆகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 40, பாடம்: 5, ஹதீஸ் எண்: 4172

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ شُعْبَةَ، عَنْ خُلَيْدِ بْنِ جَعْفَرٍ، وَالْمُسْتَمِرِّ، قَالاَ سَمِعْنَا أَبَا نَضْرَةَ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ذَكَرَ امْرَأَةً مِنْ بَنِي إِسْرَائِيلَ حَشَتْ خَاتَمَهَا مِسْكًا وَالْمِسْكُ أَطْيَبُ الطِّيبِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பற்றிக் கூறியபோது, “அவள் தனது மோதிரத்தி(ன் நடுக்குழியி)ல் கஸ்தூரியை இட்டு நிரப்பியிருந்தாள். நறுமணப் பொருட்களிலேயே கஸ்தூரி மிகவும் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 40, பாடம்: 5, ஹதீஸ் எண்: 4171

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ شُعْبَةَ، حَدَّثَنِي خُلَيْدُ بْنُ جَعْفَرٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ كَانَتِ امْرَأَةٌ مِنْ بَنِي إِسْرَائِيلَ قَصِيرَةٌ تَمْشِي مَعَ امْرَأَتَيْنِ طَوِيلَتَيْنِ فَاتَّخَذَتْ رِجْلَيْنِ مِنْ خَشَبٍ وَخَاتَمًا مِنْ ذَهَبٍ مُغْلَقٍ مُطْبَقٍ ثُمَّ حَشَتْهُ مِسْكًا وَهُوَ أَطْيَبُ الطِّيبِ فَمَرَّتْ بَيْنَ الْمَرْأَتَيْنِ فَلَمْ يَعْرِفُوهَا فَقَالَتْ بِيَدِهَا هَكَذَا ‏”‏ ‏.‏ وَنَفَضَ شُعْبَةُ يَدَهُ ‏

“பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில் குட்டையான பெண்ணொருத்தி இருந்தாள். அவள் உயரமான இரு பெண்களுடன் நடந்து செல்வாள். (அவளைப் பார்த்து மக்கள் பரிகசிப்பார்கள் ஆகவே,) அவள் மரக்கட்டையாலான கால்களை(ப் பொருத்தி உயரமான அவ்விரு பெண்களுக்குச் சமமாகத் தன்னை) ஆக்கிக் கொண்டாள்.

மேலும், தங்க மோதிரம் ஒன்றையும் அவள் அணிந்துகொண்டாள். அது (ஒரு உட்குழி கொண்டு) மூடப்பட்டதாக இருந்தது. அவள் அக்குழிக்குள் நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியை இட்டு நிரப்பினாள். பின்னர் அவள் அவ்விரு பெண்களுக்கிடையே நடந்து சென்றாள். அவளை மக்கள் (அடையாளம்) அறிந்து கொள்ளவில்லை. அப்போது அவள் (மோதிரத்திலிருந்து கஸ்தூரியை கமழச் செய்வதற்காக) தமது கையை இவ்வாறு அசைத்து சைகை செய்தாள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

இதை அறிவிக்கும்போது, இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) தமது கையை உதறிக் காட்டினார்கள்.