அத்தியாயம்: 5, பாடம்: 04, ஹதீஸ் எண்: 827

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ النَّجْرَانِيِّ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏جُنْدَبٌ ‏ ‏قَالَ

سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَبْلَ أَنْ يَمُوتَ بِخَمْسٍ وَهُوَ يَقُولُ ‏ ‏إِنِّي أَبْرَأُ إِلَى اللَّهِ أَنْ يَكُونَ لِي ‏ ‏مِنْكُمْ ‏ ‏خَلِيلٌ ‏ ‏فَإِنَّ اللَّهَ تَعَالَى قَدْ اتَّخَذَنِي ‏ ‏خَلِيلًا ‏ ‏كَمَا اتَّخَذَ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏خَلِيلًا ‏ ‏وَلَوْ كُنْتُ مُتَّخِذًا مِنْ أُمَّتِي ‏ ‏خَلِيلًا ‏ ‏لَاتَّخَذْتُ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏خَلِيلًا ‏ ‏أَلَا وَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ كَانُوا يَتَّخِذُونَ قُبُورَ أَنْبِيَائِهِمْ وَصَالِحِيهِمْ مَسَاجِدَ أَلَا فَلَا تَتَّخِذُوا الْقُبُورَ مَسَاجِدَ إِنِّي ‏ ‏أَنْهَاكُمْ عَنْ ذَلِكَ

நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன், “உங்களில் ஒருவர் என் அணுக்கத் தோழராகத் திகழ்வதிலிருந்து நான் (இப்போது) விலகி, அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறேன். ஏனெனில், உயர்வுக்குரிய அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை (தன்) அணுக்கத் தோழராக ஆக்கிக் கொண்டதைப் போன்று என்னையும் (தன்) அணுக்கத் தோழனாக ஆக்கிக் கொண்டான். என் சமுதாயத்தவருள் ஒருவரை என் உற்ற தோழராக நான் ஆக்கிக் கொள்வதாக இருப்பின் அவர் அபூபக்ருதான். எச்சரிக்கை! உங்களுக்கு முன்னிருந்த(சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள், நற்குணங் கொண்டோரின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை! நீங்கள் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்துவிட வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 04, ஹதீஸ் எண்: 826

و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏قَالَ ‏ ‏حَرْمَلَةُ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏هَارُونُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ‏ ‏قَالَا

‏لَمَّا نُزِلَ بِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏طَفِقَ ‏ ‏يَطْرَحُ ‏ ‏خَمِيصَةً ‏ ‏لَهُ عَلَى وَجْهِهِ فَإِذَا ‏ ‏اغْتَمَّ ‏ ‏كَشَفَهَا عَنْ وَجْهِهِ فَقَالَ وَهُوَ كَذَلِكَ ‏ ‏لَعْنَةُ اللَّهِ عَلَى ‏ ‏الْيَهُودِ ‏ ‏وَالنَّصَارَى ‏ ‏اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ يُحَذِّرُ مِثْلَ مَا صَنَعُوا ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (நோய் அதிகமாகி) இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் தமது கறுப்புக் கம்பளி ஆடையைத் தமது முகத்தின் மீது போட்டுக் கொள்ளலானார்கள். அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்போது தமது முகத்திலிருந்து அதை அகற்றிவிடுவார்கள். அந்த நிலையிலும், “தம் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!” என்று அவர்கள் செய்த(பாவத்)தைக் குறித்து (முஸ்லிம்களை) எச்சரித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) & இபுனு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 04, ஹதீஸ் எண்: 825

و حَدَّثَنِي ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْفَزَارِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ الْأَصَمِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ الْأَصَمِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَعَنَ اللَّهُ ‏ ‏الْيَهُودَ ‏ ‏وَالنَّصَارَى ‏ ‏اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ

“தங்களுடைய நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிக்கட்டும்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 04, ஹதீஸ் எண்: 824

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏وَمَالِكٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَاتَلَ اللَّهُ ‏ ‏الْيَهُودَ ‏ ‏اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ

“தம் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களை அல்லாஹ் நாசமாக்குவானாக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி

அத்தியாயம்: 5, பாடம்: 04, ஹதீஸ் எண்: 823

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏هَاشِمُ بْنُ الْقَاسِمِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ ‏ ‏عَنْ ‏ ‏هِلَالِ بْنِ أَبِي حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي مَرَضِهِ الَّذِي لَمْ يَقُمْ مِنْهُ ‏ ‏لَعَنَ اللَّهُ ‏ ‏الْيَهُودَ ‏ ‏وَالنَّصَارَى ‏ ‏اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ قَالَتْ فَلَوْلَا ذَاكَ أُبْرِزَ قَبْرُهُ غَيْرَ أَنَّهُ خُشِيَ أَنْ يُتَّخَذَ مَسْجِدًا ‏

‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ أَبِي شَيْبَةَ ‏ ‏وَلَوْلَا ذَاكَ لَمْ يَذْكُرْ قَالَتْ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயிலிருந்து எழாமல் (இறந்து) போய்விட்டார்களோ அந்த நோயின்போது, “தங்களுடைய நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிக்கட்டும்!” என்று கூறினார்கள்.
அந்த அறிவிப்பு (எச்சரிக்கை மட்டும்) இல்லாவிட்டால் நபியவர்களின் அடக்கத் தலம் திறந்தவெளியில் விடப்பட்டிருக்கும். ஏனெனில், அவர்களது அடக்கத் தலம் (பிற்பாடு) வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சப்பட்டது.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு :

இபுனு அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “…அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்வாறு குறிப்பிடாமல் (எச்சரிக்காமல்) இருந்திருந்தால் …” என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 04, ஹதீஸ் எண்: 822

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏

‏أَنَّ ‏ ‏أُمَّ حَبِيبَةَ ‏ ‏وَأُمَّ سَلَمَةَ ‏ ‏ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا ‏ ‏بِالْحَبَشَةِ ‏ ‏فِيهَا تَصَاوِيرُ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ أُولَئِكِ إِذَا كَانَ فِيهِمْ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا وَصَوَّرُوا فِيهِ تِلْكِ الصُّوَرَ أُولَئِكِ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ ‏

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهُمْ تَذَاكَرُوا عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي مَرَضِهِ فَذَكَرَتْ ‏ ‏أُمُّ سَلَمَةَ ‏ ‏وَأُمُّ حَبِيبَةَ ‏ ‏كَنِيسَةً ثُمَّ ‏ ‏ذَكَرَ نَحْوَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏ ‏ذَكَرْنَ أَزْوَاجُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَنِيسَةً رَأَيْنَهَا بِأَرْضِ ‏ ‏الْحَبَشَةِ ‏ ‏يُقَالُ لَهَا ‏ ‏مَارِيَةُ ‏ ‏بِمِثْلِ حَدِيثِهِمْ ‏

அன்னையர் உம்முஹைபீபா (ரலி), உம்முஸலமா (ரலி) ஆகிய இருவரும் (முதலாவது புலப்பெயர்வின்போது) அபிஸீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தங்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிட்டால், அவருடைய சமாதியின்மீது வணக்கத் தலம் ஒன்றை நிறுவி, அதில் உருவங்களையும் வரைந்து விடுவர். அவர்கள்தாம் மறுமை நாளில் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிகத் தீயவர்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு :

ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) தம் தந்தை வழியாக அறிவிப்பதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடல் நலிவுற்று (தம் இறுதிநாட்களில்) இருந்தபோது அவர்களிடம் மக்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது உம்முஸலமா (ரலி) அவர்களும் உம்முஹபீபா (ரலி) அவர்களும் (தாங்கள் கண்ட) கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினர் …” என்று அன்னை ஆயிஷா (ரலி) தொடங்கியதாக இடம்பெற்றுள்ளது.

அபூ குரைப் (ரஹ்) வழி அறிவிப்பில், “நபித்துணைவியர் (இருவர்) அபிஸீனியாவில் தாங்கள் கண்ட ‘மாரியா’ என்று பெயர் வழங்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றிக் குறிப்பிட்டனர் …” என்று அன்னை ஆயிஷா (ரலி) தொடங்கியதாக இடம்பெற்றுள்ளது.